திரு.சுஜாதா ரங்கராஜன்
பிரச்னை குர்ஆனில்
இல்லை; நம்மிடம்தான்
இஸ்லாம் என்பதற்குக்
கீழ்ப்படிதல்,கட்டளைகளை நிறைவேற்றுதல்
என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை
உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
அண்ணல் குகையில் இருந்து
வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும்
பிரமிக்க வைக்கும்.
சிலைகள் உதவாதவை.
அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு,
கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும்
படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து,
அவனையே தொழுங்கள்!’
தற்பெருமை,
கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக்
கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார்
பெருமகனார்.
கம்பீரம்,
நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது,
நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக்
கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில்
இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில்
இல்லை. நம்மிடம்தான்.
திறந்த மனதுடன் அதைப்
படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த
என் தந்தையார் தீவிர வைணவர்.”
சுஜாதா (தினமணி ரம்ஜான்
மலர் – 2003)
0 comments:
Post a Comment