யூசா இவான்ஸ் : அறிமுகம்:
குர்ஆன் இறை வேதம்! உலக மக்களுக்காக இறைவனிடமிருந்து இறங்கிய இறுதி வேதம்! எவருக்கு அல்லாஹ் நாடுகிறானோ, எவர் சத்தியத்தைத் தேடுகிறாரோ அவருக்கு அது வழிகாட்டி. குர்ஆனைப் பற்றிய தப்புப் பிரச்சாரங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி அது சிரத்தில் ஒளிரும் விளக்காய், இருளில் உழலும் மனிதர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாய்த் திகழும் அருளுக்குரிய இறை வேதம். சாத்தானின் அசரீரிகளைப் பற்றி கதையளந்து சாட்சிகளை முன் வைக்கும் கிறிஸ்தவமே வியந்து பார்க்கும் அளவுக்கு இஸ்லாமை நோக்கி கிறிஸ்தவர்க அணிவகுக்குச் செய்வதும் குர்ஆன் என்றால் மிகையாகாது. அந்த வரிசையில் கிறிஸ்தவ போதனைகளில் வளர்க்கப்பட்ட யூசா இவான்ஸ் என்ற கிறிஸ்தவர் தன் சத்திய தேட்டத்தின் இறுதியில் குர்ஆனை முழுமையாகப் படித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உலக அரங்கில் அறியப்படும் ஓர் சத்தியப் பிரச்சாரகராக விளங்குகிறார். அவர் தன் சத்தியப் பயணத்தை விவரிக்கின்னறார்.
ஒருமுறை
நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,
“முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியில் வாழ்கிற அல்லாஹ் என்ற “Moon God” டை வணங்குகிறார்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள்தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிமல்லாத யாரைக் கண்டாலும் கொன்றுவிட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்குப் பெயர் ஜிஹாத். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்” என்று என்னன்னவோ இருந்தது.
அவ்வளவுதான்,
அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். நல்ல வேளை தெற்கு ககரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை.
பிறகு
ஒரு முஸ்லிமை நான் சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அதற்குக் காரணங்களில் ஒன்று அவர்தான் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆயிற்றே. முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்றுதானே அந்த புத்தகத்தில் போடப்பட்டிருந்தது.
ஒரு
வெள்ளிக் கிழமை நண்பர்களுடன் மதங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்த நண்பர் என் அருகில் வந்து இஸ்லாமைப் பற்றித் தெரியுமா? என்று கேட்டார். இஸ்லாமைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியும் என்று நான் படித்தவற்றைக் கூறினேன். நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான் என்றேன்.
உனக்குத்
தெரியுமா? நான் ஒரு முஸ்லிம்
நீ
ஆப்பிரிக்க அமெரிக்கன் அல்லவா? முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள்தானே?
என்ன?
ஆச்சர்யத்துடன்
கேட்டார் அவர்.
இங்கே
பார் நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப் படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாகக் கூறுவார்கள். நான் இப்போது ஜும்மா தொழுகைக்காகப் போகிறேன். என்னுடன் நீயும் வா.
என்
தெருவிலேயே அந்த மசூதி இருந்தது. அங்கு இமாமை அறிமுகப் படுத்தினார் நண்பர். அருமையான மனிதர். பண்பாகப் பேசினார். என்னை உள்ளே அழைத்துச் சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஒரு நாற்காலி கொடுத்து உட்காரச் சொன்னார். என்
முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்குப் பின்னாலோ ஒரு திரை. திரைக்கு அந்தப் பக்கம் பெண்களின் குரல் கேட்டது.
சொற்பொழிவு
தொடங்கியது. அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல. அறிவாளியும் கூட. உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறிக்கொண்டிருந்தார். எனக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவா? இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா? தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்குத்
தோன்றியது.
இன்று வரை நன்கு
நினைவிரக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று அது. உரையின்
தலைப்பு: இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணை வைப்பவரைத் தவிர”. அது மட்டுமல்லாமல்,
இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மூஸா (அலைஹிஸ்ஸலாம்) என்று பைபிளில் உள்ள நபிமார்களின் பெயரை
உச்சரித்தார். எனக்கு ஆச்சரியம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?
சொற்பொழிவு முடிந்தவுடன்
எல்லோரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.
“என்ன செய்யப்
போகிறீர்கள்” என்று பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டேன்.
“தொழப்போகிறோம்”
“யாரை”
“இறைவனை”
“எந்த இறைவன்”?
“உலகில் உள்ள அனைத்தையும்
படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை”
என்னுடைய கடவுளைத்தான்
இவர்களும் வணங்குகிறார்களா? எனக்குப் புரிய ஆரம்பித்தது.
தொழுகை ஆரம்பித்தது.
குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது. மனதை ஊடுருவியது.
நெற்றியை தரையில் வைத்து சாஷ்டாங்கம் செய்தார்கள். “ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது” முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது (Worship) வழிபாடு. இதுதான் நான் இத்தனை நாளாய் எதிர்பார்த்தது.
தொழுகை முடிந்தது.
எனக்கு என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது. மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக
ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாக
இருந்தது.
தொழுகை முடிந்தவுடன்
நேராக அந்த இமாமிடம் சென்றேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார்.
ஆனால் நான் அவரிடம்,
“இல்லை இல்லை.
உங்களிடம் உங்களுக்கென்று ஏதாவது புத்தகம் இருக்கிறதா?”
“ஆம் இருக்கிறது,
அதற்குப் பெயர் குர்ஆன். ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக் கொள்ளுங்கள்”
எடுத்துக் கொண்டேன்.
அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் அத்தியாயம், அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது
போன்று கடவுளைத் துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அதே பெயர்கள்.
ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான
தன்மையுடன் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டு வந்த இறைச் செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக
மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.
ஆர்வம் கூடிக்கொண்டே
இருந்தது. ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று
பார்க்க மிகுந்த ஆவல். ஆலு இம்ரான் போன்ற அத்தியாயங்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலைஹிஸ்ஸலாம்)
அவர்களது வரலாறாளது நான் இதுவரை New Testament ல் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக,
தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலைஹிஸ்ஸலாம்) இவர்தான்.
குரானை மூன்று நாட்களில் படித்து முடித்து விட்டேன். ஆனால் முதல் இரவில் ஆலுஇம்ரான் அத்தியாயம் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்து விட்டேன்.
முஸ்லிம்கள் என்றால்
யார்? எப்படி முஸ்லிமாவது? என்று கூட அப்போது சரியாக எனக்குப் புரியவில்லை.
ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள்
போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்கள் போலத்தான் நானும்
வாழ வேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு வழிகாட்டி.
இது தவறென்றால்
சோதனைக்கு வையுங்கள். இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றைக் கொண்டு வாருங்கள். என்று சவால்
விடும் இதுபோன்ற ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. கடவுளைப் பற்றிய அனைத்து விளக்கங்களும்
அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை. நேர்மையானவை.
அந்த இரவு என்
மனதை முழுமையாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுது கொண்டே
இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்துகொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.
ஆனால் அதுவோ என்
தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது!
நன்றி: திருக்குர்ஆன் நற்செய்தி மலர் APRIL 2013
1 comments:
Allahu'akbar, Allah is alone best to guide!
Post a Comment