Pages

Subscribe:

Sunday, July 20, 2008

திரித்துவமும் பெருக்கல் வாய்ப்பாடும்.

திரித்துவம் ஒரு மாயை - தொடர் - 2


கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் வாய்ப்பாடுகளை பள்ளிப் பருவத்தில் பயின்றிருக்கிறோம். திரித்துவத்துக்கும் இந்த வாய்ப்பாடுகளுக்கும் என்ன சம்மந்தம்?

திரித்துவம் பற்றி எழும் கேள்விகளை சமாளிக்க கிறித்தவ சபைகள் கூறிவரும் பல்வேறு காரணங்களுள் ஒன்றே இந்த பெருக்கல் கணக்கு. பைபிளின் அடிப்படையில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மூன்று தனித்தன்மைகளைக் கொண்ட மூவர்! அப்படியானால் 1 + 1 + 1 = 3 அல்லவா? எப்படி ஒன்றாகும்? என்ற கேள்விக்கு கிறித்தவ சபை அளித்த விடை. 1 x 1 x 1 = 1 என்பதாகும்.

ஆச்சர்யம்! ஒன்றாம் வகுப்பு மாணவனையே வெட்கமடையச் செய்யும் கணக்கு இது! இதே பெருக்கல் கணக்கைக் கூறி இந்து மதக் கடவுள் கொள்கையைக் கூட நியாயப் படுத்த இயலும். 1 x 1 x 1 x 1 x 1 x 1 x 1 x 1 x 1…………………………x 1 = 1 எத்தனை ஒன்றுகள் சேர்ந்தாலும் ஒன்று தான். முப்பத்து முக்கோடி ஒன்றுகள் சேர்ந்தாலும் ஒன்றுதான். இந்தக் கணக்கைக் கூறியதன் மூலம் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற இந்துக்களின் கடவுள் கொள்கையையும் கிறித்தவ சபை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்

0 comments: