Pages

Subscribe:

ad

.

Featured Posts

Thursday, August 29, 2013

சத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ்

கேரளாவைச் சார்ந்த ஜெர்ரி தாமஸ் ஆங்காங்கே இஸ்லாமை விமர்சித்துப் பேசி வரும் ஒரு கிறிஸ்தவர். இவர் கேரளாவைச் சார்ந்தவர். தனக்கென மேடைகள் அமைத்து இஸ்லாத்தை விமர்சித்து வரும் இவர் ஒரு முறை டாக்டர் ஜாக்கிர் நாயக் அவர்களிடம் கேள்வி கேட்க வந்தார்.


கேள்வி கேட்கும் இவருக்கு பைபிளைக் குறித்த தெளிவான ஞானம் கூட இல்லை என்பதற்கும் டாக்டர் நாயக் அவர்களின் ஆணித்தரமான பதில்களுக்கு முன்னால் திணறித் திக்கு முக்காடுவதையும் இந்த வீடியோவில் காணலாம்.

Sunday, August 18, 2013

சத்தியத்திற்கு வழிகாட்டிய பைபிள்

யூசா இவான்ஸ் : அறிமுகம்:

குர்ஆன் இறை வேதம்! உலக மக்களுக்காக இறைவனிடமிருந்து இறங்கிய இறுதி வேதம்! எவருக்கு அல்லாஹ் நாடுகிறானோ, எவர் சத்தியத்தைத் தேடுகிறாரோ அவருக்கு அது வழிகாட்டி. குர்ஆனைப் பற்றிய தப்புப் பிரச்சாரங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி அது சிரத்தில் ஒளிரும் விளக்காய், இருளில்  உழலும் மனிதர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாய்த் திகழும் அருளுக்குரிய இறை வேதம். சாத்தானின் அசரீரிகளைப் பற்றி கதையளந்து சாட்சிகளை முன் வைக்கும் கிறிஸ்தவமே வியந்து பார்க்கும் அளவுக்கு இஸ்லாமை நோக்கி கிறிஸ்தவர்க அணிவகுக்குச் செய்வதும் குர்ஆன் என்றால் மிகையாகாது. அந்த வரிசையில் கிறிஸ்தவ போதனைகளில் வளர்க்கப்பட்ட  யூசா இவான்ஸ் என்ற கிறிஸ்தவர்  தன் சத்திய தேட்டத்தின் இறுதியில்  குர்ஆனை முழுமையாகப் படித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உலக அரங்கில் அறியப்படும் ஓர் சத்தியப் பிரச்சாரகராக விளங்குகிறார். அவர் தன் சத்தியப் பயணத்தை விவரிக்கின்னறார்.

Wednesday, March 27, 2013

மாற்றார் பார்வையில் இஸ்லாம்


 திரு.சுஜாதா ரங்கராஜன்

பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான்

இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல்,கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.

அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.

Wednesday, February 6, 2013

என்னைக் கவர்ந்த இஸ்லாம்

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கிறஸ்துவ சகோதரியின் உரை


Tuesday, February 5, 2013

எதற்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)?

மனித சமூகத்துக்காக அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
 
ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) முதல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வரை அனைத்து நபிமார்களினதும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
 
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மற்றும் ஏனைய நபிமார்கள் அனைவரும் அழைப்பு விடுத்த மார்க்கமும் இஸ்லாமே என்பதாலும்,
 
அல்லாஹ்வின் வசனங்கள் அடங்கிய இறுதி வேதமாகிய அல் குர்ஆன் மற்றும் ஏனைய இறை வேதங்களின் மூலம் அங்கீகாரம் பெற்ற ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
 
மேலும் தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் போன்ற அனைத்து துறைகளுக்குமான உயரிய வாழ்வு நெறிகளைக் கற்றுத்தருவதோடு மற்றுமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கும் உன்னத மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
 
பாரபட்சமின்றி எத்தரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, எக்குலத்தை சார்ந்திருந்தாலும் சரி, அனைவருக்கும், அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் விதமான நேர்மையான சட்டங்களையும், தீர்வுகளையும் கொண்டு சர்வதேச தன்மையுடன் விளங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

இஸ்லாம் ஓர் அறிமுகம்

தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது, எதைத் தெரிவு செய்யப் போகிறோம்?
 
பூமி, செடிகொடிகள், பூச்சி இனங்கள், மிருகங்கள், பறவைகள், மீன் வகைகள், ஆகியவற்றோடு ஏனைய படைப்புக்களும் எப்படி சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? என்பது பற்றி நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்ததுண்டா?
 
அவற்றின் வாழ்வுக்கான வழிகாட்டலும், முறையான நிர்வாகக் கட்டமைப்பும் பற்றியெல்லாம் தெளிவு பெற்றிருக்கிறீர்களா?
 
சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், மேகங்கள், வீசும் காற்று ஆகியவற்றோடு ஏனைய சிருஷ்டிப்புகளும் எவ்வாறு உலக வாழ்வுக்கான பங்களிப்பை உரிய முறையில் அளிக்கின்றன என்பதை அறிவீர்களா?

Friday, December 14, 2012

கிறிஸ்துமசும் முஸ்லிம்களும்!

வ்வொரு வருடமும் டிஸம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு கிறிஸ்து அன்று பிறந்ததாகவும் அவர்கள் நம்புகின்றனர். அவர்களோடு நட்பு கொண்ட பிற மதத்தவரும் அவர்களுக்கு அந்நாளில் வாழ்த்து கூறுகின்றனர். அவர்களால் அன்றைய தினம் சிறப்பாக தயாரிக்கப்படும் இனிப்புகளையும் உணவுகளையும் வாங்கி புசித்து மகிழ்கின்றனர்.  பல முஸ்லிம்களும் கிறிஸ்தவ அன்பர்களுடன் நெருங்கிப் பழகியும் அன்பு பாராட்டியும் கலந்துறவாடியும் வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸின் போது அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான எளியதொரு வழிகாட்டுதலே இக்கட்டுரை!