Pages

Subscribe:

Monday, July 28, 2008

தண்ணீரிலும் திரித்துவம்!

திரித்துவம் எனும் மாயை - தொடர் 3

தண்ணீருக்கு திடம், திரவம், வாயு (H2O) என்று மூன்று நிலைகள் உள்ளன. இது போன்று இறைவனுக்கும் மூன்று பரிமாணங்கள் உண்டு என்று கிறித்தவ சபை திரித்துவத்துக்கு வியாக்கியானம் கூறுகிறது. இவ்வாறு மூன்று நிலைகளைக் கொண்ட பொருள்களுக்கு திரித்துவ வியாக்கியானம் கூறி திரித்துவம் என்னும் மாயையை நியாயம் கற்பிக்க முற்படுவது சபையின் வழக்கம். திரித்துவம் என்னும் புரியாத புதிரில் புதையுண்டிருக்கும் சாதாரண கிறித்தவனுக்கு இந்த வியாக்கியானங்கள் சற்று ஆறுதலை அளிக்கலாம். ஆனால் இதில் உள்ள விபரீதம் திரித்துவத்தைப் பற்றிய குழப்பங்களை இன்னும் அதிகரிக்கிறது என்பதை சபை அறியாமலிருக்கிறது.
தண்ணீரில் திட திரவ வாயு என மூன்று நிலைகள் உள்ளது போல் இறைவன் மூன்றில் ஒருவனாக இருக்கிறான் என்று வாதிடுபவர்களிடம் சில கேள்விகள். தண்ணீரை ஐஸ் கட்டியாக மாற்ற இயலும். தண்ணீர் நீராவியாக மாறும். இவ்வாறு மாறும் போது தண்ணீரின் ஒரு நிலை மாறி மற்றொரு நிலையாகி விடுகிறது. இது போல பிதாவை புத்திரனாகவும் புத்திரனை பிதாவாகவும் பரிசுத்த ஆவியை பிதாவும் புத்திரனும் ஆக மாற்றியமைக்க முடியுமா? தண்ணீரை அவ்வாறு மாற்றுவதற்கு சில வழிமுறைகள் கையாளப் படுவதைப்போல் இதற்கு எந்த வழிமுறை கையாளப்படுகிறது? தண்ணீர் ஐஸ்கட்டியாக மாறும் போதும் வாயுவாக மாறும் போதும் தண்ணீராக இருப்பதில்லை. தன் துன்பத்தை நீக்க பிதாவிடம் வேண்டிக் கொண்ட போது பிதாவும் புத்திரனும் வேறுபடுகின்றனர். பிதா புத்திரனாகவும் புத்திரன் பிதாவாகவும் பரிசுத்த ஆவி பிதாவும் புத்திரனுமாகவும் மாறுபடுதில்லை. அவ்வாறு மாற்றுவதற்கு ஏதேனும் வழி இருந்தால் கண்டு பிடியுங்களேன்.

தொடர்கிறது....

0 comments: