Pages

Subscribe:

Friday, December 14, 2012

கிறிஸ்துமசும் முஸ்லிம்களும்!

வ்வொரு வருடமும் டிஸம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு கிறிஸ்து அன்று பிறந்ததாகவும் அவர்கள் நம்புகின்றனர். அவர்களோடு நட்பு கொண்ட பிற மதத்தவரும் அவர்களுக்கு அந்நாளில் வாழ்த்து கூறுகின்றனர். அவர்களால் அன்றைய தினம் சிறப்பாக தயாரிக்கப்படும் இனிப்புகளையும் உணவுகளையும் வாங்கி புசித்து மகிழ்கின்றனர்.  பல முஸ்லிம்களும் கிறிஸ்தவ அன்பர்களுடன் நெருங்கிப் பழகியும் அன்பு பாராட்டியும் கலந்துறவாடியும் வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸின் போது அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான எளியதொரு வழிகாட்டுதலே இக்கட்டுரை!

Monday, November 5, 2012

குர்ஆனில் கணிதத் தவறுகள் இருக்கிறதா?

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:
 
கேள்வி எண்: 34
 
பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்கு வகைகள் இருக்கின்றன. குர்ஆனில் உள்ள நான்காவது அத்தியாத்தின் 11ஆம் மற்றும் 12 ஆம் வசனத்தின்படி வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் – பிரித்துக் கொடுக்கப்படக் கூடிய சொத்து ஒன்றுக்கும் மேற்பட்டதாக வருகிறது. எனவே குர்ஆனை அருளியவருக்கு கணக்குத் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

Sunday, November 4, 2012

பரிசுத்த வேதாகமம் இறை ஆகமமா?

வ்வுலகில் வேதங்கள் என்று சொல்லப்படும் பல நூல்கள் உள்ளன. ஆனால் அவை அத்தனையும் இறை நூல்கள் என்ற அந்தஸ்தைப் பெற முடியுமா? மக்களுக்கு நல்லுபதேசம் வழங்கும் நூல்களும் மறை அல்லது வேதம் என்ற நிலையில் வைத்துப் பார்க்கப் படுகின்றன. குர்ஆனை இஸ்லாமியர்கள் வேதம் என்று நம்புகின்றனர். அல்லாஹ் என்று சொல்லக் கூடிய அந்த வல்லமை மிக்க இறைவன் நேரடியாகப் பேசும் வசனங்கள் அதில் உள்ளன.  இவ்வுலகில் பல்வேறு சமுதாயத்தவரால் வேதங்கள் என்று சொல்லப்படும் எந்த நூல்களும் குர்ஆனின் இறைதன்மையைப் பெற்றிருக்கவில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மையாகும். அவற்றின் தொனி ஒரு கதை சொல்லும் பாங்கில் அல்லது உபதேசங்களின் ஒரு தொகுப்பு என்ற தகைமையோடு மட்டும் நின்று விடுகின்றன.

Thursday, May 17, 2012

சிலுவை வடுவும் விக்கி பீடியாவும்

Selvarajon

நண்பரே இதற்கு ஏதேனும் விளக்கம் தரமுடியுமா?


செல்வராஜ் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இயேசுவைப் பாவியாக்குவது குர்ஆனா? பைபிளா?

கேள்வி:

அன்பு நண்பரே! இயேசுவின் வேண்டுதலைக் கேட்காதபடியால் அவர் பாவியென கருதலாம் என கூறியுள்ளீர்கள். இங்கே நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன். அதாவது நீங்கள் கடவுளால் அருளப்பட்ட இறைவேதம் என நம்புகிற உங்களது குரானஈஸா நபியைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை நம்புவீர்களா?

1.
பரிசுத்த ஆன்மாரவைக் கொண்டு வலூவூட்டப்பட்டார் இயேசு- நபி (ஈஸா) என கூறும் குரான்.முகம்மது நபி அவர்களைப் பற்றி அப்படி குரானில் எங்காவது கூறப்படவில்லையே. இதைச் சொல்பவர்களைிடம் கர்வம் கொண்டு புறக்கணிப்பதும், கொலை செய்வதும் இஸ்லாமியர் செய்யும் தவறு என குரானே கூறுவதை ஏற்றுக் கொள்வீரா?

Saturday, May 5, 2012

கிறிஸ்தவம் ஒரு வரலாற்றுப் பார்வை!

உலகின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதம் கிறிஸ்தவம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இரண்டும் சிலுவைக் கொள்கையில் எதிரும் புதிருமாக உள்ளது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மெய்ப்படுத்தும் வரிகள் பைபிளில் உண்டு.  பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் போதனையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனையும் ஒன்றுதான். இயேசு போதித்ததை முஹம்மது நபி (ஸல்) அவர்களும் போதிக்கிறார். அப்படியெனில் எங்கு முரண்பாடு? எதில் முரண்பாடு? ஏன் முரண்பாடு? இஸ்லாம் மட்டும் தான் உண்மை மதமா?  உலகில் ஒரு பெரும்பான்மைச் சமுதாயம் சிலுவைக் கொள்கையை தம் இரட்சிப்பின்  வழியாக நம்பிக்கொண்டிருக்க அது பொய் என்று இறைவன் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அறிவித்தாரா? அப்படியானால் அதற்கு முன்னர் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்த மக்களின் நிலை?

மேற்கண்ட கேள்விகள் பொதுவாக கிறிஸ்தவர்களாலும் கிறிஸ்தவ மத்திலிருந்து இஸ்லாமை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் சிலரது மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் சந்தேகங்கள். இதனையே அடிப்படையாகக் கொண்டு ஒரு கிறிஸ்தவர் பதிவு செய்த கேள்வியும் ஆய்வு மற்றும் மூல ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான விரிவான பதிலையும் கீழே கொடுத்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பான சந்தேகங்களுக்கு இதிலிருந்து தீர்வு கிடைக்கலாம்.