Pages

Subscribe:

Friday, August 8, 2008

யோவான் அத்தியாயத்திலும் திருத்தம்

மத்தேயு அத்தியாயத்திதல் இடைச் செருகல் உள்ளது போலவே பைபிள் பண்டிதர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திருத்தம் யோவான் அத்தியாயத்திலும் உண்டு. இவ்வாறு இடைச் செருகப்பட்ட வரிகள் யோவான் 7 ஆம் அத்தியாயாம் 53 முதல் 8 ஆம் அத்தியாயம் 11 வரை உள்ள வரிகளாகும். பைபிளின் புராதன கையெழுத்துப் பிரதிகளில் மேற்படி வரிகள் இல்லை. இடைச் செருகப்பட்ட வரிகள் யோவானின் வரிகளின் போக்குடன் மாறுபட்டதாக உள்ளது. நியு ஜெருசலேம் பைபிள் இது குறித்து இவ்வாறு கூறுகிறது.

The author of this passage 7:53 – 8: 11 is not John: it is omitted by the oldest witnesses (MSS, versions, Fathers) and found elsewhere in others; moreover, its style is that of the Synoptics and the author was possibly Luke) The New Jerusalem Bible – Page 1761

விபச்சார குற்றம் சுமத்தப்பட்ட ஒரு பெண் இயேசுவிடம் கொண்டு வரப்பட்டு, மோசேயின் நியாயப் பிரமாணப்படி விபச்சாரியை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று பரிசேயர் கூறிய பொது போது உங்களில் பாவம் செய்யாதவர் இவளைக் கல்லால் அடிக்கட்டும் என்று கூறக்கூடிய வரிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த வரிகள் ஏன் சேர்க்கப்பட்டது ? என்பதை நாம் அறியோம். விபச்சாரியைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற அன்றைய வேதத்தின் பிரமாணம் நிலை நின்றிருந்த காலகட்டத்தில் ஏதேனும் விபச்சாரியைக் காப்பாற்றுவதற்காக இயேசுவின் பெயரில் இதனை இட்டுக் கட்டி யோவான் அத்தியாயத்தில் இடம் பெறச் செய்திருக்கலாம் என்றே எண்ண முடியும். வேறு எந்த சுவிசேஷங்களிலும் இந்தக் கதை இல்லை என்பது இந்த அனுமானத்தை இன்னும் உறுதி செய்கிறது.

0 comments: