Pages

Subscribe:

Sunday, November 4, 2012

பரிசுத்த வேதாகமம் இறை ஆகமமா?

வ்வுலகில் வேதங்கள் என்று சொல்லப்படும் பல நூல்கள் உள்ளன. ஆனால் அவை அத்தனையும் இறை நூல்கள் என்ற அந்தஸ்தைப் பெற முடியுமா? மக்களுக்கு நல்லுபதேசம் வழங்கும் நூல்களும் மறை அல்லது வேதம் என்ற நிலையில் வைத்துப் பார்க்கப் படுகின்றன. குர்ஆனை இஸ்லாமியர்கள் வேதம் என்று நம்புகின்றனர். அல்லாஹ் என்று சொல்லக் கூடிய அந்த வல்லமை மிக்க இறைவன் நேரடியாகப் பேசும் வசனங்கள் அதில் உள்ளன.  இவ்வுலகில் பல்வேறு சமுதாயத்தவரால் வேதங்கள் என்று சொல்லப்படும் எந்த நூல்களும் குர்ஆனின் இறைதன்மையைப் பெற்றிருக்கவில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மையாகும். அவற்றின் தொனி ஒரு கதை சொல்லும் பாங்கில் அல்லது உபதேசங்களின் ஒரு தொகுப்பு என்ற தகைமையோடு மட்டும் நின்று விடுகின்றன.

 ஓர் இறைத்தூதரோடு தொடர்புடைய மூன்று அம்சங்களை இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கின்றனர்.
 
  1. அவருக்கு ஏற்பட்ட வெளிப்பாடுகளின் தொகுப்பு (வஹீ) 
  2. இறை வெளிப்பாடுகளின் அடிப்படையில் அவர் மொழிந்த உபதேசங்கள், வழிகாட்டுதல்கள், அவர் அங்கீகரித்த காரியங்கள் மற்றும் அவரின் செயல்பாடுகள் பற்றி அவரைச் சுற்றியிருந்த தேழர்கள் அறிவித்தவை மற்றும் பதிவு செய்தவை (ஹதீஸ்)
  3. அவரைக் குறித்து அவரது சமகால அல்லது பிற்கால மக்கள்   பதிவு செய்த வரலாற்றுச் செய்திகள் (சீரா)

இதில் முதலில் கூறப்பட்டது மட்டுமே இறைவேதம் என்ற அந்தஸ்தை அடைகிறது. இறைவேதத்தில் இறைதூதருக்கு உண்டாகிய வெளிப்பாடுகள் மட்டுமே இடம் பெறும்.
இத்தகைய வெளிப்பாடுகளின் ஒவ்வொரு சொல்லும் முழுக்க முழுக்க இறைவனால் அருளப்பட்டதாக இருக்கும். அதில் கூறப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் தவறுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இறைதூதர் மொழிபவை முற்றிலும் இறை வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது தான் என்றிருப்பினும் இறைதூதரின் மொழிகளும் வேத வரிகளும் அதன் நடையில் மாறுபட்டதாக இருக்கும். இறைதூதரின் மொழிகளைப் பொறுத்தவரை அதில் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும். இறைதூதரைக் குறித்து பிறர் எழுதியவற்றைப் பொறுத்த வரையில் அது ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு சரியானவை என்று அறிந்த பின்னரே உண்மை என்று கொள்ளப் படும்.
மேற்குறிப்பிடப் பட்டவற்றில் குர்ஆன் முதல் தரத்திலும் ஹதீஸ்கள் இரண்டாம் தரத்திலும் சரித்திர புத்தகங்கள் மூன்றாம் தரத்திலும் வந்து விடுகிறது.
இறை வசனங்கள் தீர்க்கதரிசிகளின் கூற்றுகள் வரலாறுகள் ஆகிய மூன்று அடிப்படையில் இருந்து பல்வேறு மனிதர்களால் தொகுக்கப்பட்ட புத்தகங்களின் தொகுப்பே பைபிள். பைபிளின் முதல் அத்தியாயமான ஆதியாகமத்தில் இந்த மூன்று அடிப்படைகளையும் கொண்ட வசனங்களை உதாரணத்திற்குக் கொள்வோம்.

1. வெளிப்பாடுகள்: "கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. . நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் (ஆதியாகமம்: 12: 1)
மேல் கண்ட பைபிள் வசனம் கர்த்தர் ஆபிரஹாமிடம் நேரடியாகப் பேசியதை அடிப்படையாகக் கொண்டு பைபிள் எழுத்தர் எழுதியதாகும்.
 
2. தீர்க்கதரிசிகளின் கூற்றுகள்: "அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்”. (ஆதியாகமம் 12: 11-13)
மேற்கண்ட வசனம் ஆபிரஹாம் என்ற இறைதூதர் தன் மனைவி சாராவிடம் மொழிந்ததாக பைபிள் எழுத்தர் எழுதியது.

3. தொகுப்பாளர்களின் கூற்றுகள்: "ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்". (ஆதியாகமம் 12: 11-13)
மேற்கண்ட வசனம் பைபிள் எழுத்தரின் சொந்தக் கூற்று.
இறை வெளிப்பாடுகள் மற்றும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களை அடிப்படையாக வைத்து கேள்விப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பிற்கால ஆசிரியர்களால் தொகுக்கப்பட்ட பல புத்தகங்களின் தொகுப்பே பைபிள் ஆகும்.
ஒன்றை முழுக்க முழுக்க இறைவேதம் என்று சொல்ல வேண்டுமானால் அது இறைவெளிப்பாடுகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் பைபிளை உபதேசங்களையும் வரலாற்றுத் தகவல்களையும் கொண்ட, பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு என்று கூறலாமே ஒழிய அது முழுக்க முழுக்க இறைநூல் என்று கூறவியலாது என்பது ஓர் எளிய சத்தியமாகும்.
 
Courtesy: Bibilinte Daivgatha by MM.Akbar, Niche of Truth, Kerala.

0 comments: