Pages

Subscribe:

Thursday, May 17, 2012

சிலுவை வடுவும் விக்கி பீடியாவும்

Selvarajon

நண்பரே இதற்கு ஏதேனும் விளக்கம் தரமுடியுமா?


செல்வராஜ் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Stigmata என்ற வார்த்தைக்கு இயேசுவின் உடலில் சிலுவையில் அறையப்பட்டதால் ஏற்பட்ட வடுக்கள் என விக்கி பீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பவுலின் நிருபத்தை ஆதாரமாகக் கொண்டதாகும் எனவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளதைப் பார்க்கவும் (The term originates from the line at the end of Saint Paul’s Letter to the Galatians where he says, “I bear on my body the marks of Jesus,” ) . பவுல் உருவாக்கிய கிறித்தவ மதத்திற்கும் இயேசுவின் உபதேசங்களுக்கும் மத்தியில் மிகப்பெரியவேறுபாடுகள் இருப்பதை பைபிளின் ஏராளமான வசனங்களைக் கொண்டு நிருபிக்க முடியும். மேலும் பவுலுடன் கொள்கை வேறுபாடு கொண்ட பர்னபாஸின் சுவிசேஷம் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை மறுப்பதுடன் இயேசு மூன்று வானவர்களால் மேல் உலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைத் தெளிவு படுத்துகிறது.


விக்கிபீடியாவின் பின் வரும் வாசகத்தைக் கவனிக்கவும்

Reported cases of stigmata take various forms. Many show some or all of the five Holy Wounds that were, according to the Bible, inflicted on Jesus during his crucifixion

பைபிளின் கூற்றுப்படி (according to bible) என்று தான் குறிப்பிடப் பட்டுள்ளது. அதே பைபிளில் தான் சிலுவையில் அறையப்டாததற்கும் ஆதாரம் உள்ளது. இயேசுவுக்குப் பின்னர் 60 அல்லது 70 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட சுவிசேஷங்களில் இயேசுவின் வாழ்வை விவரிப்பதில் அநேக முரண்பாடுகள் உள்ளன. குறிப்பாக சிலுவை மரணம் குறித்த குறிப்புகளில் இது மலிந்து காணப்படுகிறது. இயேசுவின் தீவிர நேசராக இருந்த பர்னபாஸின் சுவிசேஷம் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதைத் தெளிவாக விளக்குகிறது. மேலும் பின்வரும் தொடுப்புகளையும் பார்வையிடுங்கள்

0 comments: