Pages

Subscribe:

Tuesday, July 22, 2008

பைபிளில் திருத்தல்கள், இடைச்செருகல்கள்

பைபிளில் திருத்தல்கள், இடைச்செருகல்கள்


பைபிளின் பக்கங்கள் திருத்தப்பட்டுள்ளன, பைபிளில் இடைச் செருகல்கள் உள்ளன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இன்னும் பல வசனங்களும் பைபிளுக்கு பைபிள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளன. இத்தகைய திருத்தங்களுக்கு சில சாக்குப் போக்குகளைக் கூறி பைபிள் அறிஞர்களே அதனை ஒப்புக் கொள்கின்றனர். சில மேற்கோள்கள்:

1. புதிய ஏற்பாட்டில் முதன் முதலாக எழுதப்பட் நூலாகக் கருதப்படும் மாற்கு எழுதிய சுவிசேஷம். கி.பி 64 ல் இருந்து 70 க்குள் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பைபிள் பண்டிதர்களின் கருத்து. மாற்கு எழுதிய அத்தியாயத்தில் இயேசு உயிர்த்து எழுந்ததாக உள்ள குறிப்புகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகும்.


பைபிளின் மூலப்பிரதிகாளகக் கருதப்படும் ஆரம்ப கால கையெழுத்துப் பிரதிகளாகிய கோடெக்ஸ் ஸினாய்னாட்டிகஸ் (Codex Sinaiticus) மற்றும் கோடெக்ஸ் வாட்டிகானஸ் (Codex Vaticanus) ஆகியவை. பைபிளின் மாற்கு அத்தியாயத்தின் 16 ஆம் அதிகாரம் இந்த இரண்டு பிரதிகளிலும் 8 ஆம் வசனத்துடன் முடிவடைகிறது. (Reference:The New Jerusalem Bible Page 1685 / Quoted by M.M. Akbar) அதில் இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் உள்ள சம்பவங்களையும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் புறப்பட்டு இயேசுவின் சடலத்திற்குத் தைலம் பூச முற்பட்ட போது கல்லறையின் கல் விலகியிருந்ததாகவும் அங்கு வெள்ளை நிற அங்கி அணிந்த ஒருவர் தோன்றியதைக் கண்டு பயப்பட்டதாகவும் அப்போது அவர் பயப்படவேண்டாம் இயேசு உயிராடு எழுப்பப்பட்டார் என்று கூறியதைக் கேட்டு இவர்கள் பயந்து ஒடினர் என்றும் கூறி முடித்துள்ளார் மாற்கு. ஆக புராதன கையெழுத்துக்களின் படி மாற்கு அத்தியாயம் 16 ஆம் அதிகாரம் 8 அம் வசனத்தில் அவர்கள் கல்லறையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார்கள், யாரிடமும் எதுவும் கூறவில்லை என்பதே இறுதிக் குறிப்பாக உள்ளது.

மாற்கு சுவிசேஷம் எழுதிய பின்னர் கிறித்தவ நம்பிக்கைகளில் வெகுவான மாற்றம் ஏற்பட்டது. இயேசு இறந்த பின் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது. இந்த நம்பிக்கைக்கு ஒரு அடிப்படையாக மாற்குடைய பெயரில் கூடுதலாக 12 வசனங்கள் பைபிளில் சேர்க்கப்பட்டன. மாற்குடைய சுவிசேஷத்தை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்கே உரிய பாணியில் சுவிசேஷம் எழுதிய மத்தேயுவும் லூக்காவும் இயேசு உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் சீடர்களுக்கு வெளிப்பட்டார் என்ற கதையையும் சேர்த்து எழுதியுள்ளனர். இரண்டு எழுத்தாளர்களும் குறிப்பிட்டுள்ள அந்த கதையில் காணப்படும் ஏராளமான முரண்பாடுகள் அவை புனையப்பட்டது என்பதற்கான வலுவான சான்றாக உள்ளது.


மாற்கு அத்தியாயத்தில் சேர்க்கப்பட்ட வரிகள் அதன் ஆரம்ப வசனங்களின் போக்குடன் மாறுபடுவதாக உள்ளது. பின்னாளில் அது சேர்க்கப்பட்டது என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாகும். தி நியூ ஜெரோம் பைபிள் விளக்கக் குறிப்பு இவ்வாறு கூறுகிறறது.

''மாற்கு பதினாறாம் அதிகாரத்தின் 9 முதல் 20 வரை உள்ள வசனங்கள் அதன் நடையிலும் விவரணத்திலும் இவ்வத்தியாயத்தின் மற்ற பாகங்களிலிருந்து மாறுபட்டதாக உள்ளது. நமக்குக் கிடைத்துள்ள புராதன கையெழுத்துப் பிரதிகளில் இவை காணப்படவில்லை. லூக்கா 24 மற்றும் யோவான் 20 ஆம் அத்தியாயங்களைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்தப் பகுதியில் உள்ள கதைகள் இரண்டாம் நூற்றாண்டில் இவ்வத்தியாயத்துடன் சேர்க்கப்பட்டிருக்கலாம்''

The New Jerome Biblical Commentary Page 629
Quoted by MM Akbar (The Authenticity of Bible, Page 224)

புனித நூல்கள் என்று தாங்கள் கருதியவற்றில் திருத்தங்களை ஏற்படுத்தும் இயல்பு ஆரம்ப காலம் முதலே யூத கிறித்தவர்களின் நடைமுறையாக இருந்தது என்பதை மாற்கு அத்தியாயத்தில் புரோகிதர்கள் நடத்திய கையாடல் புலப்படுத்துகிறது. தாங்கள் உருவாக்கிய நம்பிக்கையின் அடிப்படையில் கைவசம் உள்ள நூலில் வசதிக்கேற்ப மாற்றம் செய்துள்ளனர். புராதன கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்தால் ஏராளமான இடைச் செருகல்கள் இன்னும் புலப்படலாம்.

2 comments:

முஸ்லிம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரர் அபூ அப்துர்ரஹ்மான் நீங்கள் எழுதிவரும் சரித்திர ஆவணங்கள் வியப்பின் விளிம்புக்குக் கொண்டு செல்கிறது. முந்திய வேதங்களில் இடைச் செருகலும் நீக்கமும் நடந்திருக்கிறது என்பதை பொதுவாக குர்ஆன் சுன்னா வாயிலாக அறிந்திருந்தோம். நீங்கள் அளிக்கும் விபரங்கள் மேலும் வியப்பாக உள்ளது.

தொடர்ந்து எழுதுங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

அன்புடன்
- முஸ்லிம்

Unknown said...

Assalamu alaikkum....Jerry thomas pulukum puluku mootaiai velicchathuku kondu vaarungal