Selvarajon
நண்பரே இதற்கு ஏதேனும் விளக்கம் தரமுடியுமா?
செல்வராஜ் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உலகின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும்
மதம் கிறிஸ்தவம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இரண்டும் சிலுவைக்
கொள்கையில் எதிரும் புதிருமாக உள்ளது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை
மெய்ப்படுத்தும் வரிகள் பைபிளில் உண்டு.
பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் போதனையும் முஹம்மத் நபி (ஸல்)
அவர்களின் போதனையும் ஒன்றுதான். இயேசு போதித்ததை முஹம்மது நபி (ஸல்) அவர்களும்
போதிக்கிறார். அப்படியெனில் எங்கு முரண்பாடு? எதில் முரண்பாடு? ஏன் முரண்பாடு? இஸ்லாம்
மட்டும் தான் உண்மை மதமா? உலகில் ஒரு
பெரும்பான்மைச் சமுதாயம் சிலுவைக் கொள்கையை தம் இரட்சிப்பின் வழியாக நம்பிக்கொண்டிருக்க அது பொய் என்று
இறைவன் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அறிவித்தாரா? அப்படியானால் அதற்கு முன்னர் அந்த
நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்த மக்களின் நிலை? 

