Pages

Subscribe:

Thursday, July 10, 2008

ஒரு புனிதரின் கதை!

 
புனிதர் திரித்துவத்தின் பொருள் தேடிப் பயணித்தார். காடு மலை மேடு பள்ளங்கள் கடந்த நெடும் பயணம். இறுதியாக ஒரு கடலோரமாகப் பயணித்துக் கொண்டிருக்கையில் அங்கே ஒரு சிறுவன் மணற் கூடாரத்தை அமைத்து அதன் மேல் ஒரு துவாரமிட்டு கடல் நீரைக் கைகளில் மொண்டு அதில் உற்றிக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்த புனிதர், சிறுவனே என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்? என்று சிறுவனிடம் கேட்கிறார், ஐயா நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் இந்த மணற் கூண்டில் நிறைக்கப் போகிறேன் என்றான் சிறுவன். ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்திய புனிதர் சிறுவனே! இது என்ன முட்டாள் தனம்? இந்த மகா சமுத்திரத்தின் நீர் முழுவதையும் இந்த மணல் கூண்டில் நிறைப்பதா? உனக்கு அறிவில்லையா? என்று கேட்கிறார். சிறுவன் நிதானமாகக் கூறினான். ஐயா பெரியவரே! தாங்கள் பொருள் தேடிச் செல்லும் காரியம் இதைவிடக் கடுமையானது! புனிதர் இப்போது தன் நிலை பற்றி சிந்தித்த வண்ணம் வந்த வழியே திரும்புகிறார்.

திரித்துவம் என்ற புரியாத தத்துவத்தைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பும்படி ஒவ்வொரு கிறித்தவனும் பணிக்கப் பட்டுள்ளான்! அது பற்றிக் கேள்வி எழுப்புதல் கிறித்தவ விசுவாசத்துக்கு உகந்ததல்ல. மூன்றாம் நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற கிறித்தவப் பண்டிதரும் தத்துவ ஞானியுமாகிய புனித அகஸ்டின் திரித்துவம் குறித்து எழுதியதாவது,
''எனக்கு முன்னால் எழுதிய என்னால் படிக்க முடிந்த நூல்களின் ஆசிரியர்களும் பழய மற்றும் புதிய ஏற்பாடுகளின் கத்தோலிக்க விரிவுரையாளர்கள் அனைவருமே பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆகியோர் கடவுளுக்குள் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்னும் பிரிக்க முடியாத ஒற்றுமையிலேயே அவர்களின் உள்ளமை இருக்கிறது என்பதைத் தெளிவு படுத்தியுள்ளனர். எனினும் அவர்கள் மூன்று பேர் அல்ல, ஒன்று தான். இருப்பினும் பிதா என்பவர் புத்திரனைப் பிறக்கச் செய்ததால் பிதா புத்திரனாக ஆகமாட்டார். புத்திரனோ பிதாவினால் ஜென்மம் நல்கப்பட்டதால் பிதாவாகவும் மாட்டார். பரிசுத்த ஆவியானது பிதாவும் அன்று புத்திரனும் அன்று! ''


இன்னும் கூறியுள்ளதாவது,
இது கத்தோலிக்க நம்பிக்கையாக இருப்பதுடன் இதுவே என்னுடையவும் நம்பிக்கை ஆகும். இவ்வாறு எழுதியுள்ளார்.


(Saint Augustine: Basic writings edited by Whitne – J – Oates (New York, 1948) Volume 2, Page 672) Quoted by Mohammed Taqi Usmani : “What is Christianity” Page 3.


பிதா புத்திரன் பரிசுத்த ஆவி என்ற முக்கடவுள்களைக் கொண்ட திரித்துவ மாயை மனித அறிவுக்குப் புரியாத புதிராக இருப்பதால் தானோ என்னவோ அதனைக் குறித்து கத்தோலிக்க நம்பிக்கை என்பதுடன் என்னுடையவும் நம்பிக்கை என்று குறிப்பிட்டுள்ளார் போலும்! மூன்று பேர்! மூன்று செயல்பாடுகள்! மூன்று உள்ளமைகள்! ஒருவர் மற்றவருடன் உரையாடுகின்றார்! ஒருவர் மற்றவருக்கு உதவுகிறார்! ஒருவர் மற்றவரோடு உதவி கோருகிறார்! எனினும் மூன்றும் ஒன்று என்று நம்ப வேண்டுமாம்! காரணம் அது கத்தோலிக்க நம்பிக்கையாம்! என்னே முரண்பாடு! மனித சிந்தனைக்குச் சவாலாக இருக்கக் கூடிய இத்தகைய சித்தாந்தத்தை தன்னனகத்தே கொண்டதால் தானோ முன்னர் அறிவியலுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் எதிராகக் கிறித்தவ சபைகள் களமிறங்கியதோ? திரித்துவக் கொள்கைக்கு நியாயம் கற்பித்து கிறித்தவ சபை அளிக்கும் ஒவ்வொரு விளக்கமும் அதிக குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. புனித அதனாசியஸ் என்பவர் அளிக்கும் விளக்கத்தைப் பாருங்களேன்.


''உண்மையான இறைவன் ஒருவன் மட்டுமே. அவன் அழியாதவனும், மாம்சமில்லாதவனும், உறுப்புகளோ உணர்ச்சி வயப்படுதலோ அற்றவனாகவும் நிலையான சக்தியும் ஞானமும் மிக்கவனாகவும் பார்வைக்குப் புலப்படுவதும் அல்லாததுமான எல்லாப் பொருட்களின் படைப்பாளனாகவும் அவற்றைக் காப்பவனுமாகவும் இருக்கிறான். இறை உள்ளமையின் இத்தகைய ஏகத்துவத்துவம் என்பது மூன்று பேர்களை உள்ளடக்கியதாகும். பிதா, புத்திரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் கொண்ட அழியாத ஏக சக்தியே அது.''


Art 1 of the 39 Articles. Quoted by W.St. Clair Tisdall: “Christian Reply to Muslim Objections” Page 150.
அழியாதவன்! என்றென்றும் நிலைத்திருப்பவன்! உறுப்புகளோ உணர்ச்சி வயப்படுதலோ அற்றவன்! இப்படியெல்லாம் இவர்களால் வர்ணிக்கப்பட்ட இறைவன் மூன்று பேர்களாக மாறும்போது இந்த அடிப்படைகளையெல்லாம் இழக்க நேரிடுவதை ஏனோ அறியாமலிருக்கின்றனர். மூன்று பேரில் இரண்டாவதாக இவர்கள் கூறும் புத்திரனுக்கு உடலும் உறுப்புகளும் உணர்ச்சிகளும் இருந்தது என்று பைபிள்தான் கூறுகிறது. இப்படி அநேகம் முரண்பாடுகள். இத்தகைய முரண்பாடுகளை முகமூடியிட்டு மறைக்கவே கிறித்தவ சபைகள் மேலே கூறப்பட்ட கதையை உதாரணமாகக் கூறி வருகின்றன.

0 comments: