Pages

Subscribe:

Monday, July 28, 2008

தண்ணீரிலும் திரித்துவம்!

திரித்துவம் எனும் மாயை - தொடர் 3

தண்ணீருக்கு திடம், திரவம், வாயு (H2O) என்று மூன்று நிலைகள் உள்ளன. இது போன்று இறைவனுக்கும் மூன்று பரிமாணங்கள் உண்டு என்று கிறித்தவ சபை திரித்துவத்துக்கு வியாக்கியானம் கூறுகிறது. இவ்வாறு மூன்று நிலைகளைக் கொண்ட பொருள்களுக்கு திரித்துவ வியாக்கியானம் கூறி திரித்துவம் என்னும் மாயையை நியாயம் கற்பிக்க முற்படுவது சபையின் வழக்கம். திரித்துவம் என்னும் புரியாத புதிரில் புதையுண்டிருக்கும் சாதாரண கிறித்தவனுக்கு இந்த வியாக்கியானங்கள் சற்று ஆறுதலை அளிக்கலாம். ஆனால் இதில் உள்ள விபரீதம் திரித்துவத்தைப் பற்றிய குழப்பங்களை இன்னும் அதிகரிக்கிறது என்பதை சபை அறியாமலிருக்கிறது.

Tuesday, July 22, 2008

பைபிளில் திருத்தல்கள், இடைச்செருகல்கள்

பைபிளில் திருத்தல்கள், இடைச்செருகல்கள்


பைபிளின் பக்கங்கள் திருத்தப்பட்டுள்ளன, பைபிளில் இடைச் செருகல்கள் உள்ளன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இன்னும் பல வசனங்களும் பைபிளுக்கு பைபிள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளன. இத்தகைய திருத்தங்களுக்கு சில சாக்குப் போக்குகளைக் கூறி பைபிள் அறிஞர்களே அதனை ஒப்புக் கொள்கின்றனர். சில மேற்கோள்கள்:

1. புதிய ஏற்பாட்டில் முதன் முதலாக எழுதப்பட் நூலாகக் கருதப்படும் மாற்கு எழுதிய சுவிசேஷம். கி.பி 64 ல் இருந்து 70 க்குள் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பைபிள் பண்டிதர்களின் கருத்து. மாற்கு எழுதிய அத்தியாயத்தில் இயேசு உயிர்த்து எழுந்ததாக உள்ள குறிப்புகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகும்.

Sunday, July 20, 2008

திரித்துவமும் பெருக்கல் வாய்ப்பாடும்.

திரித்துவம் ஒரு மாயை - தொடர் - 2


கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் வாய்ப்பாடுகளை பள்ளிப் பருவத்தில் பயின்றிருக்கிறோம். திரித்துவத்துக்கும் இந்த வாய்ப்பாடுகளுக்கும் என்ன சம்மந்தம்?

திரித்துவம் பற்றி எழும் கேள்விகளை சமாளிக்க கிறித்தவ சபைகள் கூறிவரும் பல்வேறு காரணங்களுள் ஒன்றே இந்த பெருக்கல் கணக்கு. பைபிளின் அடிப்படையில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மூன்று தனித்தன்மைகளைக் கொண்ட மூவர்! அப்படியானால் 1 + 1 + 1 = 3 அல்லவா? எப்படி ஒன்றாகும்? என்ற கேள்விக்கு கிறித்தவ சபை அளித்த விடை. 1 x 1 x 1 = 1 என்பதாகும்.

Thursday, July 10, 2008

ஒரு புனிதரின் கதை!

 
புனிதர் திரித்துவத்தின் பொருள் தேடிப் பயணித்தார். காடு மலை மேடு பள்ளங்கள் கடந்த நெடும் பயணம். இறுதியாக ஒரு கடலோரமாகப் பயணித்துக் கொண்டிருக்கையில் அங்கே ஒரு சிறுவன் மணற் கூடாரத்தை அமைத்து அதன் மேல் ஒரு துவாரமிட்டு கடல் நீரைக் கைகளில் மொண்டு அதில் உற்றிக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்த புனிதர், சிறுவனே என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்? என்று சிறுவனிடம் கேட்கிறார், ஐயா நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் இந்த மணற் கூண்டில் நிறைக்கப் போகிறேன் என்றான் சிறுவன். ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்திய புனிதர் சிறுவனே! இது என்ன முட்டாள் தனம்? இந்த மகா சமுத்திரத்தின் நீர் முழுவதையும் இந்த மணல் கூண்டில் நிறைப்பதா? உனக்கு அறிவில்லையா? என்று கேட்கிறார். சிறுவன் நிதானமாகக் கூறினான். ஐயா பெரியவரே! தாங்கள் பொருள் தேடிச் செல்லும் காரியம் இதைவிடக் கடுமையானது! புனிதர் இப்போது தன் நிலை பற்றி சிந்தித்த வண்ணம் வந்த வழியே திரும்புகிறார்.

Thursday, July 3, 2008

கிறிஸ்தவத்தை விட்டு இஸ்லாமைத் தழுவிய மாபெரும் மன்னர்

அன்று அபிஸீனிய மன்னராக இருந்தவர் நஜ்ஜாஷி. இந்த நஜ்ஜாஷியின் பெயர் ‘அஸ்ஹமா இப்னு அல்அப்ஜர்' ஆகும். ஹிஜ்ரி 6ன் கடைசியில் அல்லது ஹிஜ்ரி 7. முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமய்யா (ரழி) மூலம் இவருக்காக கடிதமொன்றை நபி (ஸல்) அவர்கள் எழுதி அனுப்பினார்கள். நபியவர்கள் நஜ்ஜாஷிக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷிக்கு எழுதும் கடிதம். நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நிச்சயமாக நான் உமக்கு முன்பாக அல்லாஹ்வைப் புகழ்கிறேன்.