Pages

Subscribe:

Monday, September 15, 2008

பைபிள் - ஓரு விரிவான அலசல் - 2

பைபிளில் உள்ளவை இறைவசனங்கள் என்று கிறித்தவர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அது எவ்வாறு அருளப்பட்டது எனபது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் முதலாவது பைபிளில் உள்ள ஒவ்வொரு வசனங்களும் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்ப்டடது என்பதாகும். பைபிளின் ஒரு வார்த்தையிலும் தவறு இல்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய நமபிக்கையின் காரணமாகத்தான் பைபிளின் கருத்துக்களுக்கு எதிரான தனது அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்ட கலீலியோவுக்கு கிறித்தவ சபை தண்டனை வழங்கியது.


புதிய ஆய்வுகள்

முதல் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மத ஆராய்ச்சிகள் பைபிளின் உறுதிப்பாட்டைக் குறித்த கேள்விகளை எழுப்புவதாக அமைந்திருந்தன. 1906 ல் குங்கல் என்ற ஆய்வாளர் பைபிளின் ஆதியாகம் சங்கீதம் ஆகிய புத்தகங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் சாராம்சம் இது தான்: பைபின் எழுதப்படுவதற்கு முன் உள்ள பாரம்பர்யங்களை ஆய்வு செய்தால் மட்டுமே அதன் உறுதிப்பாட்டைக் குறித்த ஒரு முடிவுக்கு வர இயலும். பதிவு செய்ததும் செய்யப் படாததுமான பழய தகவல்களை ஆய்வு செய்யாதவரை பைபிளின் உறுதித் தன்மை கேள்விக்குரியதாகும்.

குங்களின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு டிபிலியோஸ் புல்ட்மேன் முதலிய பைபிள் பண்டிதர்கள் புதிய ஏற்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இவ்வாய்வு புதிய ஏற்பாடு எழுதப்படுவதற்கு முன்னா வாய்மொழியாக மட்டும் நிலை நின்றிருந்த பழய பாரம்பர்யங்களைக் குறித்த தகவல்களைத் தருவதாக அமைந்திருந்தது. புதிய ஏற்பாடானது இயேசுவின் வாழ்வை அவருக்குப் பின் வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களுடன் தங்கள் விருப்பத்திற்கிணங்க உருவாக்கியதாகும் என்பதை இவ்வாய்வுகள் வெளிப்படுத்தின.

பைபிள் பற்றிய இத்தகைய ஆய்வுகள் அது இறைவனால் அருளப்பட்டது அல்ல என்பதை விளக்குவதாக உள்ளன. இதனை ஒரளவுக்கு கிறித்தவ சபைகள் ஒப்புக் கொண்டாலும் பைபிளின் மூலக் கருத்து ஒன்றாக இருப்பதால் அது இறைவேதம் தான் என்று நியாயப் படுத்துவதைக் காண்கிறோம். பைபிள் கூறும் தகவல்களில் காணப்படும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் இந்த வாதத்தையும் ஏற்பதற்குத் தடையாக உள்ளது. குறிப்பாக இயேசு கிறித்துவின் வரலாற்றை விவரிக்கும் இடங்களில் கூட இத்தகைய முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க இயலாமல் திணறுகிறது கிறித்தவ சபை.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

0 comments: