Pages

Subscribe:

Monday, September 15, 2008

பைபிள் - ஓரு விரிவான அலசல் - 2

பைபிளில் உள்ளவை இறைவசனங்கள் என்று கிறித்தவர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அது எவ்வாறு அருளப்பட்டது எனபது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் முதலாவது பைபிளில் உள்ள ஒவ்வொரு வசனங்களும் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்ப்டடது என்பதாகும். பைபிளின் ஒரு வார்த்தையிலும் தவறு இல்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய நமபிக்கையின் காரணமாகத்தான் பைபிளின் கருத்துக்களுக்கு எதிரான தனது அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்ட கலீலியோவுக்கு கிறித்தவ சபை தண்டனை வழங்கியது.

Sunday, September 14, 2008

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)!

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)!

நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், ‘ஒருவர்’ தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், ‘கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்’ (Triune God) என்று கூறுவார்கள்.

கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற ‘திரித்துவம்’ (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும்.

Friday, September 12, 2008

பைபிள் - ஓரு விரிவான அலசல்

பைபிள் - ஓரு விரிவான அலசல்
(Reference : Bibilinte Daivikatha by MM Akbar in Malayalam)


பிப்ளியா (biblia) என்ற கிரேக்க மற்றும் லத்தீன் மூலப் பதத்திலிருந்து உருவானது பைபிள் (bible) என்ற வார்த்தை. புத்தகங்கள் என்பது இதன் பொருளாகும். புராதன் பிரெஞ்சு மொழியிலிருந்து இது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. பிப்ளியா என்பது பன்மை வார்த்தையாகும். இதன் ஒருமை பிப்ளியோன் (biblion) என்பதாகும்.

புத்தகங்கள் என்று மட்டும் பொருள் கொண்ட பைபிளுக்கு கிறித்தவ வேத புத்தகம் என்ற அடிப்படைப் பெயரை வழங்கியவர் அன்றைய கான்ஸ்டான்டிநோபிளின் மதத் தலைவராக இருந்த ஜாண் கிரிஸோஸ்டமான் (392-404) என்பவர் என்று நம்பப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரே முதன் முதலில் பைபிள் என்ற பெயரை வழங்கியவர் என்ற கருத்தும் நிலவுகிறது.