Pages

Subscribe:

Friday, October 24, 2008

பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!

பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!
மதத்தைப் பரப்புவதற்கு கிறித்தவ சபைகள் கையாண்டு வரும் வழிமுறைகள் மிகவும் தந்திரமானது! அற்புத சுகமளிக்கும் ஆராதனை என்று கூட்டம் நடத்தி செட்டப் அற்புதங்கள் காட்டியும், உலகியல் சுகங்களைக் காட்டி நலிந்தவர்களை ஏமாற்றியும் மதப் பிரச்சாரம் செய்து வந்த கிறித்தவ சபை முஸ்லிம்களை ஏமாற்ற புதிய வழிமுறையைக் கையாண்டு வருகிறது. குர்ஆனின் வசனங்களைத் திரித்து வியாக்கியானம் செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்து இல்லாததை இட்டுக் கட்டியும் செய்யும் விஷமப் பிரச்சாரமே இது. முஸ்லிம அறிஞர்களுக்கு முன் பகிரங்கமாக வருவதற்கு பயப்படும் மிஷினரிகள் தங்கள் கைவரிசையைக் காட்டுவது படிப்பறிவில்லாத பாமர முஸ்லிம்களிடம்.
இஸ்லாத்தைக் குறித்த எந்த அடிப்படை அறிவும் இல்லாத, முஸ்லிம் பெயர்களை வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் எப்போதாவது இவர்களின் பசப்பு வார்த்தையில் மயங்கி வழிகேட்டில் விழுந்து விட்டால் அதைக் கொண்டாடி, பார்த்தீர்களா இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு வந்தவர்கள் என்று புளங்காகிதமடைவர். அவ்வப்போது கழுத்தை நீட்டி இரைகளைத் தேடும் ஆமைகளைப் போல செயல்படும் இவர்கள் முஸ்லிம அறிஞர்கள் விவாதத்துக்கு அழைக்கும்போது மட்டும் பட ஓடி ஒளிந்து விடுவர்.

கேரளாவில் குர்ஆன் வசனங்களைக் கொண்ட பிரசுரங்களை அச்சிட்டு முஸ்லிம்களிடம் கைவரிசையைக் காட்டிய அவர்களை மடக்கிப் பிடித்தது அங்குள்ள நிச் ஆஃப் ட்ருத் என்ற இஸ்லாமிய அமைப்பு. நிச் ஆஃப் ட்ருத்தின் தீவிர செயல்பாட்டால் நிலை நிற்க முடியாத கிறித்தவ சபை வேறு வழியின்றி வேண்டா வெறுப்புடன் இவ்வமைப்பின் நிறுவனராகிய M.M அக்பர் அவர்களுடன் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டது. விவாதத்தில் ஏண்டா கலந்து கொண்டோம் என்று முழுக்க முழுக்க வியர்த்து விறுவிறுத்து அசடு வழியும் காட்சிகள் ஏராளம். அதில் ஒரு சம்பவம் தான் முஹம்மது நபியைக் குறித்த இவர்களின் பகிரங்க இட்டுக் கட்டுதல். முஹம்மத் (ஸல்) அவர்கள் நரகத்துக்குச் செல்வார்களாம்!? குர்ஆன் இவ்வாறு கூறுகிறதாம்!? குர்ஆன் இறைவேதமல்ல என்பதை நிருபிக்க மிஷினரிகள் கண்டு பிடித்த புதிய தத்துவம்! சரி. அதை இவர்களால் நிருபிக்க முடிந்ததா? ஒரு சாதாரண முஸ்லிமின் கேள்விக்கு முன்னால் இவர்கள் திணறுவதை வீடியோவில் பாருங்கள்.



வீடியோவின் தமிழாக்கம் (அடைப்புக்குறிக்குள் உள்ளவை தமிழாக்கியவர் கருத்து)
கேள்வி: முஹம்மது நபி நரகத்துக்குச் செல்வார் என்று எந்த வசனத்தில் உள்ளது? உங்களின் உரையிலும் மறுப்புரையிலும் இதனை நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது எந்த வசனத்தில் இருக்கிறது? கிறிஸ்தவர் பதில்: இப்போது உட்கார்ந்து தயார் செய்து பதிலளிக்கலாம் தயாரா? என்று கேட்கிறார். (தயார் செய்யாமல் தான் முதலில் கூறினாரா??)
நடுவர் கூறுகிறார்: இனி இப்போது வேண்டாம்.

பார்வையாளர்கள் வேண்டும் என்று கூறுகின்றனர். அது தேவையா? என்று மீண்டும் நடுவர்.

கிறிஸ்தவர்: வேண்டுமானால் நான் தயார்! (திணறி பின்வாங்கியது பின்னால்!) எனக்கு ப்ரிப்பரேஷன்..(நேரம் வேண்டும்)
நடுவர் (சிரித்துக் கொண்டே): அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வைத்துக் கொள்ளலாம்

நடுவர்: இதை ஆய்வு செய்தால் அது வேறு பல விவாதங்கள் என்று நீண்டு செல்லும்.

பார்வையாளர்கள் இப்போது அவர் நிரூபிக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.

நடுவர் அமைதியாகி விடுகிறார். தாங்கள் கொண்டு வந்த ஆவணங்களை பெரிய ஆராய்ச்சி செய்வது போல் பாசாங்கு நடக்கிறது.நேரம் செல்கிறது.

M.M. அக்பர் எழுந்து பேசுகிறார்: நான் இதில் சிறிது கலந்து கொண்டு கருத்துக் கூற விரும்புகிறேன், மரியாதைக்குரிய தோட்டம் ராஜசேகரன் நாயர் சார் (நடுவர்) இங்கு உள்ளார்கள். என் நண்பர்கள் இந்த அவசரத்துக்கிடையில் தேடினால் ஒருவேளை கிடைக்காமல் இருக்கலாம். ஒரு வாரத்துக்குள் அவர்கள் அதனைக் கண்டு பிடித்து தோட்டம் ராஜசேகரன் சார் அவர்களிடம் தெரியப்படுத்தட்டும். அவர்கள் நமது இந்த விவாதத்தில் நடுவராக இருந்தது போல் அதில் நடுவராக இருக்கட்டும். இன்ஷா அல்லாஹ் அது குறித்த அவரது தீர்ப்பும் நமது மாத இதழாகிய ஸ்னேக ஸம்வாதம் (தோழமை விவாதம்) இதழில் வெளியிடப்படும். (என்று கூறிவிட்டு) இல்லை! தேடவேண்டாம்! (மக்களும் நடுவரும் சிரிக்கின்றனர்) இல்லை! குர்ஆனில் (அப்படி) இல்லவே இல்லை!
(உடனே கிறிஸ்தவர் இடையில் எழுந்து): அப்படி இல்லை என்று கூறி முடிக்க வேண்டாம். நான் சொன்ன காரியங்கள் இதில் எழுதப்பட்டுள்ளது (கொண்டு வந்த பேப்பரைக் காண்பிக்கின்றார்)
M.M. அக்பர்: ஆகட்டும்! நிரூபியுங்களேன்!
கிறிஸ்தவர்: நான் கூறியது இதில் உள்ளது.

M.M. அக்பர்: வசனத்தை எடுத்துக் காண்பியுங்களேன்?
கிறிஸ்தவர்: நான் கூறிய காரியங்கள் இதில் உள்ளது (உள்ளது என்றால் வசனத்தைக் காண்பிக்க என்ன தயக்கமோ?)
M.M. அக்பர்: வசனத்தை எடுங்கள், ஒரு பிரச்சினையும் இல்லை, நிச் ஊழியர்கள் காத்திருக்கத் தயார்!

கிறிஸ்தவர்: இந்த டெக்னிக் ஒன்றும் வேண்டாம் டிபேட்டின் டெக்னிக்குகள் எங்களுக்கும் தெரியும் (அதனால்தான் திணறுகிறார் போலும்!)
M.M அக்பர் நாங்கள் ரெடி என்று ஒதுங்கிக் கொடுக்கிறார்.

கிறிஸ்தவர்: (இப்போது திணறலின் உச்ச கட்டம்) நான் இன்று ப்ரஸண்ட் செய்தது இதிலிருந்தாகும். இதிலிருந்துள்ளது நான் கண்டு பிடித்து... நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை!! (சபையில் சிரிப்பொலி! இப்படியா உளற வேண்டும்?) கொஞ்ச நேரம் பேப்பரையயே பார்க்கிறார். சிறிது இடைவெளிக்குப் பின்னர்: அப்போது இதன் பொருள் வேறு ஒன்றும் உங்களுக்குப் பிரச்சினை இல்லை என்பது தானே? (நீண்ட நேரம் அமைதியாக இருந்தால் மக்கள் என்ன நினைப்பர்? எதையேனும் பேச வேண்டுமல்லவா?)
கேள்வி கேட்ட சகோதரர்: இல்லை ஏராளாம் (பிரச்சினைகள்) உண்டு. எனினும் இக்காரியத்தை நீங்கள் ஐந்து தடவை கூறினீர்கள். இவ்வாறு கூறியதனாலேயே இதை உங்களிடம் கேள்வியாக வைக்கிறோம்.
M.M. அக்பர்: இது டிபேட்டின் வேறொரு டெக்னிக்! (சபையில் பலத்த சிரிப்பொலி!) இங்கு பிரச்சினை என்னவென்றால் வசனங்களை மாற்றியதாகும். குர்ஆனில் கூறப்படாத விஷயத்தை குர்ஆன் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளதே இங்கு பிரச்சினை. அதில் இரண்டு காரியங்கள் இப்போது (கையும் களவுமாக) பிடிக்கப்பட்டுள்ளது.) ஒன்றை அவர்கள் இல்லை என்று ஏற்றுக் கொண்டனர். இரண்டாவதை இப்போது தேடிக்கொண்டிருக்கின்றனர்.(M.M அக்பர் நிறுத்துகிறார்)
மீண்டும் தேடுகின்றனர். நீண்ட அமைதி! வேறு வழியின்றி எழுந்து கூறுகிறார்: நான் இங்கே கூறியது இதில் எங்குள்ளது என்று என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை! நான் ஒரு வாரத்துக்குள் அக்பர் சாகிபுக்கோ (சைகை காட்டி மழுப்பி விட்டு உட்காருகிறார்)

M.M. அக்பர் முடிவுரையுடன் நிறைவு பெறுகிறது.

வாசக நெஞ்சங்களே! வீடியோவும் அதன் தமிழுரையும் படித்திருப்பீர்கள். தங்கள் கொள்கையை எப்படியேனும் பிறரிடம் திணிப்பதற்காக படாத பாடு படும் மிஷினரிகள் இஸ்லாத்தைக் குறித்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்தும் வைக்கும் விமர்சனங்கள் அடிப்படையற்றது. அபவை அப்பட்டமான பொய்கள் என்று இங்கே நிரூபணமானது. இவர்கள் முஸ்லிம்களிடம் பகிரங்க விவாதத்துக்கு வராமல் ஒளிந்தோடுவதன் ரகசியம் புரிகிறதல்லவா?

2 comments:

Unknown said...

can you prove that quran was given by gibroyl.
1john 4:1-4,revelation20:10, it clearly says about mohamad"s judgement

அபூ அப்திர்ரஹ்மான் said...

Please read: http://christianpaarvai.blogspot.com/2008/10/blog-post_27.html