Pages

Subscribe:

Thursday, May 17, 2012

இயேசுவைப் பாவியாக்குவது குர்ஆனா? பைபிளா?

கேள்வி:

அன்பு நண்பரே! இயேசுவின் வேண்டுதலைக் கேட்காதபடியால் அவர் பாவியென கருதலாம் என கூறியுள்ளீர்கள். இங்கே நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன். அதாவது நீங்கள் கடவுளால் அருளப்பட்ட இறைவேதம் என நம்புகிற உங்களது குரானஈஸா நபியைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை நம்புவீர்களா?

1.
பரிசுத்த ஆன்மாரவைக் கொண்டு வலூவூட்டப்பட்டார் இயேசு- நபி (ஈஸா) என கூறும் குரான்.முகம்மது நபி அவர்களைப் பற்றி அப்படி குரானில் எங்காவது கூறப்படவில்லையே. இதைச் சொல்பவர்களைிடம் கர்வம் கொண்டு புறக்கணிப்பதும், கொலை செய்வதும் இஸ்லாமியர் செய்யும் தவறு என குரானே கூறுவதை ஏற்றுக் கொள்வீரா?




குரான் வசனம் இதோ!

2:87. …
இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.

2.நபிமார்களிடையே வேறுபாடு காட்டக்கூடாது என்றும் ஈஸா நபி கொண்டு வந்த வேதத்தை நம்ப வேண்டும். நம்புகிறோம் என அல்லாவிடம் வாக்குறுதி தரவேண்டிய நீங்கள், குரான் கூறுவதை ஏற்று ஈஸா நபியை மட்டும் இப்பழி பழித்துக் கூறினால் குரானின் வசனங்களுக்கு விரோதமாக செயல்படுவதாகத்தானே அர்த்தம்.

குரான் வசனம் இதோ!

2:136. (
முஃமின்களே!)நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்என்று கூறுவீர்களாக.

3. இயேசு கண்ணியமிக்கவர், தூய்மையானவர், இறைவனுக்கு நெருங்கியிருப்பவர்,என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன் என குரானில் அல்லாவே ஈஸாநபியை உயர்வாக தனக்கு நிகரானவராக குரான் கூறுகிறது. முகம்மது நபி பற்றி குரானில் எங்கும் அப்படி கூறவில்லையே?



குரான் வசனம் இதோ!

3:45.
மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;

குரான் சொல்கிறபடி கண்ணியமிக்க இயேசுவை இப்படி பாவி எனக் கூறி குரானுக்கு விரோதமாகப் பேசலாமா? நீங்கள் பைபிளை நம்புகிறீர்களோ இல்லையோ! குரானை நம்புவது உண்மையாக இருந்தால் இப்படி குரானின் சட்டத்திற்கு விரோதமாக பேசுவதும்,எழுதுவதும் அல்லா கூறியபடி நரகத்தற்குதானே உங்களை கொண்டு செல்லும். அந்த மேன்மைக்குரிய ஈஸா நபியைக் குறைவாகப் பேசுவதும் எழுதுவதும் குரானின் வசனங்களையே நீங்கள் நம்பவில்லை என்பதும்,ஏதோ இயேசுவுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் விரோதமாக ஏதாவது செய்துவிட வேண்டும் என எண்ணி குரான் கூறுகிறபடி நீங்கள் கர்வமிக்கவராக இருப்பதாகத்தானே அர்த்தமாகும் எனவே உண்மையை நிதானமாக ஆராங்ந்து பொறுமையாக எது உண்மையோ அதனை கடைபிடிக்கும்படி, பகைவர்களையும் நேசிக்கும் அன்புள்ளம் கொண்ட ஆண்டவர் இயேசுவின் இனிய நாமத்தில் வேண்டுகிறேன்.இன்னும் அநேக விளக்கங்களை குரானிலிருந்தே காண முடியும் மிண்டும் சந்திப்போம்.smilekutty@hotmail.com

பதில்:
1.    நண்பர் ஸ்மைல் அவர்களுக்கு,
எமது கட்டுரையை நீர் புரிந்து முழுமையாகப் படிக்கவில்லை என்று கருதுகிறேன். இயேசுவைப் பாவிஎன்றும் அவரது வேண்டுதலை இறைவன் ஏற்கவில்லை நாங்கள் குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிடவும் மாட்டோம். அது எமது நம்பிக்கைக்கு எதிரானது. பைபிள் கூறும் சிலுவைக் கதைகள் அவரைப் பாவியாகக் கருத இடமளிக்கின்றன என்ற செய்தியைத்தான் சுட்டிக் காட்டினேன்.
"பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்" (யோவான்: 9:31) என்று சொன்னதன் மூலம் பிதாவே! என்று கவலைப்பட்டு அவர் வேண்டியும் ஏற்றுக் கொள்ளப்படாமல் அவர் சிலுவையில் அடிக்கப்பட்டார் என்பது எமது நம்பிக்கை அல்ல. பைபிளின் எழுத்தர்கள்தான் அப்படி எழுதி வைத்துள்ளனர்.
அத்துடன் சிலுவையில் அடிக்கப்பட்டவன் கடவுளின் சாபத்துக்குரியவன் என்று கூறி (உபாகமம் 21:23) அந்த வகையில் இயேசுவும் சாபத்துக்குரிவர் ஆனார் என்று பவுல்தான் அவரை இழிவு படுத்துகிறாரே ஒழிய முஸ்லிம்களாகிய நாங்கள் அல்ல.
இயேசு என்ற ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை மதிப்பதிலும் கண்ணியப்படுத்துவதிலும் கிறிஸ்தவர்களைவிட நாங்கள் அதிகம் உரிமைப்பட்டவர்களும் கடமைப்பட்டவர்களும் ஆவோம். உண்மையைச் சொல்லவேண்டுமெனில் கிறிஸ்தவர்கள் செய்வதைப் போல அவரை கண்ணியம் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இழிவு படுத்தவில்லை. ஒர் இறைதூதருக்கு எத்தகைய கண்ணியம் வழங்க வேண்டுமோ அவ்வளவு கண்ணியத்தையும் அவருக்கு வழங்குகின்றோம். ஓர் இறைதூதரை எப்படி நேசிக்க வேண்டுமோ அப்படி அவரை நேசிக்கின்றோம். அவரி்ன் உபதேசங்களை, வழிகாட்டுதல்களை அப்படியே பின்பற்றுகின்றோம். அவருக்குப் பின்னால் வந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றிச் சொன்ன உண்மைகளை அப்படியே ஏற்றுக் கொள்கின்றோம்.
அவர் அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ்வுடைய வார்த்தையால் உருவானவர்.. அதை அவன் மர்யமின் மேல் போட்டான். அவரைப் பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு வலுவூட்டினான்.
அவர் மூலம் அல்லாஹ் இஸ்ரவேலர்களுக்கு நேர்வழி காட்டினான். அவர் களிமண்ணால் பறவையின் உருவத்தைச் செய்து அதில் ஊதியபோது அது அல்லாஹ்வின் அனுமதியோடு உயிருள்ள பறவையானது. பிறவிக் குருடர்களையும் தொழு நோயாளிகளையும் அல்லாஹ்வின் அனுமதிப்படி அவர் குணமடையச் செய்தார். மரணித்தவர்களை அல்லாஹ்வின் அனுமதிப்படி உயர்பெற்றெழச் செய்தார். மக்கள் தங்கள் வீடுகளில் மறைத்து மறைத்து வைத்திருப்பதை அவர்களுக்குச் சொல்லிக் காட்டினார். பின்னரும் தனக்குப் பின்னர் ஓர் இறைதூதரைக் குறித்தும் நற்செய்தி சொன்னார். யுக முடிவு நாளில் அவர் வெளிப்பட்டு வருவார். சிலுவைகளை உடைத்தெறிவார்.
ஆனால் இத்தகைய தெளிவான சான்றுகள் அவரைப்பற்றி சொல்லப்பட்ட பின்னரும் யூதர்கள் அவரை இழிவு படுத்தி உருவாக்கிய சிலுவைக் கொள்கையை நம்பி அவரைக் கடவுளெனக் கருதி அவரையும் அவரது தாயையும் அகில உலகங்களையும் படைத்த இறைவனுக்கு இணை வைத்து நன்றி கொன்று வழிகேட்டின் அதலபாதாளத்தில் கிறிஸ்தவ பெருமக்கள் சென்று கொண்டிருப்பது எவ்வளவு கைசேதமானது?!
யுக முடிவு நாளில் அவர் வெளிப்பட்டு வருவார். சிலுவைகளை உடைத்தெறிவார். இது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதை அப்படியே நம்புகின்றோம். இரண்டும் இரண்டும் நான்கு என்பதில் உங்களுக்கு எப்படி சந்தேகம் வராதோ அது போல இதில் சிறிதளவும் எங்களுக்கு சந்தேகம் இல்லை.
டுத்ததாக சில குர்ஆன் இயேசுவைப் பற்றி இன்னின்னவாறு சொல்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்! உம்மிடம் ஒரு கேள்வி. முதலில் குர்ஆனை இறைவேதம் என்று நீர் ஏற்றுக் கொள்கிறீரா? இயேசுவைப் பற்றி குர்ஆன் கூறுவது அத்தனையும் உண்மை என்று நாங்கள் நம்புகின்றோம். அதுபோலவே நீர் நம்புகின்றீரா? குர்ஆன் வசனங்களைக் கூறி எங்களை உபதேசித்து பைபிளின் முரண்பாடுகளை அடையாளப் படுத்துவதிலிருந்து எங்களை திசை திருப்ப முயற்சிக்கும் நீங்கள், இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை குர்ஆன் என்று சொல்கிறதே! அதை ஏற்றுக் கொள்வீர்களா?
யேசுவின் சிலுவை மரணம் குறித்து பைபிள் தரும் முன்னுக்குப் பின் முரண்பட்ட செய்திகளும் எழுத்தர்களிடம் இது விசயத்தில் காணப்பட்ட முரண்பாடுகளும் நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு அதுபற்றிய (உண்மையான) எந்த அறிவும் இல்லை. என்ற குர்ஆன் (4:157) வசனத்தை மெய்ப்படுத்துவதாக உள்ளது. குழப்பங்களை விட்டொழித்து இந்த உண்மையின் பக்கம் நீங்கள் திரும்பினால் அது உங்கள் பரலோக வெற்றிக்கு வழி செய்யும். மேலும் இது தொடர்பான விரிவான பதிவைப் பார்வையிடுக.
http://christianpaarvai.blogspot.com/2012/05/blog-post.html
அன்புடன்
தேங்கை முனீப்

0 comments: