Pages

Subscribe:

Thursday, October 2, 2008

பைபிள் ஒரு விரிவான அலசல் - 3

பைபிள் ஒரு விரிவான அலசல் - 3
M.M. AKBAR


கிறித்தவ மக்களால் இறைவேதம் என்று நம்பப் பட்டு வரும் பைபிளின் உறுதிப் பாட்டைக் குறித்த புதிய ஆய்வுகளின் அடிப்படையில் இரண்டு அடிப்படைகள் மிக முக்கியமானதாகும். ஒன்று இன்ஸ்பிரேஷன் (Inspiration) மற்றொன்று ரிவலேஷன் (Revelation) ஆகும். முதலாவதை உந்துதல் என்றும் இரண்டாவதை வெளிப்பாடு என்றும் தமிழில் கூறலாம்.


இன்ஸ்பிராஷியோ (Inspiratio) என்ற இலத்தீன் பதத்திலிருந்து இன்ஸ்பிரேஷன் (Inspiration) என்ற ஆங்கில பதம் உருவானது. இப்பதம் தியோப்னெவுஸ்தஸ் (theopnevustos) என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். கிரேக்கத்தில் இதற்கு ஊதுதல் என்று பொருள். முதன் முதலாக இப்பதம் காணப்பட்டது 2 தீமோத்தேயு: 3:16 ஆம் வசனத்தில் ஆகும். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று மொழி பெயர்க்கப் பட்டிருக்கும் இவ்வசனத்தின் மூலம் பவுல் கூற விரும்பியது என்பதைக் குறித்த தெளிவான விளக்கம் இல்லை. வேத புஸ்தகம் எழுதுபவர்கள் பரிசுத்த ஆவியினால் கண்காணிக்கப் பட்டு பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதுகின்றனர் என்பது கிறிஸ்தவ வியாக்கியானம். இக்கருத்தை வலுப்படுத்தும் குறிப்புகள் ஒன்றும் பழய ஏற்பாட்டில் காணப்படவில்லை. தேவ ஆவியின் வரவால் அருள் வாக்குகள் கூறிய பிலேயாம் (எண்ணாகமம் 24: 2-4) சவுல் (1 சாம்வேல் 10:8) ஆகியோரைக் குறித்து பழய ஏற்பாடு கூறுகிறது. ஆனால் இதற்கும் பரிசுத்த ஆவியின் உந்துதல் என்ற கூற்றுக்கும் தொடர்பில்லை. அவை வெளிப்பாடுகளுக்கு உரிய சான்றுகளாகவே உள்ளன. ஆனால் பரிசுத்த ஆவியின் உந்துதல் என்பது ஒரு கற்பனையாக மட்டுமே நிலை கொள்கிறது.

கிறிஸ்தவர்களின் கொள்கைப்படி வெளிப்பாடு என்பதும் உந்துதல் என்பதும் இரண்டு விதமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு வார்த்தைகளாகும். இரணடினதும் அடிப்படையே மாறுபட்டதாகும். மனித சமூகத்துக்கு தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்படும் காரியங்களை இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தலே வெளிப்பாடு எனப்படுகிறது. இத்தகைய வெளிப்பாடுகளின் அடிப்படையில் மக்களை தார்மீக வாழ்வின் பால் வழி நடத்தவேண்டிய பொறுப்பு தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய வெளிப்பாடுகளைக் குறித்து பழய ஏற்பாட்டில் ஏராளமான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

"நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன்" (எண்ணாகமம் 23:3)

"மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிராணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்" (உபாகமம் 29:29)

"அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி" (2 சாமுவேல் 7:4)

பைபிள் குறிப்பிடும் வரலாறுகளில் ஆங்காங்கே சிலருக்கு தேவனின் வெளிப்படுத்தல்கள் உண்டாயின என்பது பைபிள் இறைவேதம் என்பதற்கான சான்றுகள் இல்லை. அவை வெளிப்பாடுகள் குறித்த தகவல்களாகும். பைபிள் முழுக்க முழுக்க தேவ ஆவியால் அருளப்பட்டது என்றும் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்பட்டது என்பதும் ஒரு கற்பனையாகவும் வெறும் ஒரு நம்பிக்கையாகவம் மட்டுமே உள்ளது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

0 comments: