Saturday, November 29, 2008
வன்மையாகக் கண்டிக்கிறோம்!
Tuesday, November 25, 2008
இஸ்லாமிய சேனல் நடத்திய கத்தோலிக்க கிறிஸ்தவர் இஸ்லாமைத் தழுவினார்!
"பின்னாட்களில் நாம் ஒளிபரப்பும் சேனலில் என்னவெல்லாம்
கூறப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் இஸ்லாத்தின் உயர்வான போதனைகளை உணர முடிந்தது. பிறகு குர்ஆனை ஆய்வுக்கு எடுத்தேன். நேர்வழிக்கான வாசலை குர்ஆன் எனக்கு திறந்து விட்டது. "
அல்ஜன்னத்: நீங்கள் இஸ்லாத்தை ஏற்க காரணமான நிகழ்வுகள் குறித்து...
சகோதரர்: கேபிள் டி.வி. தொழில் செய்து வரும் நான், இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் இன்றைய மீடியாக்கள் எதை கற்பிக்கின்றனவோ, அதாவது தீவிரவாதிகள், வன்முறையாளர்கள், பிற்போக்கு மதம் இதுதான் எனது கருத்தாகவும் இருந்தது. எனது கேபிள் நெட்வொர்க் மூலம் இஸ்லாமிய சேனல் என்ற பெயரால் நிகழ்ச்சி நடத்தினால் வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கடந்த பிப்.2008-ல் துவங்கினேன். முஸ்லிம்களுக்கென தமிழில் தனிச் சேனல் இல்லையே என்ற ஏக்கம் முஸ்லிம்களிடம் இருப்பதை அறிந்த நான் அதையே எனது வருமான பெருக்கத்திற்கான வழிமுறையாக தேர்வு செய்தேன். பின்னாட்களில் நாம் ஒளிபரப்பும் சேனலில் என்னவெல்லாம் கூறப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் இஸ்லாத்தின் உயர்வான போதனைகளை உணர முடிந்தது. பிறகு குர்ஆனை ஆய்வுக்கு எடுத்தேன். நேர்வழிக்கான வாசலை குர்ஆன் எனக்கு திறந்து விட்டது.
அல்ஜன்னத்: தங்கள் குடும்பம் பற்றி...
சகோதரர்: ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சார்ந்த நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்தவன் நான். இஸ்லாத்தை ஏற்றது குறித்து எனது குடும்பத்தில் ஆரம்பத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டன. அவ்வளவாக பெரிய அளவு எதிர்ப்பு ஏதுமில்லை.
அல்ஜன்னத்: இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பற்றி தங்கள் கருத்து...?
சகோதரர்: தஹஜ்ஜத் எனும் ஒரு நடு நிசித் தொழுகை என்னை மிகவும் கவர்ந்த அம்சம். மன அமைதியும் உள்ள ஒற்றுமையும் இதில் ஏற்படுகிறது. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.
அல்ஜன்னத்: நீங்கள் நடத்தும் இஸ்லாமிக் சேனல் குறித்து...
சகோதரர்: குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான பயான் சி.டிக்கள் ஒளிபரப்புதல், இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்களின் பயான் அல்லது அவரது பேட்டிகள் நேரடி (LIVE) ஒளிபரப்பு, இஸ்லாமிய அறிவை வளர்க்கும் விதமாக கேள்விபதில் நிகழ்ச்சிகள், திறமையானவர்களைக் கண்டறிந்து நேர்காணல்... இவ்வாறு பன்முகத் தன்மையுடன் இஸ்லாமிய போதனைகள் மக்களைச் சென்றடைகிறது.
அல்ஜன்னத்: இஸ்லாமிய போதனைகளுடன் முஸ்லிம்களுக்குள்ள தொடர்பு குறித்து உங்கள் பார்வை என்ன?
சகோதரர்: குர்ஆன், ஹதீஸ் என்ற முழக்கத்துடன் தவ்ஹீத் என்ற அடை மொழியில் வாழும் முஸ்லிம்கள் 80% தொழுகை போன்ற கடமைகளை நிறைவேற்றுநின்றனர். மற்ற முஸ்லிம்களோ இது விஷயத்தில் 25% மட்டுமே. இந்த ரமலானட முழுவதும் குர்ஆன் கேள்வி பதில் போட்டி ஒன்றை நடத்தினேன். தினமும் 30க்கும் அதிகமானவர்கள் தொலைக்காட்சியில் பதில் கூறுவார்கள். இந்நிகழ்ச்சியில் பிறந்தவுடன் பேசிய நபி யார்? என்ற கேள்விக்கு பதிலேதும் இல்லை. அதே போல் பெருநாள் தினத்தில் ஒரு கேள்வி: - ஸதக்கதுல் ஃபித்ர் எதற்காக? என்ற கேள்விக்கே பதில் இல்லை.
பெருநாள் தினத்துக்கு மறுநாள் ஆளூர் எனும் ஊரில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான் ஸதகதுல் ஃபித்ர் எதற்காக என்ற கேள்வியைக் கேட்டேன். கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான மக்கள் கூட்டமிருந்த அந்த நிகழ்ச்சியிலும் யாரிடமும் பதில் இல்லை.
இஸ்லாமியர்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் இஸ்லாத்தை விளங்க வேண்டும் அதுதான் வெற்றிக்கு வழி.
அல்ஜன்னத்: முஸ்லிம் இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
சகோதரர்: முஸ்லிம் உம்மத்திற்கு இன்றைய அவசரத் தேவை இரண்டு விஷயங்கள்: 1. தமிழில் ஒரு இஸ்லாமிய சேனல் துவங்கப்பட வேண்டும். 2. ஒவ்வொரு முஹல்லாவிலும் பைத்துல் மால் எனும் நிதியத்தை துவங்கி தகுதியும், திறமையும் உள்ளவாஸகளுக்கு உதவித் தொகையாகவோ தொழில் கருவியாகவோ அல்லது கடனுதவிகளாகவோ வழங்கப்பட வேண்டும். இன்னபிற நிறுவனங்களையும் சார்ந்து இருப்பதை விட்டுவிட்டு முஸ்லிம் உம்மத் தனது சொந்தக் காலில் நிற்கும் நிலையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
Friday, November 21, 2008
நபிகள் நாயகம் குறித்து கிறிஸ்தவரின் விமர்சனமும் அதற்கு விளக்கமும்!
"பைபிளில் ஏராளமான தீர்க்கதரிசிகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்ததாகக் கூறப்பட்டுள்ளதே? இளம்பெண்கள், சிறுமியர் என்ற வித்தியாசம் இன்றி போரில் கைப்பற்றப்பட்ட பெண்களையும் போராளிகள் தங்களுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறதே? இந்த அடிப்படையை வைத்து பைபிளை நீங்கள் ஏன் விமர்சிக்கவில்லை?"
John Said,
//சவுலை பற்றி சரியாக சொல்லி இருக்கிறிர்கள். இது போலத்தான் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவருக்கு நாற்பது வயது இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று நாந்தான் கடவுள் அனுப்பிய தூதர் என்றார். கடவுளின் செயலாளர் என்னிடம் வந்து இதை சொன்னார் என்றார். பிறகு கடவுள் என் மூலமாக ஒரு வேதத்தை உலகிற்கு சொல்லப்போகிறார் என்றார். இதற்கு முன்பும் கடவுள் தன்னுடைய தூதர்களை உலகிற்கு அனுப்பி இருக்கிறார், அவர்களுக்கு வேதங்களும் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த வேதங்களும், இறைதூதர்களும் அந்த கடவுளால் பாதுகாக்கபட முடியாமல் போய்விட்டதால் என் மூலமாக கடவுள் புது வேதம் தருகிறார். அதை அவரே பாதுகாப்பதாக சொன்னார் என்றும் அந்த வியாபாரியாக இருந்த திடீர் இறைத்தூதர் சொல்லிக்கொண்டார். என்னைப்பற்றி அங்கே அப்படி சொல்லி இருக்கிறது, இங்கே இப்படி சொல்லி இருக்கிறது என்றும் கூறினார். தினமும் என்மீது கடவுள் வந்து இறை வேதம் சொல்லிவிட்டு போகிறார் என்று சொன்னார். இதை எல்லாம் அவரே சொல்லிக்கொண்டார். பாவம் படிப்பறிவு இல்லாத அரபு மக்கள். அவர் சொன்னதை எல்லாம் நம்பிவிட்டார்கள். எல்லாரும் நான்கு மனைவிதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஆனால் நான் மட்டும் குழந்தை அல்லது மாமி என்ற கணக்கில்லாமல் எத்தினைபேரை வேண்டுமென்றாலும் திருமணம் செய்வேன், அப்படி செய்ய எனக்கு இறைவன் சிறப்பு அனுமதி தந்திருக்கிறார் என்றார். நன் சொல்வது மட்டும் தான் உண்மை, இதற்கு முன்பு, இறைவன் பிற இறைதூதர்கள் மூலம் சொன்னது எல்லாம் தப்பு என்றார். எப்படியோ அடித்து பிடித்து அந்த நாட்டுக்கு மன்னராகவும் ஆகிவிட்டார். பிறகு, பிற நாட்டு மன்னர்களுக்கு கடிதம் அனுப்பினார் எப்படி தெரியுமா "நாந்தான் இறைத்தூதர் நான் சொல்றது தான் இறைவேதம். இத நம்பினால் உனக்கு விமோசனம் இல்லேன்னா கஷ்டம் தான்" இந்த மாதிரி. இப்படியே அவரோட மதத்துக்கு ரொம்ப ஆட்களை சேர்த்துக்கிட்டார். இதுல முக்கியமான விசயம் என்னனா, கடவுளை பத்தி தப்பா பேசினாக்கூட அவரோட ஆட்கள் பொருத்துப்பாங்க, ஆனா திடீர் இறைதூதர் ஆன அந்த வியாபாரிய எதாவது ஒரு வார்த்தை தப்பாக பேசிவிட்டால் பேசியவர் பரம்பரையயையே கொலை செய்து விடுவார்கள். இது இந்த காலத்திலும் நடக்கிறது. இன்னிக்கு உலகத்துல நிறைய நாடுகளில் அவரோட தொண்டர்கள் இருக்காங்க. அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்கதான் உண்மை கடவுளை கும்பிடுறாங்க மத்தவங்க எல்லாம் சாத்தான கும்பிடுறாங்க. பிற கடவுள கும்பிடுரவங்க எல்லாம் கேவலமான காபிர்கள். இதெல்லாம் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது. இப்படியாக பல கோடி மக்கள் இன்னும் அவர நம்பிட்டுதான் இருக்காங்க. அவங்க வணங்குற கடவுள் பத்தியும் அவர்தான் சொன்னார், அந்த கடவுள் வேதம் தந்ததாவும் அவர்தான் சொன்னார், அவர்தான் இறைதூதர்நும் அவர்தான் சொன்னார், ஆகா மொத்தத்தில் அவங்க மதத்தில் எல்லாமே அவர் சொன்னது தான்.ரொம்ப வேடிக்கை என்னன்னா இதுக்கு முன்னாடியும் இதே கடவுள் வேற இறைதூதர்களுக்கு வேதம் கொடுத்தாராம். அதுல மனுஷ கரங்கள் விளையாடி விட்டதாம் வேதம் குடுத்த கடவுளால அத காப்பாத்த முடியலையாம் அதுனால இந்த வியாபாரி (திடீர் இறைத்தூதர்) மூலமா புது வேதம் குடுத்தாராம். இதும் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது. இவரையும் இன்னும் நம்பிட்டுதான் இருக்காங்க உலகத்துல நிறைய பேர். என்ன பண்றது உலகத்துல இந்த மாதிரி நிறய நடந்துகிட்டுதான் இருக்கு. //
பவுல் பற்றி பதியப்பட்ட செய்திகள் அனைத்தும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவை. இதனை மறுக்க இயலாத நீங்கள் அவர் பற்றிக் கூறியது அனைத்தும் சரியானவயே என்று ஒப்புக் கொண்டுள்ளீர்கள். அத்துடன் உங்களின் இயலாமை கோபமாக வெளிப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது விமர்சனத்தை வைத்துள்ளீர்கள். பொதுவாக தங்களால் பதிலளிக்க இயலாத விஷயங்களுக்கு இப்படி எதிர்மறைக் கேள்விகளை எழுப்புவது கிறிஸ்தவர்களின் வழக்கம். சிறுபிள்ளைத் தனமான இச்செயல் கிறிஸ்தவத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் சரியானவை தான் என்று மேன்மேலும் உறுதிப்படுத்துகிறது. இனி உங்களின் விமர்சனத்துக்கு வருவோம்.
முஹம்மது (ஸல்) அவர்கள் பவுலைப் போன்று திடீரென்று ஒரு ஒருநாள் இதோ இறைவன் என் முன் தோன்றினான் என்று கூறவில்லை. நாற்பது ஆண்டுகள் தன் சமூகத்துக்கு மத்தியில் சாதாரண ஒரு மனிதனாக நடமாடுகிறார்கள். ஆனாலும் தன்னிகரற்ற உயர்ந்த ஒழுக்கத்துடன் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்று வாழ்கிறார்கள். நீங்கள் கூறியது போல் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களள் வியாபாரத்தில் காட்டிய அசாத்திய நேர்மையைக் கண்டு வியந்து அவர்களின எஜமானியாக இருந்த உயர் குலத்தைச் சேர்ந்த கதீஜா அம்மையாரே அவர்களைத் திருமணம் முடிக்க தன் இசைவைத் தெரிவிக்கிறார்கள். தன் சமூகமக்களிடம் காணப்பட்ட தீச்செயல்களைக் கண்டு மனம் வெறுத்து தனிமையை நாடிச் செல்கிறார்கள். ஹிரா குகையைச் சென்றடைந்து அங்கு இறைவனை வணங்கி காலத்தைக் கழிக்கிறார்கள். இவ்வாறு மூன்று வருடம். அப்போது தான் வானவர் அவர் முன் தோன்றி இறைசெய்தியை அறிவிக்கின்றார்கள். அப்போது கூட அவர்களுக்கு தெரியாது இறைவனின் தூதர்தான் தன்னிடம் வந்தவர் என்று. அதனால்தான் பயந்து வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் தனக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக பயப்படுகிறேன் என்று கூறினார்கள். மனைவியோ, உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். தாங்கள் உறவுகளுடன் இணங்கி வாழ்கின்றீர்கள், சிரமப்படுவோரின் சுமைகளைச் சுமந்து கொள்கின்றீர்கள், வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினரை உபசரிக்கிறீர்கள், உண்மையான சோதனையில் அகப்பட்டவர்களுக்கு உதவுகின்றீர்கள் என்று கூறித் தேற்றுகிறார்கள். அதற்குப் பின்னர்தான் அவர்களுக்குத் தெரியவருகிறது, தன்னிடத்தில் வந்தவர் வானவா ஜிப்ரீல் என்பதும் தான் இறைவனின் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதும்.
மேற்கண்ட செய்திகளில் எந்த முரண்பாடும் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர்தான் என்பதற்கு அவர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆனின் வசனங்களே சாட்சி! அவை நாற்பது வயது வரை அவர்கள் அறிந்திராத அற்புத செய்திகள். அதனால் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமைத் தழுவினர். அதனால் தான் அன்றைய பெரிய இலக்கிய வாதிகள் கூட 'இது மனிதனின் சொல்லல்ல' என்று வியந்து தங்களையும் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டனர். அதனால் தான் 13 ஆண்டுகளில் அரேபியத் தீபகற்பமே இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டது. அதனால் தான் பத்ரு வெற்றி! மக்கா வெற்றி! என் அவர்களின் முன்னறிவிப்புகள் நடந்தேறியது. அதனால் தான் மிகக் குறுகிய காலகட்டத்தில் இஸ்லாம் உலகெங்கும் பரந்து வியாபித்தது. இப்போது சொல்லுங்கள் நீங்கள் கூறியது போல் படிப்பறிவு இல்லாத அரபு மக்கள்தான் அவர்களை ஏற்றுக் கொண்டார்களா? இல்லை சகோதரரே! நிச்சயமாக இல்லை. அன்று முதல் இன்று வரை மாமன்னர்கள் முதல் விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும், ஏன் பாமரர்களும் தங்கள் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அன்றைய அரபுகளின் ஏற்றம் மிக்க தலைவர் உமர், மதீனாவின் கோத்திரத் தலைவர் ஸஅது பின் முஆது, மாமன்னர் நஜ்ஜாஷி, என சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களையும் இந்த மார்க்கம் ஈர்த்தது.
இப்படி ஏராளமான செய்திகளைக் கூற முடியும். அவற்றையெல்லாம் கூறினால் அதற்கு இப்பக்கங்கள் போதாது.
இனி நீங்கள் கூறிய திருமணம் சம்மந்தப் பட்ட விஷயம். நபிகள் நாயகத்தை நீங்கள் நிராகரிப்பதால் இத்தகைய விமர்சனங்களை வைக்கின்றீர்கள. திருமணம் செய்யாமலிருப்பதே கடவுளுக்குப் பிடித்தமான செயல் என்று நடைமுறைக்கு ஒத்து வராத பைபிளின் தத்துவத்தின் அடிப்படையில் இஸ்லாமை நீங்கள் பார்ப்பதால் அனுமதிக்கப்பட்ட திருமணத்தைக் குறித்து நீங்கள் விமர்சிக்கின்றீர்கள. 1400 வருடங்களாக நபிகள் நாயகத்தை இறைதூதராக, இஸ்லாமைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்களின் திருமணம் குறித்துத் தெரியும். திரிபு வாதம் செய்து நீங்கள் குறிப்பிட்டது போல் அவர்கள் அதனை நம்பவில்லை. இறைதூதர்கள் அனைவரும் திருமணம் முடிப்பவர்களே! காரணம் அவர்களும் மனிதர்களே. இனி உங்களை நோக்கி ஒரு கேள்வி. பைபிளில் ஏராளமான தீர்க்கதரிசிகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்ததாகக் கூறப்பட்டுள்ளதே? இளம்பெண்கள், சிறுமியர் என்ற வித்தியாசம் இன்றி போரில் கைப்பற்றப்பட்ட பெண்களையும் போராளிகள் தங்களுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறதே? இந்த அடிப்படையை வைத்து பைபிளை நீங்கள் ஏன் விமர்சிக்கவில்லை? ஒர் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதை நிராகரித்த அன்றைய மக்கள்கூட அவர்களின் திருமணம் குறித்தோ அவர்கள் பெண்விரும்பி என்றோ விமர்சனங்களை வைக்கவில்லை. அதனால் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதை நிராகரிக்க இத்தகைய வாதங்கள் எடுபடாது. அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்தி, அதவது குர்ஆன், அதில் முரண்பாடு உள்ளதா? குழப்பம் உள்ளதா? இன்றைய காலத்துக்குப் பொருந்தாத சட்டம் உள்ளதா? அது இறைவேதம் இல்லை என்று கூற உங்களிடம் உள்ள நியாயங்கள் என்ன? அதைக் கூறுங்கள் அதற்கு நாம் பதிலளிப்போம். இதுவே நியாயமான விமர்சனமாக இருக்க முடியும். இதை விடுத்து இல்லை மீண்டும் நான் அதையே பிடித்து நிற்பேன் என்ற ரீதியில் உங்களது மறுமொழி இருக்குமானால் நிச்சயமாக அவை அலட்சியம் செய்யப்படும்.
//அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்கதான் உண்மை கடவுளை கும்பிடுறாங்க மத்தவங்க எல்லாம் சாத்தான கும்பிடுறாங்க. பிற கடவுள கும்பிடுரவங்க எல்லாம் கேவலமான காபிர்கள். இதெல்லாம் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது.//
சகோதரரே! யாரைத் திருப்திப்படுத்த இப்படிக் கூறினீர்கள்? பைபிளின் பழய ஏற்பாடு கூறும் ஒரே கடவுளை வணங்காமல் மற்றவர்களை எவரேனும் வணங்கினால் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று பைபிள் குறிப்பிடும் வரிகளை நீங்கள் கவனிக்கவில்லையா? இப்படிப்பட்ட விமர்சனத்தைக் கூறியதன் மூலம் உங்களின் முகத்திலேயே கரி வாரிப் பூசிக் கொண்டீர்களே?
அடுத்ததாக முந்தைய வேதங்களில் மனிதக் கரங்கள் விளையாடியதா என்பதற்கு விரிவான விளக்கங்கள் பதிவு செய்யப்படும். அதற்கு முன்னால் பினவரும் தொடுப்புகளை சற்று பார்வையிடுங்களேன்.
உங்களின் சிந்தனைக்காக சில வசனங்கள்:
முஹம்த் (ஸல்) அவர்கள் முந்தைய வேதங்களைக் குறித்து அறிந்திருக்கவில்லை:
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (29:48)
நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர். (42:52)
மர்யம் (அலை) அவர்களைக் குறித்த செய்திகள் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்!
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3:44)
முந்தைய நபிமார்கள் மற்றும் சமுதாயங்கள் பற்றிய வரலாறு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது தான்!
(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). (11:49)
இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது). (28:46)
(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். (12:3)
ரோமாபுரியின் வெற்றி குறித்த குர்ஆனின் முன்னறிவிப்பும், முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அது நடந்தேறியமையும் அதற்கு சாட்சி வகித்தவர்களும் அவர்களுக்கு அருளப்பட்டது இறை வசனங்கள்தான் என்பதற்கான சான்றுகள்!
அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்வடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (30:1-6)
எகிப்தில் கண்டெடுக்கப்பட்டு கெய்ரோ அருங்காட்சியகத்தில் பாதுகாகக்கப்பட்டுள்ள ஃபிர்அவ்னின் உடல் குறித்து 1400 வருடங்களுக்கு முன்னரே குர்ஆன் கூறிய செய்தி அது இறைவேதம் என்பதை நிருபிக்கிறது. ஆனால் ஃபிர்அவ்னைப் பற்றிய செய்திகளைக் கூறும் பைபிளில் இச்செய்தி இல்லை. இதனை ஆய்வு செய்த பிரான்சு நாட்டு மருத்துவ ஆயராய்ச்சியாளர் டாக்டர் மோரிஸ் புகைல் இஸ்லாமைத் தழுவினார்!
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (என்று அவனிடம் கூறப்பட்டது). (10:92)
நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற பத்றுப் போரில் மிகக் குறைந்த போர்த் தளவாடங்களை உடைய 313 முஸ்லிம் வீரர்கள் தங்களை எதிர்த்துப் போரிட நிறைந்த ஆயத்தங்களுடன் வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிரிகளை வெற்றி கொண்டனர். இதைப் பற்றிய முன்னறிவிப்பு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும்போதே இறைவனால் வழங்கப்பட்டது!
அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். (54:44, 45)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்டார்கள். அதன் பிறகு பல கோத்திரங்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமைத் தழுவியது. இது குறித்த ஒன்றுக்கு மேற்பட்ட முன்னறிவிப்புகளை குர்ஆன் அறிவித்தது. எந்த மாற்றமும் இல்லாமல் அவை நடந்தேறியது குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனால் அருளப்பட்டதுதான் என்பதற்கான உறுதியான சான்று ஆகும்!
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (48:1)
"(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்" (28:85)
அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்;. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (3:111)
"நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும் (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்" (48:27)
குர்ஆன் நம்மைப் படைத்த அந்த அகில உலகங்களின் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன. சத்தியத்தை நடுநிலையுடன் ஆராய்ந்து உண்மையை ஏற்றுக் கொள்ள ஜாண் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.
அபூ அப்திர்ரஹ்மான்
Thursday, November 20, 2008
கிறிஸ்தவம் பார்வை வலைப்பூவுக்கு கிறிஸ்தவர் அனுப்பிய பின்னூட்டங்களுக்கான மறுப்பு!
ஏகத்துவம் தளத்தில் வந்த பவுலும் கிறிஸ்தவமும் என்ற பதிவை எமது வலைப்பூவில் மறுபதிவு செய்திருந்தோம். அதற்கு ராபின் என்ற கிறிஸ்தவ நண்பர் ஒருவர் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பல பின்னூட்டங்களை அனுப்பியிருந்தார். அவருக்கு அளித்த பதில் இங்கு தனியாக பதிவு செய்யப்படுகிறது. அவர் அனுப்பிய பின்னூட்டங்களைப் பார்வையிட இங்கு சொடுக்கவும்.
Robin,
உதாரணமாக ஆண்டவன் பவுலுக்கு தரிசனமானதாகக் கூறப்படும் செய்திகளில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட செய்திகளே அவற்றின் உறுதித் தன்மையை சந்தேகிக்கின்றனவே?
பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் பொய் மலிந்துக் கிடப்பதால் தான் இதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துக்கொண்டிருக்கின்றது என்று அவர் எடுத்து வைத்த ஆதாரங்களுக்கு வரிக்கு வரி மறுப்பெழுதுங்கள். நியாயப் பிரமாணத்தைச் செயல்படுத்துவது குறித்து பைபிளின் பழய ஏற்பாடு கூறியதற்கொப்ப இயேசுவும் கூறியதற்கு முற்றிலும் முரண்பட்டு பவுல் கூறியதுடன் நியாயப் பிரமாணத்தில் செயல்படுத்தாவிட்டால் பெரிய பாவங்கள் என்று பைபிள் குறிப்பிட்ட பல விஷயங்களையும் பவுல் மறுத்துக் கூறியதையும் குறிப்பிட்டிருந்தாரே? அதற்கும் வரிக்கு வரி மறுப்பெழுதுங்கள். அதை விடுத்து கட்டுரையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஏறெடுத்தும் பார்க்காமல் சம்மந்தமில்லாத விஷயங்களையெல்லாம் தேடிக்கண்டுபிடித்து பதித்து வைத்து விட்டு இதோ மறுப்பெழுதிவிட்டோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். கட்டுரையில் கூறப்பட்ட விஷயங்களைக் குறித்த உங்களின் மவுனம் அதில் கூறப்பட்ட வாதங்கள் அனைத்தும் உண்மை என்பதற்கு ஆதாரம் ஆகும். இன்ஷா அல்லாஹ் மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்கள்.
//நீங்கள் என்னுடைய பின்னூட்டங்களை வெளியிட்டதற்கு கடைசியாக நான் அனுப்பிய பின்னூட்டம் தூண்டிய ரோஷம் தான் காரணம் என்று நினைக்கிறேன்.//
நீங்கள் என்னவேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. உங்களைப் போன்ற பிற கிறிஸ்தவர்கள் அனுப்பிய பின்னூட்டங்கள் பதியப்பட்டு மறுப்பும் சொல்லப்பட்டிருப்பதை முந்தைய பதிவுகளுக்குச் சென்று பார்வையிடுங்கள்.
//உங்களை போல் copy/paste செய்யும் வழக்கம் எனக்கில்லை என்பதால் அந்த தொடுப்பை கொடுத்தேன்.//
எம் சகோதரர் தளத்தில் பதிந்ததை மறுபதிவு செய்வது எங்கள் விருப்பம். அதைக் கேட்பதற்கு நீங்கள் யார்? உங்கள் தொடுப்புகளையே நாங்கள் வெளியிடமாட்டோம் என்ற பின் காப்பி பேஸ்ட்?
// //எங்கள் நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உங்களை நிர்பந்திக்கவில்லையே?// எங்கள் நம்பிக்கையை கிண்டல் செய்வது நியாயமா?//
யார் கிண்டல் செய்தார்கள்? கிறிஸ்தவம் மோட்சத்தின் வழி என்று நீங்கள் பிரச்சாரம் செய்தால் அந்த நம்பிக்கையைக் குறித்து கேள்வி எழுப்பும் உரிமை எங்களுக்கு உண்டு. அது சரி! கோடிக்கணக்கான மக்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபியைக் குறித்து மிக மோசமான உங்களைச் சேர்ந்தவர் விமர்சிப்பதைக் குறித்து? முதலில் உங்கள் உபதேசத்தை உங்கள் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள்.
//நீங்கள் கூறும் கற்பனைகளை நாங்கள் ஏன் சிந்திக்க வேண்டும். நாங்கள் ஆதாரத்தை வெளியிடுகிறோம்.// அப்படி என்ன ஆதாரத்தை வெளியிட்டு விட்டீர்கள்?
இஸ்லாமியத் தளங்களுக்குச் சென்று பாருங்கள். ஆதாரம் உங்களுக்குக் கிடைக்கும். உதாரணமாக
நபிகள் நாயகத்தின் தூதுத்துவத்தைப் பற்றிய கட்டுரைகள்:
சூரியனை என் வலக்கரத்திலும் சந்திரனை என் இடக்கரத்திலும்...
கிறிஸ்தவ விமர்சனங்களின் முதுகெலும்பை முறிக்கும் இஸ்லாமிய பதில்கள்:
என்ன முரண்பாடுகளை புட்டு வைத்தீர்கள்? கொஞ்சம் பட்டியலிடுங்களேன்? அப்படியெனில் முரண்பாடுகளற்ற பரிசுத்த(?) வேதத்தைத் தான் நீங்கள் வைத்துள்ளீர்களா? பைபிள் பற்றிக் கூறப்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு பதில் சொல்லி விட்டீர்களா?
//கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறியவேண்டாம் நண்பரே. குர்-ஆனில் உள்ள பல பகுதிகள் பைபிள்-இல் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்பதை மறக்கவேண்டாம்.//
நல்ல ஜோக். உங்களுக்கே திருப்பிக் கொள்ள வேண்டிய தத்துவம். பைபிளிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று பாமரர்களைத் தான் உங்களால் ஏமாற்ற முடியும். தக்க சான்றுகளுடன் வைக்கப்பட்ட திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா? இந்த மறுப்புக்கு பதில் சொல்லுங்கள்.
//கிறிஸ்தவத்தின் மீது நீங்கள் எறியும் ஒவ்வொரு கல்லும் உங்களை நோக்கியே திரும்பும் என்பதை மறக்க வேண்டாம்.//
இஸ்லாமை நோக்கி நீங்கள் எறிந்த கற்கள் பாராங்கற்களாகத் திரும்பி உங்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தானே இப்படி ஓலமிடுகிறீர்கள்?
//நீங்கள் எழுப்பும்/எழுப்பபோகிற ஒவ்வொரு கேள்விக்கும் ஏற்கனவே பதிலளிக்க பட்டுவிட்டன என்பதை மறக்கவேண்டாம்.//
ஏதோ சிலவற்றிற்கு நீங்கள் ப(தி)ல் இளித்துள்ளீர்கள்? அதிலும் பல ஆங்கில தளத்திலிருந்து காப்பி எடுத்து ஒப்பியது. பதிலளிக்காதவற்றைப் பட்டியலிடவா?
//இணைய தளத்தில் தேடி பாருங்கள். உங்களுக்கு தான் தொடுப்புகள் கொடுத்தால் பிடிக்காதே//
தேடவேண்டிய அளவுக்கு ஒன்றும் இல்லை. இஸ்லாமிய பெயரைத்தாங்கிய கிறிஸ்தவர் ஒருவரை நீங்கள் நம்பி உள்ளீர்கள். அவர் பதிப்பதை காப்பி எடுத்து அப்படியே பல தளங்களில் பதித்து வைக்கிறீர்கள். இதில் தேடிக் கண்டுபிடிக்க என்ன இருக்கிறது?
//பொதுவாக நீங்களெல்லாம் முகமதுவை விமர்சித்தால் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறீர்கள். ஆனால் பவுல் போன்றவர்களை மட்டும் உங்கள் இஷ்டத்துக்கு விமர்சிக்கிறீர்கள். //உங்களுக்கு இருப்பது போன்ற உணர்ச்சிகள் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மறக்கவேண்டாம்.//
உணர்ச்சி வசப்படுவது என்னபதற்கு என்ன இலக்கணம் கூறுகிறீர்கள்? கிறிஸ்தவத்துக்கு மறுப்பு எழுதுவது உணர்ச்சி வசப்படுதல் என்றால் கிறிஸ்தவர்கள் எழுதுவதை என்னவென்று கூறலாம்? கிறிஸ்தவர்கள் செய்யும் கீழ்த்தரமான விமர்சனங்களை என்னவென்று கூறுவது? உணர்ச்சி வசப்பட்டதால் தானே நீங்கள் இவ்வாறெல்லாம் பின்னூட்டமிடுகிறீர்கள்?
முஹம்மது (ஸல்) அவர்களை விமர்சிப்பதை பவுலை விமர்சிப்பதற்கு நீங்கள் ஒப்பிடக் கூடாது. நாங்கள் இயேசுவை விமர்சிக்கவில்லை. அவ்வாறு விமர்சிக்கவும் மாட்டோம். பவுலைக் குறித்து நாங்கள் அல்ல. ஆரம்பகால இயேசுவின் சீடர்களே கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இயேசுவின் உபதேசங்களுக்கும், பவுலின் இட்டுக் கட்டுதல்களுக்கும் பாரிய வேறுபாடு உள்ளமை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் உணர்ச்சி வசப்படாமல் அதற்கு மறுப்பெழுதுங்கள். சம்மந்தமில்லாதவற்றைக் கூறி விஷயத்திலிருந்து நழுவிச் செல்லாதீர்கள்.
//உங்களால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக விவாதிக்க முடியுமென்றால் நாளை விவாதிக்க நான் ரெடி. நீங்கள் ரெடியா?//
நாங்கள் ரெடி! உணர்ச்சி வசப்படுதல் என்ற சாக்கு போக்கைக் கூறி விவாதிக்க வருவதிலிருந்து ஓட்டம் பிடிக்காதீர்கள். இஸ்லாம் கிறிஸ்தவ விவாதங்கள் எத்தனையோ நடந்துள்ளன. நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் உங்கள் தரப்பிலிருந்து விவாதிக்க விரும்புபவர்கள் யார்? என்ன தலைப்பு? எங்கு? எப்போது? என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்யுங்கள். எங்கள் தரப்பிலிருந்து யார் வருவார் என்பதை அறிவிக்கின்றோம். என்ன தயாரா? விவாதத்தை எப்படி வைத்துக் கொள்ளலாம்? எங்கு? என்ன தேதி? உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
Tuesday, November 18, 2008
பவுலின் பொய்கள் கிறிஸ்தவத்தில் ஏற்படுத்திய தாக்கம்!
"இப்படி ஒரே சம்பவம் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட சம்பவம் கூடுதலாக கர்த்தரின்பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதப்பட்ட சம்பவம் உன்மையிலேயே நடந்ததாக இருந்தால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக வருமா?"
சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைலீசியாவிலுள்ள (இன்றைய துருக்கி) டார்சஸ் நகரில் பிறந்தவர். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பிறந்திருந்தாலும் இயேசுவை இவர் நேரில் சந்தித்ததாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. பிறப்பிலேயே யூதரான பவுல் இளமையிலேயே எபிரேயு மொழி கற்று, யூத கல்வியறிவில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
இவரும் இவரது தந்தையும் பரிசேயரை சார்ந்தவர்கள் என்று இவரே கூறியதாக அப்போஸ்தலர் நடபடிகள் கூறுகின்றது. (அபபோஸ்தலர் 23:6, 26:5) இந்த பரிசேயர் என்பவர்கள் யார்? அவர்கள் இயேசுவின் காலத்திலும் அவருக்குப் பின்னும் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்? என்பதை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் பின்வருமாறு கூறுகின்றது:
'பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும். இது சமய மற்றும் அரசியல் நோக்கந்களை கொண்டிருந்தது. திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாரலாம். இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர். ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர். தங்களை உத்தமரென்று பரைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர்.' பார்க்க : விக்கிபிடியா
இந்த பரிசேயர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று இயேசு தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் உபதேசித்தார். குறிப்பாக அவர்கள் எந்த செய்தியைக் கொண்டுவந்தாலும் அதிலிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். பார்க்க : (மத்தேயு 16:5-12, மாற்கு 8:14-21)
எந்த பரிசேயரைக் குறித்தும் அவர்கள் சொல்லும் செய்திகள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு எச்சரித்தாரே, அதே பரிசேயரைச் சேர்ந்த பவுல் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் கேட்டோமேயானால் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையுமே ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படும் செய்தியில் பொய் மலிந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அவர் இயேசு கொண்டுவந்த மார்க்கத்தையும், அவரின் கொள்கைகளையும் இயேசுவின் பெயராலேயே எப்படியெல்லாம் சீரழித்தார் என்பதற்கு இன்றைய பைபிளே சரியான சான்று.
பவுலின் ஆரம்பக் காலம் :
யூத மதத்தவரான பவுல் இயேசுவிற்கு பிறகு அவர் போதித்த இறைக்கோட்பாட்டிற்கும் அதை பின்பற்றியவர்களுக்கும் எதிரானவராக இருந்தார் என்று அப்போஸ்தல நடபடிகள் குறிப்பிடுகின்றது.
சவுல் வீடுகள் தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்தீரிகளையும் இழுத்துக் கொண்டு போய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்தான். (அப்போஸ்தலர் 8:3)
இந்தச் சவுல் என்னும் பவுல் இயேசுவைப் பின்பற்றியவர்களை துன்புறுத்தி வந்தான். அவர்கள் தமஸ்குவிற்கு தப்பிச் சென்ற பிறகும் அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக தலைமை குருவிடம் அதிகார கடிதம் வாங்கிக் கொண்டு சென்றதாக அப்போஸ்தலரின் நடபடிகள் கூறுகின்றது.
சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்தீரிகளையாகிலும் தான் கண்டு பிடித்தால், அவர்களை கட்டி எருசலேமுக்கும் கொண்டு வரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிரூபங்களைக் கேட்டு வாங்கினான். (அப்போஸ்தலர் 9:1-2)
இப்படி உன்மையான இயேசுவின் சீடர்களையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பல துன்பங்களைக் கொடுத்து பலரை கொலை செய்யவும் துடித்த யூதரான பவுல், திடீரென ஒரு அதிசயமான (?) சம்பவத்தின் மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டாராம். சூழ்சிகளுக்குப் பெயர் பெற்ற யூதர்களும் - இயேசுவால் மக்களுக்கு எச்சரிக்கப்பட்ட யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்களும் எப்படி எல்லாம் சத்தியத்தை சீரழிப்பதற்காக பொய் சொல்லத் துணிவார்கள் என்பதற்கு பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையே சரியான சான்று.
இயேசுவை பவுல் ஏற்றுக்கொண்டது எப்படி?
இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களை கொலைசெய்துக்கொண்டிருந்த பவுல் தீடீரென இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு காரணம் என்ன? அவர் எப்படி ஏற்றுக்கொண்டார்? என்பதை பவுலின் நன்பரான லூக்கா அப்போஸ்தலரின் நடபடிகள் என்றப் புத்தகத்தில் ஒரு பொய்யானக் கதையை சொல்லி மக்களை ஏமாற்ற முற்படுகின்றார் :
அவன் பிரயாணமாய் போய், தமஸ்குவுக்குச் சமீபித்த போது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன் : ஆண்டவரே, நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே : முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்த போது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தான். (அப்போஸ்தலர் 9:3-9)
அதாவது இயேசுவின் உன்மையான சீடர்களை துன்புருத்துவதற்காக தேடியவனாக தமஸ்காவுக்கு பயனம் செய்துக்கொண்டிருக்கும் வழியில் இந்த சம்பவம் (?) நடந்ததாக இந்த வசனங்களின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது.
இன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கு சொந்தக்காரரான பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி என்பது பற்றி சொல்லப்படும் இந்த சம்பவம் அவரும் அவரைச் சார்ந்தவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொய் என்பதற்கு அவர்களாளேயே எழுதப்பட்ட மற்ற மற்ற வசனங்களில் வரும் முரண்பாடுகளே சரியான சான்று.
இந்த அப்போஸ்தலர் 9:3-9 வசனங்களின் இடையே சில விஷயங்களை நன்றாக கவனிக்க வேண்டும்:
ஒன்று, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். என்பதன் மூலம் திடீரென வந்த ஒளி பவுலை மட்டும் சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் தரையிலே விழுந்தானாம்.
இரண்டு, நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். என்பதன் மூலம் பவுல் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டனத்துக்குச் சென்றதும் சொல்லப்படும் என்று இயேசு கூறினாராம்.
மூன்று, அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். என்பதன் மூலம் பவுலுடன் கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம் ஆனால் ஒருவரையும் காணவில்லையாம்.
நான்காவது, அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள் என்பதன் மூலம் பவுல் மட்டும் கீழே விழுந்ததால் மற்றவர்கள் அவரை கைலாகு கொடுத்து கூட்டிக்கொண்டு போனார்கள் என்கிறார்.
இவற்றுக்கெள்ளலாம் நேர் முரணாக அதே அப்போஸ்தலருடைய நடபடிகளின் மற்ற மற்ற இடங்களில் இதே சம்பவத்தை பற்றி எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள்:
அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமான போது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது : சவுலே. நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் : ஆண்டவரே நீர் யார் என்றேன். அவர் : நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர் நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். (அப்போஸ்தலர் 22:6-10)
இந்த வசனத்தில் அதே சம்பவத்தை சொல்லிவிட்டு என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. (அப்போஸ்தலர் 22:9) என்று சொல்லப்படுகின்றது. ஆனால் முன்பு நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? அவனோடு கூட பயனம் செய்தவர்கள் சத்தத்தைக் கேட்டார்களா? அல்லது கேட்கவில்லையா? வெளிச்சத்தைக் கண்டார்களா? அல்லது காணவில்லையா? இந்த ஒரே சம்பவத்தை ஒரே புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் (?) எழுதப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக 'பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதியுள்ளார் என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இவை எல்லாம் உன்மையாக இருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும்?
அடுத்து, இந்த இரண்டு வசனங்களில் வரும் சம்பவங்களும் ஒன்றுக்கொண்று நேர் முரணாக இருக்க, அதே பவுல் இயேசுவை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது பற்றி அதே அப்போஸ்தலர் என்ற புத்தகத்தில் மூன்றாவதாக மற்றோர் இடத்திலும் பவுல் சொல்வது போல் சொல்லப்படுகின்றது. அந்த இடத்தில் இந்த இரண்டு வசனங்களுக்கும் நேர் முரனாக சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள்.
'இப்படிச் செய்து வருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும் போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனே கூடப் பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். நாங்களெல்லோரும் தரையிலே விழுந்த போது : சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்ப்பபடுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்' (அப்போஸ்தலர் 26:12-14)
முதல் அறிவிப்பில் பவுலை மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்பொழுது அவனோட கூட பிரயானம் பன்னியவர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம். ஆனால் ஒளியையோ அல்லது வேறு யாரையுமோ பார்க்கவில்லையாம்.
இரண்டாவது அறிவிப்பிலும் பவுலை மட்டுமே அந்த ஒளி சுற்றி பிரகாசித்தாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்போது அவனோட கூட பிரயானம் பன்னினவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயம் அடைந்தார்களாம். ஆனால் சத்தத்தையோ கேட்கவில்லையாம்.
மூன்றாவது அறிவிப்பில் பவுலையும் பவுலோடு கூட பிரயானம் பண்ணினவர்களையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் கீழே விழுந்துவிட்டார்களாம். இவற்றில் எது சரி? முதல் இரண்டு அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? அல்லது மூன்றாவது அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் எல்லோரையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? முதல் அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் கீழே விழுந்தாரா? அல்லது அவனோடு கூட பிரயானம் பண்ணிவர்கள் அனைவரும் சேர்ந்து கீழே விழுந்தார்களா?
இது மட்டுமல்ல முதல் அறிவிப்பில் பவுல் மட்டுமே கீழே விழுந்ததால், அவனை மற்றவர்கள் கைலாகு கொடுத்து தூக்கி விட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு மாறாக மூன்றாவது அறிவிப்பில் எல்லோருமே கீழே விழுந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. அப்படி என்றால் முதல் அறிவிப்பின் படி கைலாகு கொடுத்து தூக்கிவிட்டார்கள் என்பது எப்படி சரியாகும்?
முதல் இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொண்று முரணாயிருக்க அந்த இரண்டிற்கும் நேர்முரணாக இந்த மூன்றாவது அறிவிப்பு எந்த அளவுக்கு முரணாக இருக்கின்றது என்று கவனித்தீர்களா சகோதரர்களே?
இது மட்டுமல்லாமல் இதே கதையில் வேறு சில முரண்பாடுகளையும் பாருங்கள். அப்போஸ்தலர் 9: 5-10 மற்றும் 22:10-15ம் வசனத்தின் படி பவுல் என்ன செய்யவேண்டும் என்பதை தமஸ்காவுக்கு போனதும் சொல்லப்படும் என்று இயேசு சொன்னதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அப்போஸ்தலர் 26:16-18 ம் வசனங்களில் அதே இடத்திலேயே அவரை புறஜாதியருக்கு பிரச்சாரம் செய்ய நியமித்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதில் எது சரி? பவுல் செய்யவேண்டியதை சம்பவ இடத்திலேயே சொல்லப்பட்டதா? அல்லது பட்டனத்திற்கு சென்றதும் சொல்லப்படும் என்று சொல்லப்பட்டதா?
இப்படி ஒரே சம்பவம் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட சம்பவம் கூடுதலாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதப்பட்ட சம்பவம் உன்மையிலேயே நடந்ததாக இருந்தால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக வருமா? அதுவும் இந்த பவுல் ஒரு சாதாரண ஆளாக இருந்தால் விட்டுவிடாலம். மாறாக, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்கு ஆசிரியர். இன்றைய நவீன கிறிஸ்துவத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர். இவர் போதிக்கும் கொள்கையை மறுப்பவன் இரட்சிப்பை பெறமுடியாது, அவன் பரலோகத்தை அடைய மாட்டான் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. இயேசுவின் போதனைகளுக்கும் எதிரான பல புதிய கருத்துக்களைப் புகுத்தும் அதிகாரம் உடையவராக தன்னைக் காட்டிக்கொள்கின்றார். அதை இயேசுவே தனக்கு போதித்ததாகவும் சொல்கின்றார். ஆரம்பக்காலத்தில் உன்மையான இயேசுவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யத் துடித்தவர் இந்த பவுல். அப்படிப்பட்டவர் திடீரென இயேசுவை ஏற்றுக்கொண்ட சம்பவத்தில் எப்படி இந்த அளவுக்கு முரண் வரலாம்? இந்த சம்பவம் உன்மையானதாக இருந்தால் எப்படி இந்த அளவுக்கு முரண்வரும்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டுமா?
உன்மையில் சொல்லவேண்டும் என்றால் பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் பொய் மலிந்துக் கிடப்பதால் தான் இதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துக்கொண்டிருக்கின்றது. இந்த பவுலும் இவரைச் சார்ந்தவர்களும் தங்கள் மனம்போன போக்கில் எழுதிய புத்தகங்களை தான் இன்றைய கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதிக்கொண்டிருக்கின்றனர்.
Saturday, November 15, 2008
இன்றைய கிறிஸ்தவத்தின் நிறுவனர் யார்? ஒரு வரலாற்று ஆய்வு!
இன்றைய கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய
பைபிளின் புதிய ஏற்பாட்டின் மொத்தமுள்ள 27 புத்தகங்களில் 14 புத்கங்களுக்கு சொந்தக்காரர் இந்த பவுல் என்று சொல்லப்படுகின்றது. இவர் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளவர்களுக்கு கடிதங்களாக எழுதப்பட்டது என்றாலும், அவற்றையே தற்போது வேதம் என்றப்பெரில் பைபிளில் இனைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாடு முழுவதும் இயேசுவுக்கோ அல்லது இயேசுவின்
சீடர்களுக்கோ சொந்தமானதல்ல.
பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 1)
- அபூ இப்றாகீம்
இன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்...
கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களுக்கு ஆசிரியர் என்று நம்பப்படுபவர்...
இயேசுவே அறியாத பல புதிய கொள்கைகளை அவரின் பெயராலேயே போதித்தவர்...
இவர் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமோ அதன் கொள்கைகளோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மதத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்...
இயேசு, சத்தியத்தை உரத்து போதித்தார் என்பதன் காரணமாக யூதர்களின் கொலை வெறிக்கு ஆளாகி (பைபிளின் படி) சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக - அந்த பாவத்தைப் போக்கும் வகையில், இயேசு நமக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்டார் என்று சொல்லி, அந்த கொலை சம்பவத்தை தியாகத்தின் சின்னமாக மாற்றி பிரச்சாரம் செய்தவர் ...
முன்னர் உள்ள தீர்க்கதரிசிகளும் இயேசுவும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டையோ அல்லது அதன் கட்டளைகளையோ நாம் பின்பற்றத் தேவையில்லை, அது பலவீனமடைந்துவிட்டது, அது பயனற்று போய்விட்டது என்று போதித்தவர் ... அவற்றில் தடுக்கப்படவைகளை அனுமதித்தவர்... அவற்றில் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதை செய்யலாம் என்று போதித்தவர்...
இவர் எதை போதித்தாரோ அதுதான் இன்றைய கிறிஸ்தவமதத்தின் ஆணிவேர், அது தான் இன்றைய கிறிஸ்தவ மதத்தின்தலையாய கொள்கை, இவர் சொன்ன கொள்கைகளை நம்பாதவன் கிறிஸ்தவனே அல்ல, அவன் இரட்சிப்பை பெற முடியாது - அவன் நித்திய ஜீவனை அடைய முடியாது என்று சொல்லப்படும் அளவுக்கு கிறிஸ்தவ மதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் அவர் யார்? என்றால்,
அவர் தான் கிறிதவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படும் புனிதப் பவுல் !
இப்படி சொன்னது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் அது தான் மறுக்கமுடியாத சத்தியமான உன்மை!
இவரைப்பற்றி வரலாற்று ஆசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் தனது 'THE 100' என்ற புத்தகத்தில் சொல்லும்போது,
'புதிய கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் முன்னனியில் இருந்தவர். பிற கிறிஸ்தவ எழுத்தாளரையும் சிநிதனையாளரையும் விட இவரே கிறிஸ்துவ இறையியலில் நிலையான, மிகப் பரந்த விளைவுகளை ஏற்படுத்தியவராவார்' என்கிறார். மற்றோர் இடத்தில்,
'கிறிஸ்துவத்தின் முக்கியமான அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு இயேசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால் மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்' என்கிறார்.
என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பவுலைப் பற்றிக் கூறும் போது :
எழுத்தாளர்களின் ஒரு அங்கம், உதாரணத்திற்கு W. Wrede அவர்களைப் போன்றவர்கள் பவுலை கடுமையாக எதிர்க்கின்றார்கள். கிறிஸ்தவ மதத்தின் இரண்டாவது நிறுவனர் என்று ஆகும் அளவுக்கு பவுல் அதை மாற்றி விட்டார் என அவர்கள் கருதுகின்றனர். உண்மையைச் சொல்லப் போனால், அவர் தான் சர்ச்சினுடைய கிறிஸ்தவ மதத்தின் நிறுவனரே ஆவார். அந்த சர்ச்சினுடைய கிறிஸ்தவமோ இயேசு போதித்த கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணானதாகும். நீங்கள் இயேசுவைப் பின்பற்றலாம் அல்லது பவுலைப் பின்பற்றலாம். ஆனால் இருவரையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முடியாது என அவர்கள் கூறுகின்றார்கள்.
தலைசிறந்த கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் மாக்கினோன் பகிரங்கமாக உன்மைகளை ஒப்புக்கொள்கின்றார் :
'அவர் போதித்த கருத்தோட்டஙகள் அவரிலிருந்து உதித்தது தான் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவருக்கு இயேசு நேரடியாகப் போதித்தார் என்று அவர் கூறினாலும் அவர் போதித்தது இயேசுவின் போதனைகளுக்கு ஒத்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. அதே நேரத்தில், நியாயப் பிரமாணம் பற்றி இயேசுவின் கொள்கை பவுலின் கொள்கையோடு ஒத்துப் போகவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது, தான் இயேசுவிடமிருந்து நேரடியாக செய்திகளைப் பெற்றேன் என்று பவுல் கூறுவது பிரச்சினைக்குரிய ஒன்றாகத் தான் இருக்கின்றது' என்று கூறுகின்றார்.
இன்றைய கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பைபிளின் புதிய ஏற்பாட்டின் மொத்தமுள்ள 27 புத்தகங்களில் 14 புத்கங்களுக்கு சொந்தக்காரர் இந்த பவுல் என்று சொல்லப்படுகின்றது. இவர் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளவர்களுக்கு கடிதங்களாக எழுதப்பட்டது என்றாலும், அவற்றையே தற்போது வேதம் என்றப்பெரில் பைபிளில் இனைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாடு முழுவதும் இயேசுவுக்கோ அல்லது இயேசுவின் சீடர்களுக்கோ சொந்தமானதல்ல. (இது குறித்து மேலும் விரிவான கட்டுரை விரைவில் இன்ஷா அல்லாஹ்) மாறாக இவரும் இவரைச்சார்ந்தவர்களும் எழுதியதே. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், இவரும் இவரைச் சார்ந்தவர்களும் ஏற்படுத்தியதே புதிய ஏற்பாடும், அதைச் சார்ந்துள்ளதாக சொல்லப்படும் இன்றைய கிறிஸ்தவ மதமும்.
பவுலின் நன்பரான லூக்காவால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் - அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் பற்றி கூறும் - Acts of Appostle - என்ற புத்தகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் பவுலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. Acts of Appostle என்ற ஆகாமம் இயேசுவின் சீடர்களின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறப்படும் புத்தகம் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் 28 அதிகாரங்கள் உள்ள புத்தகத்தில் 9 முதல் 28 வரையிலான அதிகாரங்கள் - கிட்டத்தட்ட 19 அதிகாரங்கள் - பவுலின் செயல்பாடுகள் பற்றித்தான் பேசுகின்றது. இந்த புத்தகத்தை அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் என்று குறிப்பிடுவதை விட பவுலின் செயல்பாடுகள் என்று குறிப்பிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லலாம், என்கிற அளவுக்கு அந்த புத்தகத்தில் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பவுலும் பவுலைச் சார்ந்தவர்களும் எதை எல்லாம் எழுதிவைத்தார்களோ அவை அனைத்துமே வேதவாக்கியம் என்ற சாயத்தை பூசி அவை அனைத்தும் கடவுளால் அருளப்பட்டது என்று சான்றிதழ் கொடுத்தவரும் இவரே. அதனால் தான் புதிய ஏற்பாட்டாளர்கள் எதை எழுதிவைத்தாலும் எப்படி எழுதி வைத்திருந்தாலும், அது எந்த அளவுக்கு முரண்பாடாகவும் குழப்பமானதாகவும் அறிவுக்கு பொருந்தாததாக இருந்தாலும், ஏன் இயேசுவின் வார்த்தைகளுக்கும் அவரது போதனைகளுக்குமே நேர் முரணாக இருந்தாலும் அவை அனைத்தையும் இன்றைய கிறிஸ்தவர்கள் அப்படியே கண்மூடி பின்பற்றுவதற்கு காரணம், பவுல் 2 திமோத்தேயு 3:16ன் மூலம் 'அவை அனைத்து வேதவாக்கியங்கள்' என்று கொடுத்த சான்றிதழே.
பவுலும் அவர் சொன்ன கொள்கைகளும் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்கிற அளவுக்கு அம் மதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் பவுல் என்பவர் யார்? அவர் இயேசுவின் சீடரா? அல்லது இயேசுவின் உறவினரா? அல்லது இயேசு வாழ்ந்த காலத்தில் ஏதாவது ஒரு வகையில் அவருக்கு உதவி செய்தவரா? உன்மையில் அவர் யார்?
Tuesday, November 11, 2008
குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும் ஒரு வரலாற்றுப் பார்வை
"பைபிளில் எங்குமே குறிப்பிடப் படாத யஹ்யா என்ற உண்மைப் பெயரை குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றாகும்! குர்ஆனில் சரித்திர தவறு இருக்கிறது என்ற விபரீத ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறித்தவர்களுக்கு சவுக்கடியாகவே சரித்திர ஆதாரங்கள் அமைந்துள்ளன".
பைபிள் இறைவேதமல்ல என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் பைபிளிலிருந்தே விவரித்துக் காட்டிய போது அதற்கு மறுப்பளிக்க இயலாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த மிஷினரிகளுக்கு ஆறுதலாக குர்ஆனை விமர்சிக்கும் ஒரு இணைய தளம் கிடைத்தது. இவர்களைப் போன்றே சர்வதேச அறிஞர்களால் பைபிள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க இயலாத கிறித்தவ மிஷினரிகளின் மூளையில் உதித்த தந்திரத்தின் வெளிப்பாடே குர்ஆனின் மீதான குற்றச்சாட்டுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மகத்தான அற்புதம்! இவர்கள் எந்தெந்த வசனங்களைக் குறித்துக் குற்றம் சாட்டுகிறார்களோ அந்த வசனங்கள் குர்ஆனின் மகத்துவத்தைப் பறை சாற்றுவதாகவும் அது இறைவேதம் என்பதற்கான ஆதாரமாகவும் உள்ளது. குர்ஆனை விமர்சித்தால் முஸ்லிம்கள் அதற்கு பதிலளிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டுவிடுவார்கள் பைபிளை விமர்சிக்க மாட்டார்கள் என்ற இவர்களின் சர்வதேச தந்திரத்தை நடைமுறைப் படுத்தி வருகிறார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அவனது மகத்தான பேரொளிக்கு முன்னால் இவர்கள் வைக்கும் புரட்டு வாதங்கள் எரிந்து சாம்பலாகி விடும் என்பது நிச்சயம்!
யஹ்யாவும் யோவானும்
குர்ஆனில் 19 ஆம் அத்தியாயத்தில் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. நெடுங்காலமாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையைக் குறித்து நற்செய்தி கூறினான். இதைப் பற்றிக் கூறும் வசனம்.
"ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" ( (19:7)
மேற்கண்ட வசனத்தில் (ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகனுக்கு வழங்கப்பட்ட பெயரான) யஹ்யா என்ற பெயர் முன்பு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த யஹ்யாவை பைபிள் யோவான் என்று கூறுகிறது. (குர்ஆனில் குறிப்பிடப்படாத) இந்த யோவான் என்ற பெயர் முன்பு பலருக்கும் வழங்கப்பட்டதாக பைபிள் கூறுகிறது. எனவே இது குர்ஆனில் உள்ள ஒரு வரலாற்றுப் பிழை. இதுவே மிஷினரிகளின் குற்றச் சாட்டு.
விளக்கம்
1. பைபிள் கூறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குர்ஆனை ஆராய வேண்டுமெனில் முதலில் பைபிளின் புனிதத் தன்மை நிரூபிக்கப்பட வேண்டும். பைபிளில் ஏராளமான வரலாற்று முரண்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில் புரோகிதர்கள் தங்கள் விருப்பப்படி எழுதியதால் அதில் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்களும் முரண்பாடுகளும் மலிந்துள்ளன என்று நாம் கூறி வருகிறோம். இந்நிலையில் முதலில் பைபிளின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்காமல் பைபிளை அடிப்படையாகக் கொண்டு குர்ஆன் கூறும் தகவலை உரசிப் பார்த்தல் என்ற அடிப்படையே தவறாகும்.
2. குர்ஆனில் ஜாண் என்றோ யோவான் என்றோ யோஹனான் என்றோ ஒரு பெயர் இல்லை, யஹ்யா என்பதும் யோவான் (அல்லது ஜாண் அல்லது யோஹனான்) என்பதும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பொருள்களைக் கொண்ட இரண்டு பெயர்கள் என்று ஒரே வரியில் உள்ள மறுப்பே இதற்குப் போதுமானது. இருப்பினும் இவர்களில் சிலரையேனும் சிந்திக்க வைக்கக் கூடும் என்பதால் இது பற்றிய ஒரு விசாலமான ஆய்வு இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த ஆய்வில் முதலாவதாக நாம் பார்க்க வேண்டியது குர்ஆனில் உள்ள யஹ்யா என்ற பெயரும் பைபிளில் உள்ள யோவான் என்ற பெயரும் ஒன்றுதானா? என்பதைப் பற்றியாகும்.
மேற்கண்ட வசனத்திற்கு சில ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் யஹ்யா என்ற இடத்தில் ஜாண் என்று நோரடியாகவும் சிலர் அடைப்புக் குறிக்குள்ளும் குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை கிறித்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் அந்த வார்த்தையை பயன் படுத்தியிருக்கலாம். தமிழ் தர்ஜமாக்களில் எங்கேனும் யோவான் என்று உள்ளதா என்று துளாவியவர்களுக்கு கிடைத்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் யஹ்யா என்றே உள்ளது. மேலும் ஜலாலைன் தஃப்ஸீர் என்று இவர்கள் மேற்கோள் காட்டியதின் அரபிப் பதிப்பில் யோவான் என்ற பதமே இல்லை. மாறாக யஹ்யா என்றே உள்ளது.

எது எவ்வாறாயினும் குர்ஆனில் சில மொழி பெயர்ப்பாளர்கள் ஜாண் என்று குறிப்பிட்ட பெயரும் குர்ஆனில் காணப்படும் யஹ்யா என்ற பெயரும் முற்றிலும் வேறுபட்ட பொருள் உடைய இரண்டு பெயர்களாகும்.
யஹ்யா - யோவான் இரண்டும் ஒன்றா?
குர்ஆனில் இதற்கு முன்பு இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது யஹ்யா என்ற பெயராகும். யஹ்யா என்பதும் யோவான் என்பதும் ஒரே பதம் என்று தவறாகக் கருதிய சில மொழி பெயர்ப்பாளர்கள் தங்கள் மொழி பெயர்ப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் யோவான் என்ற பதத்தின் அரபிப் பதமே யஹ்யா என்பதாக இருந்தால் அரபு மொழியில் உள்ள பைபிளிலும் இதே பெயர் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். (இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற பதமே அரபி பைபிளில் உள்ளது என்பதை முன்பு விளக்கியிருந்தோம்). அரபி பைபிளிலிருந்து சில உதாரணங்கள்:

(எஸ்றா 8:12)
(யோவான் 1:6)
மேற்கண்ட ஆதாரத்தின் அடிப்படையில் குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ள யஹ்யாவும் பைபிளில் குறிப்பிடப் பட்டுள்ள யோவானும் ஒன்றல்ல என்பதை விளங்ககிக் கொண்டோம்.
யோவான் (யோஹனான்) என்பது ஹீப்ரு வார்த்தை. யஹ்யா என்பது அரபிப் பதம். யோவான் என்ற ஹீப்ரு பதம். யோவான் என்ற ஹீப்ரு பதத்தின் அரபிப் பதமே யஹ்யா என்றிருப்பின் இரண்டினதும் பொருள் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா? யோவான் (யோஹனான்) என்ற ஹீப்ரு பதத்தின் பொருள் யெஹோவாவின் கிருபை அல்லது யெஹோவாவின் இரக்கம் என்பதாகும். அதாவது இரண்டு வார்த்தைகளை உடைய ஒரு வாக்கியம். யூ + ஹனான் = யூஹனான். யூ என்பது யெஹோவாவையும் ஹனான் என்பது கிருபையையும் குறிக்கும். ஹன்னான் என்ற ஹீப்ரு பதம் இரக்கம், கிருபை என்ற பொருளை ஹனான் என்ற அரமாயிக் மூலத்திலிருந்து உருவான பதமாகும்.
யஹ்யா என்ற அரபிப் பதம் ஹயா என்ற மூலப் பதத்திலிருந்து உருவானதாகும். இதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. முதலாவது அல்-ஹயாத் என்ற பதத்திலிருந்து உருவான 'ஜீவன்' அல்லது 'உயிர்' என்ற பொருளுடையது. இரண்டாவது அல்-ஹயா என்ற மூலப் பதத்திலிருந்து உருவான 'வெட்கம்', 'நாணம்' என்ற பொருளைக் கொண்டதாகும்.
யஹ்யா என்ற பெயரும் யோவான் என்ற பெயரும் முற்றிலும் மாறுபட்ட பெயர்கள் ஆகும் என்பதை விளக்கினோம். மிஷினரிகளின் விமர்சனம் அடிப்படையற்றது என்பதற்கு இவை போதுமான ஆதாரங்களாகும்.
3. குர்ஆனின் கூற்றை உண்மைப் படுத்தும் இன்னும் சில சான்றுகள்
நாங்கள் யோவான் ஸ்நானனைப் பின்பற்றுபவர்கள் என்றும் அவர் இறுதி இறைதூதர் என்றும் நம்பக்கூடிய ஒரு மதப் பிரிவினர் ஈராக் மற்றும் ஈரானில் இன்றும் காணப்படுகின்றனர். போர்ச்சுகீஸ் கிறித்தவ மிஷினரிகள் இவர்களை யேவானுடைய கிறிஸ்தவர்கள் (Christians of John the Baptist) என்று அழைக்கின்றனர். ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றும் இவர்கள் ஞானஸ்நானம் செய்வதை தங்களின் முக்கிய மதச் சடங்காகக் கடைபிடித்து வருகின்றனர். தங்கள் மதத்தைக் குறித்து மந்தாய் என்றும் தங்களை மந்தாயியர்கள் என்றும் இவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இஸ்லாமில் உள்ளது போன்று பிரார்த்தனை, நோன்பு, தர்மம் செய்தல் போன்ற சில மதச் சடங்குகளை இவர்களும் கடைபிடித்து வருகின்றனர். அரமேய மொழியுடன் தொடர்புடைய ஸெமிட்டிக் வழக்கைக் கொண்ட மந்தாயி என்னும் மொழியில் (Mandiac language ) இவர்களின் மத கிரந்தங்கள் எழுதப்பட்டுள்ளன. கின்ஸா ராபா, த்ராஷா இத் யஹ்யா, ஆதாம் போஹ்ரா, தி கிலெஸ்தா, நியானி முதலானவையே இவர்களுடைய மத புத்தகங்களாகும் (Ref: http://www.mandaeans.org/aboutthemandaeans.htm)
தாங்கள் இறைதூதராகவும் குருவாகவும் ஏற்றுக் கொண்ட யோவான் ஸ்நானனைக் குறித்து இவர்கள் கூறுவது யஹ்யா யூஹனான் என்பதாகும். இவர்களின் ஒரு மதநூலின் பெயரே த்ராஷா இத் யஹ்யா என்பதைக் கவனிக்க. (Drasha id Yahia: It includes the teachings and wise sayings of the prophet Yehia bin Zekaria.) யஹ்யாவின் புத்தகம் என்பது இதன் பொருளாகும். இவர்களுடைய முக்கிய மத நூலாகிய கின்ஸா ராபாவில் (Ginza Raba) 410 வது அத்தியாயத்தின் தலைப்பு யஹ்யாவின் பிரார்த்தனைகள் என்பதாகும். இவற்றின் மூலம் ஜகரிய்யாவின் புதல்வருக்கு யஹ்யா மற்றும் யோஹனான் ஆகிய இரண்டு பெயர்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.
மந்தாயி மக்களைப் பற்றியும் அவர்களின் மதச் சடங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியாளராகிய இ.எஸ் ட்ரோவர். இவரும் மார்க்குச் என்பவரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு அகராதி (E.S. Drowoer & R. Marcuch: A MANDAIC DICTIONARY 1963 OXFORD) மந்தாயியர்களின் மத அடிப்படைகளையும் சடங்குகளையும் உள்ளடக்கியதாகும். இப்புத்தகத்தின் 185 மற்றும் 190 ஆம் பக்கங்களில் முறையே யஹ்யா மற்றும் யூஹனான் ஆகிய இரு பெயர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. அவற்றைக் காண்க.


இத்தகைய ஆதாரங்களிலிருது நமக்குச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. அதாவது ஒவ்வொரு மந்தாயியர்களுக்கும் மல்வாஷா பெயர் என்றும் லகப் என்றும் இரண்டு பெயர்கள் வழங்கப் படுகின்றன. எதற்காக இவ்விரு பெயர்கள்? இ.எஸ் ட்ரோவர் எழுதுகிறார்: இரண்டாவது பெயர் பொதுவாக வழங்கப்படும் முஹம்மதிய பெயராகும். இவையே வழக்கமாக உபயோகிக்கப் படுகிறது. முதலாவது பெயர் அவருடைய உண்மையான ஆன்மீகப் பெயராகும். மதம் மற்றும் சடங்குகள் சம்மந்தப் பட்ட காரியங்களில் இப்பெயர் வழங்கப்படும். (E.S. Drower. The Mandaeans of Iraq and Iran (1962-Lieden) Page 81)
யோவான் ஸ்நானனுடைய மால்வாஷா நாமம் (இயற்பெயர்) யஹ்யா என்பதும் அவருடைய லகப் (சிறப்புப்) பெயர் என்றும் இந்தக் குறிப்புகள் கூறுகின்றன. மக்கள் பொதுவாக அவரை யோஹன்னான் என்று அழைத்தார்கள். ஆனால் அவரது உண்மையான ஆன்மீகப் பெயர் யஹ்யா என்பதாகும். மத சம்மந்தமான விஷயங்களில் இப் பெயரே புழங்கப் பட்டுள்ளது. யஹ்யாவின் புத்தகங்களில் பெரும்பாலும் இப்பெயரைக் கொண்டே துவங்குகிறது. ஆக யஹ்யா என்பது அவருடைய உண்மைப் பெயராகவும் அதே சமயம் மக்கள் அவரை யோஹன்னான் என்று அழைத்து வந்தனர் என்பதும் புலனாகிறது.
இதற்கு முன் இப்பெயர் வழங்கப்படவில்லை என்ற குர்ஆனின் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வனின் உண்மைப் பெயராகிய யஹ்யா என்ற பெயர் குறித்தாகும். அவரது சிறப்புப் பெயராகிய யூஹனான் என்ற பெயர் குறித்து அல்ல. யஹ்யா என்பது இறை கட்டளைப்படி அவரது தாய் தந்தையர்கள் அவருக்கு வழங்கிய பெயராகும். மேலும் அது அவரது உண்மையான ஆன்மீகப் பெயர் என்ற மந்தாயி மக்களின் மத நூல்களில் காணப்படும் குறிப்புகள் குர்ஆன் இறை வாக்கு என்பதை இன்னும் உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்ற வாதத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகவும் உள்ளது. பைபிளில் எந்த இடத்திலும் குறிப்பிடப் படாத யோஹன்னான் ஸ்நானனின் உண்மைப் பெயராகிய யஹ்யா என்ற நாமம் குர்ஆனில் கூறப்படுள்ளது அது இறைவாக்கு என்பதற்கான ஆதாரம் என்பது மிகப்பெரிய உண்மையாகும். ஆக மிஷினரிகள் குர்ஆனில் சரித்திர தவறு உள்ளது என்பதற்கு கண்டு பிடித்த ஆதாரம் குர்ஆன் இறைவாக்கு என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
4. பைபிளில் ஏன் யோவான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது?
பைபிளில் யோஹன்னான் ஸ்நானனைக் குறித்த சுவிசேஷங்கள் அவருக்குப் பின்னர் அறுபதோ எழுபதே ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டவை ஆகும். மேலே குறிப்பிட்டதைப் போல் யோஹன்னான் ஸ்நானனைக் குறித்து அன்றைய மக்கள் வழங்கிய பெயராகிய யோவான் என்பதைக் குறித்த சுவிஷேச எழுத்தர்கள் அவருடைய உண்மைப் பெயராகிய யஹ்யா என்பதை அறியாமல் இருந்து விட்டனர் என்றே கூற வேண்டும். கேள்விப்பட்டதன் அடிப்படையில் உருவாக்கப் பட்ட சுவிசேஷங்களில் யோவான் என்ற அவரது குறிப்புப் பெயர் இயல்பாகவே இடம் பெற்றுவிட்டது.
5. யோஹன்னான் என்ற பதம் குறித்துக் குர்ஆன் என்ன கூறுகிறது?
யூ + ஹன்னான் ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்ந்த ஹீப்ரூ பத மே யூஹன்னான் என்பதையும் கிருபை அல்லது இரக்கம் என்பதே இதன் பொருள் என்பதையும் முன்னர் விளக்கினோம். அரபி, ஹீப்ரு மற்றும் அரமாய மொழி ஆகிய மூன்றும் ஒரே வகையான செமிட்டிக் இனத்தைச் சேர்ந்தவை. இரக்கம் அல்லது கிருபை என்ற பொருளைத் தரக்கூடிய அரபிப் பதம் ஹனான் என்பதாகும். அற்புதம்! திருக்குர்ஆனின் 19 ஆம் அத்தியாயம் 13 ஆம் வசனத்தைக் காண்க.

மேற்கண்ட வசனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு.
“அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்) இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார். (19:13)
நம்மிடமிருந்து இரக்கசிந்தனை என்ற வாக்கியத்தின் மூல மொழியில் வ ஹனானன் மின் லதுன்னா என்று உள்ளது.
யூ ஹனானன் என்ற இரண்டு வார்த்தைகளில் உள்ள ஹனான் என்ற பதம். ஆக யூ ஹனான் என்ற பதத்திற்கு என்ன பொருளோ அதே பொருளைக் கொண்ட ஒரு பெயர் குர்ஆனில் யஹ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளமை அவருக்கு இப்படி ஒரு சிறப்புப் பெயர் இருந்ததைக் காட்டுகிறது.
முடிவுரை:
குர்ஆன் இதற்கு முன்னர் அப்பெயர் வழங்கப்படவில்லை என்று வழங்கியது யஹ்யா என்ற பெயராகும். யோவான் அல்லது யோஹன்னான் என்ற பெயர் அவரது சிறப்புப் பெயராகும். பைபிள் எழுதிய எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் எந்தப் பெயரால் பிரபலமடைந்தாரோ அந்த பெயரை எடுத்துக் கொண்டு அவரது இயற்பெயரை விட்டு விட்டனர். காரணம் அது குறித்து அவர்கள் அறியவில்லை. குர்ஆன் இறை கட்டளையால் அவரது தாய் தந்தையர் அவருக்கு வழங்கிய பெயரைக் கூறுகிறது. பைபிளில் எங்குமே குறிப்பிடப் படாத யஹ்யா என்ற உண்மைப் பெயரை குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றாகும்! குர்ஆனில் சரித்திர தவறு இருக்கிறது என்ற விபரீத ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறித்தவர்களுக்கு சவுக்கடியாகவே சரித்திர ஆதாரங்கள் அமைந்துள்ளன.
Source: Islamkalvi.com
Saturday, November 8, 2008
திருக்குர்ஆனின் பார்வையில் இறை நூல்கள்!
பைபிளை இறைவேதம் என்று கூற வேண்டுமானால் மேலே தவ்றாத் இஞ்சீல் ஆகிறவற்றைக் குறித்த குர்ஆன் கூறும் அளவு கோல் பைபிளுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. பைபிள் முழுக்க முழுக்க மனிதர்களால் தொகுக்கப்பட்டது என்பதற்கு பைபிளே சான்று பகர்கிறது. மேலும் பைபிளில் காணப்படும் முரண்பட்ட கருத்துக்கள் அதனை இறைவேதம் என்று கூற முடியாத அளவுக்கு உள்ளது.
மானிட சமூகம் இப்பூவுலகில் வேரூன்றிய ஆரம்ப கட்டத்தில் இன்று காணப்படுவது போல் சித்தாந்த முறையிலான கருத்து வேறுபாடுகள் காணப்படவில்லை. அவர்கள் ஒரே சமுதாயமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு கடவுளையே வணங்கி வந்தனர். பல்வேறு மதங்கள் இருக்கவில்லை. பின்னர் மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தங்களுடைய மத காரியங்களில் அவர்களுக்கு தர்க்கம் ஏற்பட்டது. சத்திய மார்க்கத்திலிருந்து அவர்கள் அடி பிறழ்ந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காகவே இறை தூதர்களும் அவர்களுடன் இறைசெய்திகள் அடங்கிய வேத நூல்களும் அருளப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர், பின்னர், (அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டபோது) அல்லாஹ் நபிமார்களை நற்செய்தி அறிவிப்போராகவும், அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்வோராகவும் அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். (2:213)
இவ்வாறு அருளப்பட்ட இறைநூல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது பற்றிக் குர்ஆன் கூறவில்லை. எனினும் நான்கு வேதங்களின் பெயர்களை அது குறிப்பிடுகிறது. அவை.
1. தவ்றாத். இது இறைதூதர் மூஸா(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது
2. ஸபூர். இது இறைதூதர் தாவூது (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
3. இஞ்சீல் இது இறைதூதர் ஈஸா (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
4. குர்ஆன். இது இறுதித்தூதர் முஹம்மத் (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
(இறை விசுவாசிகளே!) நீங்கள் கூறுங்கள்: “நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" (2:136)
இன்னும்; அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையேயாகும். (5:66)
நிச்சயமாக, இது முந்திய ஆகமங்களில் இருக்கிறது. இப்ராஹீம் மற்றும் மூசாவினுடைய ஆகமங்களிலும் (இருக்கிறது). (87: 18,19)
இவ்வாறு அருளப்பட்ட வேதங்கள் அனைத்திலும் நம்பிக்கை கொள்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும். அவ்வாறு நம்பிக்கை கொள்ளாதவர்கள் வெகுதூரமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது.
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்;. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார். (4:136)
பழய வேதங்களைப் பற்றிய குர்ஆனின் நிலைபாடு
முந்தைய சமூகங்களுக்கு அருளப்பட்ட இறை நூல்களான தவ்றாத், இஞ்சீல், ஸபூர் ஆகியவை உண்மையானவை என்று திருக்குர்ஆன் சான்று பகர்கிறது. பார்க்க (5: 44, 21: 48, 17:55, 5:46) குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டதோ அது போன்று இறை வெளிப்பபாட்டின் மூலம் (வஹ்யி) அவை அருளப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்;. இன்னும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிட (வேதங்களை இறக்கி னான்). இன்னும், அவன் (உண்மையையும், பொய்யையும்) பிரித்துக் காட்டக்கூடிய (புர்கான் என்னும் இவ்வேதத்)தையும் இறக்கினான்.(3: 3,4)
முந்தைய வேதங்களைக் குறித்த குர்ஆனின் நிலைபாடு மேலே ஆதாரங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சுருங்கக் கூறினால் இறைநூல்கள் என்பது முழுக்க முழுக்க இறை வெளிப்பாடுகளை மட்டும் கொண்டதாகும். அவை வெறும் தீர்க்க தரிசிகளின் வரலாறுகளையோ அல்லது புராணக் கதைகளையோ கொண்டதல்ல. மனிதர்களால் எழுதப்பட்டதும் அல்ல. மாறாக இறைவன் தீர்க்கதரிசிகளின் மூலமாக வெளிப்படுத்திய வெளிப்பாட்டுச் செய்திகள் ஆகும். அவற்றின் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனால் அருளப்பட்டதாகும். இதனால் மனித பலஹீனங்களான முரண்படுகள், தவறுகள் விடுபடுதல் ஆகியவற்றை விட்டும் அவை தூய்மையானதாக இருக்கும்.
முந்தைய இறை நூல்கள் என்று குர்ஆன் குறிப்பிடும் தவ்றாத் இஞ்சீல் ஸபூர் ஆகியவை பைபிளைப் பற்றியே என்று கிறிஸ்தவர்களில் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் தங்களுடைய வாதங்களுக்கு முரண்பட்டு குர்ஆனை அவர்கள் நிராகரிக்கின்றனர். பைபிளை இறைவேதம் என்று கூற வேண்டுமானால் மேலே தவ்றாத் இஞ்சீல் ஆகிறவற்றைக் குறித்த குர்ஆன் கூறும் அளவு கோல் பைபிளுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. பைபிள் முழுக்க முழுக்க மனிதர்களால் தொகுக்கப்பட்டது என்பதற்கு பைபிளே சான்று பகர்கிறது. மேலும் பைபிளில் காணப்படும் முரண்பட்ட கருத்துக்கள் அதனை இறைவேதம் என்று கூற முடியாத அளவுக்கு உள்ளது. அவற்றை அடுத்து வரும் தொடர்களில் விரிவாகக் காண்போம். இன்ஷா அல்லாஹ்.
Wednesday, November 5, 2008
இயேசுவைப் பற்றிய உண்மை (4)
இயேசு நாதர் காட்டிய நேர்வழியில் மக்கள் நடக்காமல் இருப்பது தான் வரலாற்றின் சோகமான உண்மை. இறையருளால் சில சீடர்கள் தான் அவரை ஆதரித்து அவரது வழியில் நடந்தனர். இதைவிடவும் நம்பிக்கையற்ற சிலர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் இறைத்தூதர் முஹம்மது நபியைக் கொல்ல முயற்சி செய்தது போலவே இயேசுவையும் கொல்ல முயற்சி செய்தனர்.
ஆனால் இறைவன் அந்த சதிகாரர்களின் செயல் அறிந்து அதை விட உயர்ந்த திட்டம் வைத்திருந்தான். இயேசுவுக்காகவும் அவரது சீடர்களுக்காகவும் இதைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்காணும் வசனங்களை விளக்குகிறது.
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது; ''அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?'' என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாதிய்யூன். ''நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம். திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்'' எனக் கூறினர். ''எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!'' (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். ''ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன். இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன். மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன். பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்'' என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 3:53-56)
மேற்கூறிய வசனங்கள் குறித்துக் காட்டுவது போல் இயேசு தனது மரணத்திற்கு முன்பே வானத்தில் உயர்த்தப்பட்டார். இதன் பொருள் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! இதைத் திருக்குர்ஆன் எடுத்தோதுகிறது. இயேசுவின் எதிரிகள் அவரை சிலுவையில் கொல்லப் பார்த்தனர். ஆனால் இறைவன் இயேசுவைக் காப்பாற்றினார். யாரோ ஒருவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையும் இந்த சதியும் மர்யம் (மேரியை) பற்றிய அவதூறும் நம்பிக்கையற்ற யூதர்களால் செய்யப்பட்டது என்று திருக்குர்ஆனின் கருத்து. இது பற்றிய திருக்குர்ஆனின் வசனம் வருமாறு :
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிப்பட்டனர்). இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (4:156-159)
அப்படியானால் இயேசுவுக்குப் பதிலாக அறையப்பட்ட மனிதன் யார்? இதைப்பற்றி திருக்குர்ஆன் விளக்கவில்லை. இந்தக் கேள்விக்குரிய பதிலையும் கூறவில்லை!
திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை எழுதியவர்கள் சில பெயர்களைக் குறித்து காட்டியுள்ளனர். திருக்குர்ஆனோ நபிகள் நாயகத்தின் அறிவுரை - விளக்கவுரைகளோ இவர்களுடைய யூகங்களுக்கு ஆதரவாக இல்லை.
இதன் பொருள் நீதித் தீர்ப்ப நாளுக்கு முன்னர் இயேசு மீண்டும் பூவுலகிற்கு வருவார் என்பதையே காட்டுகிறது. எனினும், திருக்குர்ஆன், விரிவுரையாளர்கள் மேற்சொன்ன வசனத்தின் கடைசிச் சொற்றொடர்களை வைத்து விளக்கம் தந்துள்ளனர்.
இயேசு மீண்டும் வருவார். அப்போது கிறிஸ்துவர்களும், யூதர்களும் இயேசு இறப்பதற்கு முன் அவரை நம்புவார்கள் என்று தெளிவுரையாளர்கள் கூறுவதற்கு நபிகள் நாயகத்தின் அருள்வாக்குகள் ஆதாரம் தருகின்றன.
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்
இந்தக் கருத்துக்களைப் படித்தவுடனேயே கிறிஸ்துவாகள் கூறக் கூடும், பாருங்கள், இது தான் முஸ்லிம்கள். இயேசுவைப் பற்றி இவர்கள் இப்படிக் கூறுவதால் தான் இவர்கள் மறுப்பாளர்களாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றனர்! என்பர்.
இவர்கள் இப்படிக் கூறினாலும் திருக்குர்ஆனின் கருத்துக்கள் கூர்மையான ஆராய்ச்சிக்கு உரியதாக இருக்கிறது. யார் உள்ளபடியே இறை நம்பிக்கையையும் கிறிஸ்துவ மார்க்கத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றார்ளோ அவர்கள் கீழக்காணும் காரணங்களை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
1. திருக்குர்ஆன் என்பது இறைவன் இறுதியாக அருளிச் செய்த வேதம். அந்த வேதத்தில் சொல்லப்பட்டது அனைத்தும் முழுமையான உண்மை. இதை நம்பாதவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் பெரிதாகத் தென்படாது. ஆனால் திருக்குர்ஆன் பற்றிய வரிக்கு வரியான திறனாய்வும், விஞ்ஞான அடிப்படையிலான ஆராய்ச்சியும் அந்த வேதத்தினலுள்ளது அனைத்தும் உண்மைதான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குர்ஆன் என்பது முஹம்மத் நபி (ஸல்) அவர் கூறப்பட்டது என்று சிலர் கூறுவர். கிறிஸ்தவ யூத வேதங்களைக் காப்பி அடித்தது என்றும் கூறுவர். அவர்களுக்கு உலக வரலாறும் தெரியாது. குர்ஆனும் புரியாது. நபிகள் நாயகம் பற்றியும் அறிந்திருக்கவில்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தான் அரபி மொழியில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.
அது தவிர நபிநாதர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பதையும், அவர் வாழ்ந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மத வேதங்கள் என்பன தேவாலயங்கள் சர்ச்சுகள் தவிர வெளியுலகில் புழக்கத்தில் இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்.. மேற்சொன்ன குற்றச்சாட்டிலுள்ள அபத்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.
2. இறைவனின் செய்தியிலுள்ள ஓரிறைத் தன்மையையும் உலகளாவிய வாக்கையும் புரிந்து கொண்டால் இறைத்தூதர்களை மக்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இறைத்தூதரில் ஒருவரை நிராகரித்தாலும் அது அனைத்து இறைத்தூதர்களையும் நிராகரிப்பதற்குச் சமம். யூதர்கள் இயேசுவின் இறைத்தூதையும் நபிகள் நாயகம் அவர்களின் இறைத்தூதையும் நிராகரிக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறைத்தூதை நிராகரிக்கிறார்கள். முஸ்லிம்களோ அனைத்து இறைத்தூதையும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அதிலுள்ள தவறான சரித்திரத் திரிபுகளையும் - மனிதன் நுழைத்த கருத்துக்களையும் நிராகரிக்கிறார்கள்.
3. திருக்குர்ஆன் கூறுவது காரணமாகவே முஸ்லிம்கள் தங்களது நபிநாதரை நேசிப்பது போலவே இயேசுவையும் நேசிக்கிறார்கள். மேலும் கிறிஸ்துவர்களின் புதிய ஏற்பாட்டில் கூறப்படாத இயேசுவின் அற்புதங்கள் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக இயேசு தொட்டிலிலிருந்து பேசுகிறார். மக்கள் எதை உண்கிறார்கள், எதைத் தங்களது களஞ்சியத்தில் வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் (திருக்குர்ஆன் வசனங்களின்படி)
4. இயேசு ஒரு தெய்வம் என்ற கருத்து புனிதபால் மற்றும் அவரது சீடர்களால் கிறிஸ்து மார்க்கத்தில் நுழைக்கப்பட்டது. இதை எதிர்த்த பல லட்சக்கணக்கான கிறிஸ்துவர்களின் சவங்களின் மீது இந்தக் கருத்து நிலைநாட்டப்பட்டது. இதைப் பற்றி காஸ்டிலோ என்பவர், ஒரு மனிதனை நெருப்பில் எரிப்பது ஒரு கொள்கையை நிலைநாட்டியது ஆகாது என்றார்.
5. சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன் என்பவரின், தலைமையில் நடந்த கிறிஸ்துவ மாநாட்டில் தான் தற்போதுள்ள கிறிஸ்துவர்களின் நான்கு புதிய ஏற்பாடுகள் அங்கீகாரம் பெற்றன. இதுவும் அந்தப் பேரரசரின் அரசியில் லாபங்களுக்காகச் செய்யப்பட்டன.
ஏராளமான பைபிள் புத்தகங்களும் ஏற்பாடுகளும் மதக் கிரந்தங்களும் தள்ளுபடி ஆகமம், என்ற பெயர் இடப்பட்டன. இதில் பல புத்தகங்கள் இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டவையாகும். இவற்றில் பர்னபாஸ் ஆகமம் - ஹெர்மாசின் மேய்ப்பன் போன்ற பைபிள் புத்தகங்கள் திருக்குர்ஆனோடு ஒத்துப் போகின்றன.
6. இயேசுவின் ஓரிறைக் கொள்கையும், மனிதக் கருணைக் கொள்கையும் முஸ்லிம்களால் மட்டும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. யூதர்களாலும், பழைய காலத்துக் கிறிஸ்தவர்களான எபியோனியர்கள் - செரிந்தியர்கள், பாசிலிடியன்கள், காபோகிரேடியன்கள், ஹைபிஸ்சிஸ்டிரியன்கள் போன்றவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.
அரியன்கள், பாசிலியன்கள், கோத்துகள் போன்றவர்களாலும் இறைத்தூதர் தான் இயேசு என்பதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இப்போதும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமுள்ள ஓரிறை சர்ச்சுகளும், ஜெஹோவா காட்சியாளர்களும் இயேசுவைக் கடவுள் என வணங்குவதில்லை.
7. கூர்மையான பைபிள் ஆராய்ச்சி - இயேசுவும், அவரது சரிதம் எழுதியவர்களும் சொல்லாத கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.
இது பற்றி ஹெய்னிஸ் ஜாஹ்ர்ன்ட் என்பவர், இயேசு பேசாத சொற்களை அவரது வாயிதழில் வைத்தனர். அவர் நடத்தாத அற்புதங்களை அவர் நடத்தியதாகக் கூறினர் என்றார். இது போலவே பல முடிவுகளை தேவாலய ஆயர்கள் அறிந்திருந்த போதிலும் அவற்றை ரகசியமாக வைத்திருந்தனர். ஆராய்ச்சி நிபுணர்களுக்கு மட்டும் அறிவித்தனர். சர்ச்சுகள் இயேசுவைப் பற்றிக் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று மனித குமாரன் இயேசு என்ற நூலில் ரூடால்ஃப் அகஸ்டீன் எழுதியுள்ளார். (ஜெர்மனிய மொழியில் இந்தப் புத்தகம் 1972 ல் வந்தது. 1977 ல் மொழி பெயர்க்கப்பட்டது).
8. இயேசுவின் இயற்கைக் குணம் - இறைத்தூது - சிலுவை மரணம் - விண்ணேற்றம் இவை பற்றிய தவறான எண்ணங்களில் இருப்பது தான் கிறிஸ்துவ மார்க்கத்தில் இன்றுள்ள பிரச்சினை. இதைப் பலரும் அறை கூவி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இங்கிலாந்திலுள்ள பல அறிஞர்கள் எழுதி ஜான் ஹிக் என்பவரால் ஒழுங்கு செய்யப்பட்டு, கடவுள் அவதாரப் புராணம் என்ற நூல் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அந்த அறிஞர்கள் இயேசு என்ற மனிதர் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவர், தெய்வீக நோக்கத்துக்காக அவர் செயல்பட்டார். பிற்காலத்தில் அவரே கடவுள் அவதாரம் என்று கூறப்பட்டது. இது புராண பாணியில் கவிதையின் உயர்வு நவிற்சி முறையில் அவரது முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காக நமக்குக் கூறப்பட்டது தான் என்று சொல்லியுள்ளார்கள்.
ஆனால் ஜார்ஜ் கேரிப் என்பவர் இந்தப் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் போது இயேசுவைக் கடவுள் அவதாரம் என்று ஒப்புக் கொள்ளவில்லை எனில் இயேசுவின் இறைத்தூதை முழுமையாக உணர முடியாது. மக்களை வழிநடத்தும் ஆளுமையை விளக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால் உறுதியாக இது பலவீனமான வாதம் ஆகும். ஆப்ரஹாம், மோசஸ், முஹம்மத் நபி (ஸல்) போன்ற மிகப் பெரிய தூதர்கள் தங்களது மக்களின் மீது அளப்பரிய வழி நடத்தும் ஆளுமையை பெற்றிருக்கிறார்கள். இவர்களில் யாரும் தன்னைக் கடவுள் என்றோ - கடவுளின் குமாரர் என்றோ கூறிக் கொள்ளவில்லை.
9. பிதா மகன் பரிசுத்த ஆவி என்ற திரியேகத்தத்துக் கொள்கை இன்றிருக்கும் பைபிளில் கூடக் காண முடியாது. நமது இறைவனான கர்த்தர் ஒரே ஒருவர் தான் (மத்தேயு) என்று இருக்கிறது. திரியேகத்துவத்தை மறுக்கிறது. சுவிசேஷக்காரர்கள் பலரும் இது போல் எழுதியுள்ளனர்.
10. தான் ஒரு தெய்வம் என்று இயேசு கூறியதாக இப்போது இருக்கிற பைபிளில் கூடக் கூற முடியாது. கடவுளின் குமாரன் நான் என்ற சொல் இயேசுவின் வாயிலிருந்து வந்ததாகவும் பைபளில் கூற முடியாது.
பைபிள் அகராதி என்ற நூல் ஹேஸ்டிங்கினர் கூறுகிறார். தன்னைக் கடவுள் என்று இயேசு கூறினாரா என்பது சந்தேகத்திற்குரியது. எனது பைபிள் ஆராய்ச்சியில் கடவுளின் குமாரன் என்ற சொற்களை யோவான் சுவிசேஷத்தில் 5-7 ஆகிய அத்தியாயங்களில் காண முடிகிறது. பிறர் தான் அந்தச் சொற்களை சில இடங்களில் கூறுகிறார்கள். கடவுளின் குமாரன் என்று இயேசுவே கூறியிருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கீழ்க்கண்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Þ அந்தக் குமாரன் எனும் சொல் ஹெலெனிஸ்டிக் என்ற மொழி வகையைச் சார்ந்தது. இயேசுவும் அவரது சீடர்களும் புழங்கிய மொழி வகை அது. செமிடிக் மொழியில் நிச்சயமாக அந்தப் பொருள் வராது.
Þ கிரேக்க மொழியிலுள்ள பைபிள் குமாரன் என்ற சொல்லுக்கு பியாஸ் - பியாடா எனும் சொற்கள் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் இதற்கு ஊழியன் - ஊழிய மகன் என்பதே! இது வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது இயேசுவுக்கு மகன் என்ற சொல்லையும் மற்றவர்களுக்கு ஊழியர் என்ற சொல்லையும் பயன்படுத்தினர்.
Þ மனித குமாரன் என்று இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்ட சொல் சுவிசேஷங்களில் 81 முறை வருகிறது. இது இயேசு தன்னுடைய மனித நிலைமையைக் குறித்து அறிவார்ந்த முறையில் கூறியதாகும். இந்த இலக்கியப் பூர்வமான சொல் இயேசுவின் மனிதப் பாத்திரத்தைப் புற்றிய அழுத்தமான வெளிப்பாடாகும். இப்போது வாழும் கிறிஸ்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?
பைபிள் வசனம் - போப் மறுப்பு
யூதத் தலைமைப் பூசாரியாலும், யூத மூப்பர்களாலும் திட்டமிடப்பட்டு – உத்தரவிடப்பட்டது தான் இயேசு கைது செய்யப்பட்டார். சிலுவையில் அறையப்பட்டார் என்பது பரம்பரையான பைபிள் கூறும் கதை.
1960 ஆம் ஆண்டுகளில் இந்தக் கதை கிறிஸ்துவர்களின் மிக உயரிய அதிபதியான போப்பாண்டவரால் மறுக்கப்பட்டது. சிலுவையில் இயேசு அறையப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பில்லை எனக் கூறினார். இக் கூற்று பைபிள் கதையையே மறுப்பதாகும்.
இது (இஸ்ரேல் நாட்டுக்காகச் செய்யப்பட்ட) அரசியல் ரீதியான அறிவிப்பு என நீங்கள் கூறலாம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்ந்து கூறி வருகின்ற ஒரு உண்மையை இந்த அறிவிப்பு நிலைநாட்டுகிறது.
கிறிஸ்துவ மார்க்கத்திற்குள் தேவாலய நிர்வாகங்கள் பல செய்திகளைப் புகுத்திக் கொண்டிருந்தன. இதனால் பல நம்பிக்கைகள் மாறியது மட்டுமல்லாமல் - கிறிஸ்தவ மார்க்கத்தின் பழைய உருவத்தையே மாற்றி முரண்படுகிறது.
கடவுள், பைபிள், இறைவனுடன் மனிதனின் உறவு நிலை பற்றிய தேவாலயங்கள் மதக்கருத்துக்கள் மக்களை துரதிர்ஷ்டவசமான முடிவுகளை எடுக்கக் கட்டாயப்படுத்தியது.
இதனால் ஒருவர் விஞ்ஞானியாக - படிப்பாளியாக இருந்து கொண்டு கிறிஸ்துவராகவும் இருக்க முடியாது என்ற நிலையைத் தோற்றுவித்தது.
மதத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்று சேர்க்க முடியாது என்ற கருத்தை தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் மற்றும் பெரும்பாலான மக்களிடையே தோற்றுவித்தது.
இதன் தாக்கம் பிற மதங்களின் மீதும் ஏற்பட்டது. இயேசுவின் போதனைகளைச் சீர்குலைக்காமலும் - திரிபு செய்யாமலும் இருந்திருந்தால் இது நடந்திருக்காது.
இதனால் தான் இஸ்லாம் இதைப்பற்றிக் கூறும் போது மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கம் முரண்பாடு இல்லை எனக் கூறுகிறது.
விஞ்ஞான உண்மைகள் - இறைவனைப் பற்றிய ஞானத்தை அறிய ஒரு வழி தான். வெளிப்பாடுகள் என்ற முன்னுரைப்புகள் இயேசுவின் போதனைகளிலும் குர்ஆனிலும் உள்ளன. உண்மையான விஞ்ஞான அறிவும் மதமும் - கடவுள் எனும் மூல ஊற்றிலிருந்தே வருகின்றன. ஏனெனில் கடவுள் தனக்கு முரணானதைக் கூற மாட்டார்.
கிறிஸ்துவச் சரித்திரத்திலுள்ள திரிபுகளான - திரியேகத்துவம் கடவுளின் குமாரன், ஜென்மப் பாவம், பாவமன்னிப்பு என்பவை மக்களை மத்த்திலிருந்து விரட்டியுள்ளன. ஆனால் இஸ்லாம் மார்கத்திற்கு இது போன்ற பிரச்சினைகள் இல்லை. இருப்பினும் இஸ்லாமையும் ஒரு மதம் என்றே மேற்கத்திய பாணியில் ஒரு குறிப்பிட்ட வளையத்தில் - பொருளில் நிலை நிறுத்தியுள்ளதால் கிறிஸ்துவ மதம் போலவே இஸ்லாத்தையும் எண்ணிக் கொண்டனர். ஆனால் ஒரு சிலர் தான் இந்த யூகத்திலுள்ள பொய்யைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர்.
குர்ஆனின் வசனங்களுக்கு ஆதாரம்
இயேசுவைப் பற்றிய குர்ஆனின் கண்ணோட்டத்தைத் தயக்கத்தோடும் விருப்பமில்லாமலும் பலர் பார்ப்பதற்கு மேற்கூறிய யூகங்கள் காரணமாகின்றன. ஆனால்சரித்தித உண்மைகளும் சில இருக்கவே செய்கின்றன.
Þ இயேசுவின் மறைவுக்குப் பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவம் என்பது யூத மார்கக்த்தின் ஒரு பகுதி என்றே நினைத்து வந்தனர்.
Þ கிறிஸ்துவ சரித்திரம் முழுவதும் கிறிஸ்துவர்கள் மற்றும் யூதக் கல்வியாளர்களின் பண்பாடு ஒரே மாதிரியாகவே இருந்தது.
Þ பைபிள் ஆராய்ச்சிகளும் விஞ்ஞான ஆய்வுகளும் பைபிளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
Þ கிறிஸ்துவர்களில் சிலர் ஒரு தெய்வத்தை ஒப்புக் கொண்டனர். இயேசுவைக் கடவுளாகவோ - கடவுளின் குமாரராகவோ ஒப்புக் கொள்ளவில்லை.
இன்றைக்கு ஆய்வாளர்களும், பிறரும் கண்டுபிடித்துள்ள இயேசுவின் நிலையைப் பற்றி ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் குர்ஆன் கூறியது. அதிலிருந்து எந்த மாற்றத்தையும் குர்ஆன் செய்து கொள்ளவில்லை.
இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடமிருந்து மறைத்தல்
குர்ஆன் கூறியவற்றை மக்களிடமிருந்து மறைத்து - அதை நிராகரிக்கம் போக்குக்குக் காரணங்கள் சில உண்டு.
1. நீண்ட நெடிய காலததிற்கான வெறுப்பு இஸ்லாம் மீது ஏற்பட்டது (ஜெருஸலம் நகர் யாருக்குச் சொந்தம் என்பதற்காக முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களுக்குள்ளே நடந்த) சிலுவை யுத்தம். அடுத்தது அரபு - இஸ்ரேல் மோதல்.
2. சிலர் கிறிஸ்துவத்தை ஒப்புக் கொள்வதில்லை. அதே நேரத்தில் உண்மை எது என்பதும் புரிவதில்லை.
3. மிகப் பலர் இஸ்லாமை ஒப்புக் கொண்டால் பிறர் கேலி பேசுவார்களே, சுற்றத்தாரிடமிருந்து பிரிந்து போய் விடுவோமே - கிறிஸ்துவ மார்க்கத்தை வெளிப்படையாக கைவிட்டு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றால் மோதல் ஏற்படுமே என்று தான் நினைக்கின்றனர்.
4. கல்வித் துறையில் குறிப்பாகக் கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாம் மற்றும் குர்ஆன் பற்றி எழுதினால் யாரும் அதைத் திறனாய்வு செய்வதில்லை. அதிலிருந்து மேற்கோள் காட்டுவதில்லை. அதை ஒரு அறிவார்ந்த பணி என்று கூட ஒப்புக் கொள்வதில்லை.
இதை விடப் பெரிய துயரம் - இதனால் சிலர் பதவியையும் இழந்து விடுகின்றனர். 1978 ஜனவரி 3 ஆம் நாளைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைச் செய்திப்படி ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டாக்டர் ராபர்ட் அலெய் தனது மத ஆராய்ச்சித் துறை பதவியை இழந்தார்.
இயேசு ஒரு போதும் தன்னை கடவுளின் குமாரர் எனக் கூறவில்லை என்ற கருத்தை ஆதரித்தார் அவர் என்பதே காரணம்.
பழம்பெரும் பைபிள்களை ஆராய்ந்து டாக்டர் அலெய் எழுதினார்.
இயேசு தன்னைக் கடவுளின் குமாரர் எனப் பேசிய வ சனங்கள் பிற்காலத்தில் பைபிளில் சேர்க்கப்பட்டவையே. தேவாலயங்கள் கூறுவது போல் அவர் பேசவில்லை. இயேசுவின் முழு வாழ்வு முறையைப் பார்த்தாலும் இத்தகைய தெய்வத்தன்மை இருந்ததாகக் கொள்ள முடியாது. இயேசு இறந்த பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவத் தேவாலயம் - யூதத் தேவாலயத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இயேசுவுக்கு தெய்வத்தன்மை இருந்தது எனக் கூறுவது அவர்களின் இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகும்.
இயற்கை அமைப்பு
இதைத் தவிர இன்னும் ஏராளமான பேர் இயேசு பற்றிய உண்மையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் இஸ்லாம் என்பது வேகமாக வளர்கிற மார்க்கமாக உலகில் இருக்கிறது. மிகுந்த விசுவாசம் கொண்ட கிறிஸ்துவர்களாய் உள்ளவர்கள் கூட கீழ்க்காணும் உண்மைகளை உணர்ந்தவர்களாக உள்ளனர்.
1. இயேசுவை இஸ்லாம் நிரகரிக்கவில்லை. மனித குலத்திற்கு இறைச் செய்தியைக் கூறிய மாமனிதர்களின் வரிசையில் அவரை வைக்கிறது. இறைவன் நபித்துவம், இறைச்செய்தி ஆகியவற்றில் புதிய எழுச்சியை இஸ்லாம் தோற்றுவிக்கிறது.
2. கிறிஸ்துவம், யூத மதம் அல்லது வேறு எந்த மதமானலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடு பார்க்குமானால் ஓரிறைவனையும் அவன் மனித குலத்திற்கு இட்டிருக்கும் கட்டளைகளை உணர்ந்தவர்களாகவும் மிக மிகப் பொருத்தம் உடையவர்களாகவும் இருப்பார்கள். சில பிரச்சினைகளில் ஏன் பைபிள் குளறுபடிகளுடனும் குறைவிடுதல்களோடும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
3. இறைச் செய்தி வெளிப்பாட்டின் மிகப் பெரிய சங்கிலித் தொடரின் கடைசித் தொடராகத் தான் இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. தனக்கு முன்னுள்ள நம்பிக்கையாளர்கள் இஸ்லாம் மீதும் நம்பிக்கை கொள்வார்களானால் மிகப் பெரிய இறை அருள் கிடைக்கும் என்று இஸ்லாம் வாக்குறுதி தருகிறது. யார் தனது மதத்தில் நம்பிக்கை கொள்வதோடு என்னையும் நம்பி - எனக்கு இறைச் செய்தி அளிக்கப்பட்டதாக நம்பிக்கை கொள்கிறாரோ அவருக்கு இரு பரிசு இறைவனால் அருளப்படும் எனக் கூறியுள்ளார் நபி. ஒரு பரிசு தனது மதத்தை நம்புவதற்கு! இன்னொன்று உண்மையை அங்கீகரிப்பதற்கும் - இஸ்லாத்தை நம்புவதற்கும்!
இறுதியாக இயேசுவை இறைவனின் மிகப் பெரிய தூதுவர்களில் ஒருவராகக இஸ்லாம் கருதுகிறது. இயேசுவின் செய்தியே ஓரிறைவன் பற்றிப் போதிப்பதும் - அந்த இறைவனிடம் மனித குலத்தை அழைத்துச் செல்வதுமாகும்!
இயேசு தன்னை இறைவனின் அடியார் - நற்செய்தி கொண்டு வந்த தூதுவர் என்பதைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை. அவரது வாழ்வு - இறைச் செய்தி பற்றி குர்ஆன் ஏராளமான ஆதாரங்களுடன் பேசுகிறது. இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள், காத்திருக்கிறார்கள்.
இயேசு இரண்டாம் வருகை தரும் போது கிறிஸ்துவர் அல்லாதவர்கள் மீது தீர்ப்புத் தருகிற கடவுளாக வருவதில்லை. இறைத்தூதுவர் இயேசு என்ற அளவில் தான் வருவார்.
தவறாக கருத்துக்களைத் திருத்தவே இயேசு வருவார்!
தன்னைப் பற்றியும் தனது இறைத்தூது பற்றியும் ஏற்கனவே தவறான கருத்துக்களை கொண்டிருந்தவர்களைத் திருத்தவே அவர் வருவார்.
நபிநாதர் வாக்குப்படி இரண்டாம் வருகை தருகின்ற இயேசு நாற்பதாண்டுகள் இவ்வுலகில் தங்குவார். அப்போது உலக வாழ்வே அனைவருக்கும் மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும். அப்போது உலகிலுள்ள ஒவ்வொருவரும் அவரை இறைத்தூதுவர் என்றே நம்புவார்கள் - கடவுளின் குமாரர் அவர் என்று நம்ப மாட்டார்கள்.
இயேசு இரண்டாம் வருகை நிகழ்கிற போது உயிருடன் இல்லாதிருந்தால் அவரைப் பற்றித் தவறான கருத்துக் கொண்டிருந்தோர் என்ன செய்வது?
இப்போதே - இன்றே - சரியான கருத்தை.. .. சத்தியத்தை நம்பிப் பின்பற்ற வேண்டியது தான்!
சத்தியத்தில் விழித்துக் கொண்ட இதயம்!
(இக்கடிதம் பற்றி குறிப்பு இறுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது)
அன்புள்ள ஐயா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
தாங்கள் தொலைக்காட்சியில் விவாதித்த விவரம் குறித்து மதக் கல்வி மாணவியாக இருந்போதும் அதற்குப் பிறகு உலகத்தின் பல பாகங்களிலும் நான் விவாதித்திருக்கிறேன்.
ஆங்கில நாட்டைச் சேர்ந்த புதிய முஸ்லிம் பெண்ணாகிய நான் இப்போது சௌதி அரேபியாவில் உள்ளேன். உங்களது விவாதம் கூர்மையான வேறுபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சில விஷயங்களில் சிந்தனையையும் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
இயேசுவைப் பற்றியும் மேரியைப் பற்றியும் குர்ஆனில் கூறப்பட்டிருப்பதும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருப்பதும் எதிர் எதிராக கண்ணோட்டங்களாகும்.
கிறிஸ்துவ நம்பிக்கை இயேசு என்பவர் கடவுளின் குமாரர் என்பதாகும். குர்ஆன் இதை நிராகரிக்கிறது. இயேசு தன்னைப் பற்றி கடவுளின் குமாரர் எனக் கூறாத போது ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்? என்று கேள்வி கேட்க வேண்டியது அவசியமாகிறது.
இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகியவற்றின் அடிப்படைகளை ஆராய்ந்தால் இதற்குரிய பதில் வெளியாகும். முஸ்லிம்களாகிய நாம் இறைவன் ஒருவன் மீது தான் நம்பிக்கை கொண்டுள்ளோம். வசனங்களைக் கொண்டே குர்ஆன் மீதும் விசுவாசம் கொண்டுள்ளோம்.
அது போலவே இறைவனின் தூதவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உண்மையான தூதுவர் - இறைவனின் அடியார். இறைவனுக்கு உண்மையானவர் - கீழ்படிதலுள்ளவர் நீடித்த - முழுக்க முழுக்க, ஒரு மனிதர் - இறைவனின் நல்வழியில் அவனிடம் மக்களை அழைத்துச் செல்லும் இறைக்காரணத்திற்கு ஒரு கருவியாக இருந்தவர் - என்று நம்புகிறோம்.
இப்போது கிறிஸ்து மார்க்கத்தைப் பார்போம். அந்த மார்க்கம் இறைவனை அடிப்படையாக வைத்து எழுப்பப்படவில்லை. வேதப்புத்தகம் என்பது கூட இயேசு இறந்த பின்னர் 150 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டதாகும்.
கிறிஸ்து மார்க்கம் என்பது இயேசுவின் பாத்திரத்தை வைத்தே தொடங்கப்படுகிறது. இயேசு அதிசய அற்புதங்களைச் செயதவர் - இறந்தவரைப் பிழைக்கச் செய்தவர் - குஷ்டரோகிகளைக் குணப்படுத்தியவர், குருடர்களுக்குக் கண் தந்தவர் என்பது உண்மையே. வியத்தகு மனிதராய் - இறைவனின் அருள் பெற்றுப் பிறந்தவராய் - இறைப்பணி புரிந்தவராய் இருந்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு அந்த மந்திர த் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கடவுளின் குமாரன் என்ற தத்துவம் உதயமாகி அவரைப் பொருத்தமாக நிலை பெறச் செய்யும் முயற்சிகள் தொடங்கின.
கிரேக்க ரோமன் கடவுள்கள் அற்புத உயர் மனிதர்களாய் மதிக்கப்பட்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்துவக் கல்வியாளர்களும், அது போன்ற கருத்துக்களால் தாக்குதல் பெற்றிருந்தனர்.
கிறிஸ்து மார்க்கத்தில் பின்னர் வந்த பவுல் கூட ஹெலன் இன யூதரே. அவர் இயேசுவைப் பார்த்ததுமில்லை. சந்தித்ததும் இல்லை. ஆனால் அவர் கூறிய - எழுதிய அனைத்தும் அந்தக் காலத்து நம்பிக்கைகளால் தாக்கம் பெற்றவையே ஆகும். வாழ்கின்ற தேவன் இயேசு என்ற கூற்றும் பவுலுடையது தான்.
இயேசுவின் அதி அற்புதமான பிறப்பு- அவர் கடவுளின் குமாரன் என்ற தோற்றத்துக்கு அடிப்படை தருவது போல் தோன்றும். 1101ஸ்ரீ2 இரட்டைப் படைத் தத்துவததைக் கொண்டு இதை நிலை நாட்டுகிறார்கள். கடவுள் மேரியின் கர்ப்பத்தில் ஊதினார். மேரி இயேசுவைப் பெற்றார். எனவே இயேசுவின் தந்தை கடவுள்! இயேசு - கடவுளின் குமாரர் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
குர்ஆனும் கிறிஸ்துவ நூல்களும் மேரி மனதிலும் உடலிலும் விதிவிலக்காக இருக்கின்ற ஒரு பெரும் தூய்மையுடையவராய் இருந்தார் என்றும் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக இந்த உலகில் அவர் அர்ப்பணிக்கப்பட்டார் என்றும் தேவாலயத்திலேயே அவர் கடவுள் பணி ஆற்றினார் என்றும் கூறின.
ஆகவே கடவுளின் சித்தப்படி மேரியே கூட அந்தத் தேவாலயத்தில் அதி அற்புதம் புரியும் தகுதி பெறுகிறார். ஆயினம் இறைவன் மேரியைத் தனது புதிய இறைத்தூதரை உருவாக்கும் கருவியாக ஆக்குகிறார். அவரது கற்பின் தூய்மை பற்றி ஒச்சம் (களங்கம், பங்கம்) வராத அளவுக்கு அந்த அற்புதத்தைச் செய்து காட்டுகிறார்.
மேரி தனது இறைவனுக்குப் பணி புரிகிறாள். ஆகவேஇறைவன் தனது அளப்பரிய கருணையால் மேரியின் கற்புக்கு மேன்மை தருகிறார்.
ஆகவே இயேசுவின் பிறப்பு என்பதைக் கடவுளின் குமாரர் உற்பத்தியாகக் கொள்ள வேண்டியதில்லை. இயேசுவின் பிறப்பு - இறைவனின் படைப்பாற்றலின் புதிய முறை. மகன் என்பதோ தந்தை என்பதோ இல்லை. இறைவனின் நோக்கமும் அப்படிப்பட்டதாயில்லை.
இயேசுவின் போதனைகள் அவரது காலத்திலும் அவருக்குப் பின்னர் சிலகாலமும் எழுதப்படவில்லை. வாய் மொழியாக வழங்கி வந்த இயேசு போதனைகள் காலப் போக்கில் மூலப் போதனைகளிலிருந்து மாற்றம் அடையத் தொடங்கின. முதலில் எழுதப்பட்டது மத்தேயு-லூக்கா-மாற்கு ஆகியோரின் ஏற்பாடுகளே! (சுவிசேஷங்களே!)
யோவான் அதற்குப் பின்னர் கடைசியாகத் தான் எழுதுகிறார். அவர் எழுதியது மதக் கிரந்தம் போல் இருந்தது.
மத்தேய-லூக்கா-மாற்கு எழுதியவற்றில் இயேசுவைப் பற்றிய சித்தரிப்பு அமைதியான- கம்பீரமான பாத்திரத்தையே உருவாக்கியது.
ஒரு இறைத்தூதுவராயும், இறைவனால் அற்புதனம் செய்தவராயும் மனிதகுலத்தின் அனைத்து மக்களையும் நேசிப்பவராயும் - இறைவனைப் பற்றிய விழிப்புணர்வைத் தோற்றுவிக்க அனுப்பப்பட்டவராயும் அந்த மூன்று ஏற்பாடுகள் (சுவிசேஷங்கள்) கூறின.
மேலும் இயேசு மனிதராகிய நமது கண்களைத் திறப்பவராயும் - இறைவினன் நினைப்பு வாழ்வின் எல்லாச் செயல்களிலும் இருக்க வேண்டும் என்று நினைவூட்டுபவராயும் - செயல் - எண்ணம் ஆகியவற்றில் தன்னலமற்ற போக்கை உண்டாக்குபவராயும் - கடவுள்ள சத்தியம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையை விரிவுபடுத்துபவராகவும் அவர் இருந்தார்.
குழந்தையைப் போன்ற எளிய செயல்பாடும் நம்பிக்கையுமே இறைவனின் விண்ணரசை மண்ணுக்குக் கொண்டு வர முடியும். இந்தக் கருத்து இயேசுவின் போதனைகளில் பல் முறை வலியுறுத்தப்பட்டது.
இயேசு கடவுளை மிக நெருங்கினவராக இருந்ததற்குக் காரணயே அவரது பிரார்த்தனைகளே! அதிலிருந்தே அவர் அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றலைப் பெற்றார். அந்த அற்புதங்களை நான் கடவுளின் குமாரர் என்று கூறிக் கொண்டு செய்யவில்லை. இயேசு பயன்படுத்திய மகன் அல்லது குமாரன் எனும் சொல் மக்கள அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது.
இங்குள்ள ஆண் பெண் அனைவரையும் இறைவனின் குமாரன் அல்லது குமாரத்திகளாகக் கருதி மக்களை பார்த்து அவர் விண்ணகத்திலிருக்கும் நமது தந்தையிடம் பிரார்த்தனை செய்வோம் எனக் கூறினார்.
ஆயினம் புதிய ஏற்பாடுகளிலுள்ள இயேசுவின் சில போதனைகள் நம்பும்படி இல்லை. திரிபோ என ஐயுறும்படி அமைந்திருக்கின்றன. இயேசு பெரும்பாலும் ஏழை – ஒடுக்கப்பட்டோர்- தள்ளி வைக்கப்பட்டோர்- பணியாளர்கள் ஆகியோர் பற்றியே அதிகக் கவலையுற்று இறைப்பணி ஆற்றினார். மதக் கருத்து கலந்த போலியான பக்திச் சாமாச்சாரம் அல்ல.
அவரது அழைப்பு மனித இதயங்களுக்கு விடப்பட்ட அழைப்பு! அவரது கொள்கை – மனித நேயமும் அன்பும்!
இதற்குப் பொருள் தேவாலயங்களை நிறுவுவதா? அவர் தேவாலயம் நிறுவ விரும்பினார். ஆனால் இப்போதிருக்கின்ற தேவாலயங்களைப் போல் அல்ல!
இயேசு ஆன்மீகத்தோடும் இருந்தார். நடைமுறை உலகத்தோடும் இருந்தார். அவர் இறை நம்பிக்கையோடு மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துகின்ற சமுதாயத்தை உருவாக்க விரும்பினார்.
இனம் - கொள்கை பாகுபாடற்ற ஒரு குடும்பம் போன்ற அழகிய உறவுடன் - இறைவனின் வழிகாட்டுதலோடு அமைந்த சமூகமே அவர் அமைக்க விரும்பியது. அவரது போதனைகளைக் கூர்ந்து கவனித்தால் இத்தகைய சமூக அமைபில் அவரே முழுக்க முழுக்க தனி ஒளி வீசுபவராக இருக்க வேண்டும் எனக் கருதியதில்லை. இறைவனின் கைகளிலே உள்ள கருவியாக இயேசு தன்னைக் கருதினார்.
ஆனால் இது கடவுளின் சித்தத்திற்கு ஏற்ப டந்த இயேசுவின் எளிய பண்பாடான பாத்திரத்திற்கு முரணானதாகும். மக்களை இறை நம்பிக்கை கொள்ளச் செய்ய இயேசுவுக்கு இறைவன் அளித்த அற்புத சக்தியைத் திசை மாற்றியதுமாகும். இதன் மூலம் கிறிஸ்துவத் தேவாலயங்கள் இயேசுவின் தனித்தன்மையான எளிமையைத் தோற்கடித்து விட்டது ஆகாதா?
திரியேத்துவத்திலும் (பிதா-மகன்-பரிசுத்த ஆவி) தங்களது மதமே உயர்ந்தது எனக் காட்ட நினைக்கிற முயற்சியாகும். இதன் மூலம் இயேசுவை ஒரு புதிராக்கி அதற்கு விளக்கமும் தரப்படுகிறது.
இறைவனின் ஆன்மீக சக்தி என்பது ஆப்ரஹாம், மோஸே காலத்தில் இருந்தது போன்றே முஹம்மது நபி (ஸல்) காலத்திலும் இருந்தது. ஆனால் இந்த திரியேகத்தும் இவர்களின் மீது தத்துவமாகச் சுமத்தப்படவில்லை.
இஸ்லாம் மார்க்கத்தின் வருகையை கிறிஸ்துவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி அல்லது அந்திக்கிறிஸ்துவின் வருகையாகக் கருதுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.
இந்த அந்திக் கிறிஸ்துவக் கதை- யோவானின் வெளிப்பாட்டில் கூறப்பட்டுள்ளதால் தான் இந்த நிலை.
ஜெருஸலம் நகருக்காக நடந்த சிலுவைப் போரில் ஒரு ஐரோப்பிய பிரபுவுக்க குர்ஆனில் இயேசு பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பாருங்கள் என்று ஒரு மொழி பெயர்ப்புப் புத்தகம் முஸ்லிம்களால் தரப்பட்ட போது அதை அவர் படிக்காமல் தூர வைத்து விட்டார்.
இது இஸ்லாம் பற்றிய கிறிஸ்துவர்களின் நிராகரிப்பைப் புலப்படுத்தியது. இந்தப் போக்கு இன்றைக்கும் இருந்து வருகிறது.
சிலுவைப் போர்களின் நினைவுகளை இன்னும் உயிர் வாழச் செய்வதன் மூலம் முழுமையான ஞான சூன்யத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.
இப்போது முஸ்லிம்களின் கடமை தங்களது ஓரிறை நம்பிக்கையை உறுதி செய்து கொள்வதோடு – உண்மையை அறிய விரும்பும் கிறிஸ்துவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை விளக்கததைக் கூற வேண்டும்.
சத்தியத்தையும் உண்மையையும் தேடி அலையும் ஆன்மாக்களுக்கு இஸ்லாமும் அதனுடைய போதனைகளும் பாலைவனத்தில் வற்றாது பாயும் மலை அருவி போன்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
வஸ்ஸலாம்!
தங்களின் உண்மையுள்ள,
ஜஹ்ரா அஜீஸ்.
மேலே உள்ள கடிதம் பற்றி...
இயேசுவின் இறைப்பணி பற்றிய இஸ்லாம் மார்க்கத்தின் கருத்துக்கள் காரணகாரிய விளக்கத்தோடு இருப்பவை. அவரை மிகப் பெரிய இறைத்தூதராக மதிப்பதாகும்.
துடிப்பான சிந்தனையோடு இருக்கும் மக்கள் இயேசு பற்றி இஸ்லாம் கூறுவதை ஒப்புக் கொள்வர்.
எனினும் இஸ்லாம் நோக்கி வருபவர்கள் திறந்த மனதோடும்- சார்பற்ற தன்மையிலும் வந்தால் இஸ்லாம் கூறுகின்ற வாத நேர்மையையும் ஒப்புக் கொள்ள வைக்கிற தன்மையையும் இயேசுவின் விஷயத்தில் காண்பார்கள். இயேசுவைப் பற்றிய பலவிதமான கிறிஸ்துவத் தத்துவங்களோடு வாதிட்டுப் போராடிப் பார்த்தவர்கள் இஸ்லாமியக் கருத்துக்களை நிச்சயமாக ஒப்புக் கொள்வார்கள்.
சவூதி அரேபியாவிலுள்ள தொலைக்காட்சி இரண்டாவது அலைவரிசையில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்பான போது மேலே உள்ள கடிதம் ஒன்று வரப் பெற்றேன். இஸ்லாம் மார்க்கத்தில் இயேசு என்ற நிகழ்ச்சியைக் குறித்தும் இந்தக் கடிதம் வரப் பெற்றது. கீழ்க்காணும் காரணங்களுக்காக அந்தக் கடிதம் இணைக்கபட்டுள்ளது.
Þ இந்தக் கடிதத்தை எழுதியவர் - மதக் கல்வியில் மாணவராகவும் - அதில் தேர்ச்சி பெற்றவராகவும் உள்ளார்.
Þ இயேசு கிறிஸ்து பற்றிய கிறிஸ்துவர்களின் நம்பிக்கையையும் உணர்ச்சிகளையும் புரிந்தவராக அவர் இருக்கிறார்.
Þ அவர் எப்படி இயேசுவின் போதனைகளிலிருந்தும் இறைச் செய்திகளிலிருந்தும் கிறிஸ்துவர்கள் வழிமாறிச் செல்கிறார்கள் என்றும் எவ்வாறு அவர்கள் இயேசுவின் மீதான நம்பிக்கையில் தவறாக இருக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.
இந்த வெளியீட்டில் அவரது கடிதத்தையும் இணைக்க அனுமதித்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
- டாக்டர் அல்ஜொஹானி
பொதுச் செயலாளர்
உலக முஸ்லிம் இளைஞர்கள் பேரவை
ரியாத், சவுதி அரேபியா.
(இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்).
இயேசுவைப் பற்றிய உண்மை (3)
திரியேகத்துவம் - கடவுள் குமாரர் ஆகிய கருத்துக்களை குர்ஆன் மறுக்கும் எனில் இயேசுவின் உண்மையான தூது பற்றி அந்தத் திருமறை கூறுவது என்ன?
பல்வேறு சமூகங்களும் நாடுகளும் இறைவனின் போதனைகளில் இருந்து வழிமாறிச் செல்லும் போது இறைத்தூதர்களும் இறைச் செய்தியாளர்களும் இறைவனால் அனுப்பப்படுகின்றனர். அந்த இறைத்தூது எனும் சங்கிலித் தொடரிலே வந்தவர் தான் இயேசு.
மோஸேயும் மற்ற இறைச் செய்தியாளர்களும் தந்த போதனைகளிலிருந்து யூத இனம் வழிமாறிய போது அவர்களுக்காக சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட அனுப்பப்பட்ட இறைத்தூதர் தான் இயேசு.
இயேசுவின் பிறப்பிலே இறைவனின் அதி அற்புதம் இருந்தது. அவரது குழந்தைப் பருவம், சிறுவராய் இருந்த பருவம் - அளவற்ற அற்புதச் செயல் செய்த பருவம் ஆகியவற்றில் இறைவனின் துணை இருந்தது.
எனினும் பெரும்பாலான யூதர்கள் இயேசுவின் இறைத்தூததை மறுத்தனர். கீழ்க்காணும் குர்ஆன் திருமறையில் வசனங்கள் முன்னர் கூறிய வசனங்களில் தொடர்ச்சியாக இயேசுவின் இறைத்தூதை விளக்குகின்றனர். மேதினியை மகிழச்சி அலையில் தீர்க்கதரிசன வசனங்கள் இவை :
இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.3:49
இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான். இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்.) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோதையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்ற நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவென். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது'' (என்று கூறினார்)
3:50
''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்குவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைப் பின் பற்றுங்கள்.''
3:51
''நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவன். ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்.'' திருக்குர்ஆனின் இன்னொரு வசனம் மோஸேவுக்கு இறைவன் அருளிய தவ்ராத் எனும் வேதத்தை செல்லும்படியாவதே என இயேசு ஒப்புதல் அளிப்பது பற்றிக் கூறுகிறது.
இயேசு தனக்குப் பின்னர் வரப் போகின்ற இறுதித் தூதுவர் பற்றிய தீர்க்கதரிசனம் பற்றியும் இந்த வசனம் எடுத்துரைக்கின்றது. அந்த வசனம் வருமாறு :
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா ''இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும். எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்'' என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ''இது தெளிவான சூனியமாகும்'' என்று கூறினார்கள். (61:6)
பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் - புதிய ஏற்பாட்டிலும் இயேசு கூறுகின்ற எதிர்காலத் தூதுவர் பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள் உள்ளன.
குறிப்பாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய பல்வேறு முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசன உரைகள்) பழைய ஏற்பாட்டில் உள்ளன. அவரைத் தவிர வேறு எவரையும் குறிக்கவில்லை என்பது போன்ற வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இருப்பதை இங்கே காண்போம்.
இந்த தீர்க்கதரிசன உரைகள் இறைவனால் மோஸேவுக்கு அருளப்படுகின்றன. மோஸேயைப் போலவே ஒரு மார்க்க நிறுவனரை (தலைவரை) - நம்பிக்கையாளரின் சமூகத்திற்கு உரிய அழகிய எடுத்துக் காட்டை இஸ்ரவேலவர்களின் சகோதர சமுதாயத்திலிருந்து எழுப்பச் செய்வேன் என இறைவன் கூறுகிறான் (பைபிள்!)
உன்னைப் போலொரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக உங்களது சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி எம் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர் சொல்வார். எம் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். (பைபிள்: 18 :18-20)
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு நற்தொடர்பு உள்ள வர்கள் (அந்த வசனங்கள்) அந்த இறைத்தூதரைத் தவிர வேறு எவருக்கும் பொறுத்தமாக இருக்காது என்பதை எளிதாக உணர்வார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் மோஸேயைப் போல் சாதாரணமாகப் பெற்றோருக்குப் பிறந்து திருமண முடித்து நம்பிக்கையாளர்களின் சமூகத்தை அமைத்து, மிகப் பெரிய அளவில் சடடங்களை நிறுவி இயற்கையான மரணத்தை அடைந்தவர். இயேசுவுக்கு இது பொருந்தாது! புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தைக் கவனமாகப் படித்தாலும் இயேசுவும் இது போன்ற ஒரு திருத்தூதர் பற்றி முன்னறிவிப்புச் செய்வதைக் கவனிக்கலாம்.
நான் பிதாவை வேண்டிக் கொள்வேன் - அவர் என்றென்றைக்கும் உங்களுடன் கூட இருக்கும்படி சத்திய ஆவியாகிய வேறு ஒரு தேற்றறவாளனை அவர் உங்களுக்கு தந்தருள்வார்!
பரிசுத்த ஆவி பற்றியும் அதன் பணிகள் பற்றியும் யோவான், குறிப்பாக விவரித்துள்ளதையும் கவனிப்போம்.
சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகளை யாவையும் சொல்லி வரப் போகிறவைகளையும் அறிவிப்பார். அவர் என்னுடையதை எடுத்து உங்களுக்கு அறிவிப்பதால் என்னை மகிமைப்படுத்துவார், (யோவான்:16:13-14)
இந்த முன்னறிவிப்பின் விவரங்கள் பரிசுத்த ஆவி என்ற (அப்போதிருந்த பெயரைச் சுட்டிக் காட்டுவதல்ல) வரப் போகிறவரைப் பற்றிய குறிப்பே!
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றறவாளன் உங்களிடத்திலே வாரார். (யோவான் : 16:7)
ஏனெனில் பரிசுத்த ஆவி என்பது இயேசுவின் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்தது என்பது பைபிளைப் படித்தால் புரியும். யோவான் பிறப்பதற்கு முன்னரே பரிசுத்த ஆவியால் நிரப்பபப்பட்டிருந்தார் என்றும் - இயேசுவும் (ஞானஸ்நானத்தின் போது) புறா உருவத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார் என்பதையும் பைபிளில் படிக்கிறேர். ஆனால் தேற்றறரவாளர் என்பவருக்கு உரிய குணக்கூறுகள் என்பதை தீர்க்கதரிசனங்களில் இருந்து நாம் காணலாம்.
1. அவர் (தேற்றவாளர்) இயேசு இவ்வுலகத்தை விட்டுப் போகாமல் (அவர்)
2. அவர் நம்பிக்கையாளர்களிடம் நிரந்தரமாகக் குடியிருப்பார்.
3. இயேசுவை அவர்பெருமைப்படுத்துவார்
4. இறைவனிடமிருந்து கேட்ட செய்திகளையே அவர் பேசுவார்.
இந்த குணமேன்மைகள் இறைத்தூதர் முஹம்;மது நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை கீழ்க்காணும் சிறு குறிப்புகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
1. இயேசுவுக்குப் பின்னால் வந்த ஒரே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான். இயேசுவுக்கு 6 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் வருகின்றார். இயேசுவின் இறைப்பணி இஸ்ரவேல் சந்ததிகளின் காணாமல் போன ஆடு என்ற எல்லையோடு நின்று விடுகின்றது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செய்தி உலகளாவியது.
2. இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செய்தியைத் தான் இறைவன் உலக முழுமைக்குமான செய்தி - நிரந்தரமான செய்தி எனக் கூறுகிறான்.
3. முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் போல் இயேசுவைப் பெருமைப்படுத்திப் பேசியவர்கள் எவருமில்லை. யூதர்களோ அவரை ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அழைத்தார்கள். அவருடைய அன்னையை (மேரியை) ஒழுக்கங்கெட்டவர்கள் எனக் கூறினார்கள். இயேசுவை அவர்கள் சிலுவையில் அறைய முயன்றார்கள். முஹம்மது நபி யோ இயேசுவை மிகப் பெரிய இறைத்தூதர் என்று கருதினார்கள். இறைவனின் வார்த்தை இயேசு - என்றும் கூறினர். பைபிளில் சொல்லப்படாத இயேசுவின் அதிஅற்புதங்கள் பற்றிக் குர்ஆன் கூறுகிறது. மேரியே மிகச் சிறந்த கற்புள்ள பெண்மணி, சொர்க்கத்தில் இருக்கப் போகும் பெண்களில் சிறந்தவர் என்றும் கூறப்பட்டது. இவ்விதம் இயேசுவை மிக மிகப் பெருமைப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே!
4. நான்காவதாக (தேற்றவாளர் பற்றிய) குண மேன்மைகள் இறைத்தூதர் முஹம்மது நபிக்கே மிகச் சுத்தமாகப் பொருந்தும்.
திருமறைக் குர்ஆன் வானவர் தலைவர் கேப்ரியல்(ஜிப்ரயீல்) அவர்களால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. அவரிடமிருந்து கேட்ட இறைவசனங்கள் வார்த்தை தவறாமல் - சேர்த்தல் ஏதுமில்லாமல் திரிபு இல்லாமல் - மறக்காமல் தனது தோழர்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர் (நபி) தனது விருப்பப்படி எதுவும் கூறுவதில்லை. இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறல்ல! (குர்ஆன் 53:4-5)
சுயமாகத் தானே அவர் பேசமாட்டார் என்ற பைபிளின் வசனத்தை கூர்மையாகப் பார்த்தால் - தேற்றவாளர் என்ற பாத்திரத்தின் குண மேன்மைகள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குண மேன்மைகளோடு மிகச் சரியாக ஒத்துப் போவதைக் காணலாம்.
இந்தத் தீர்க்கதரிசனங்களோடு - மற்ற பிற தீர்க்க தரிசனங்களையும் வைத்துப் பார்த்தால் மறுக்க முடியாத ஒப்புவமை நபி (ஸல்) அவர்களுக்கே பொருந்தும்.
இதைப் பைபிள் - குர்ஆன் - மற்றும் மத ஒப்புநோக்கு பற்றிய நவீன கால ஆய்வுரைகளை வைத்து யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபி (ஸல்) அவர்களை மறுப்பதில்லை.
ஆனால் தவறான கருத்தடிப்படையிலும் விவரமறியாத வெறுப்புடனும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நிராகரிக்கின்றார்கள்.
Tuesday, November 4, 2008
இயேசுவைப் பற்றிய உண்மை (2)
இயேசுவைப் பற்றிய குறிப்பு திருக்குர்ஆனில் அவரது அன்னை மேரி (மர்யாள் - மர்யம்)ன் கர்ப்பம் கொள்வதிலிருந்து தொடங்குகிறது.
மேரியின் தாயான (இம்ரானின் மனைவி) தனது மகள் மேரியை கோவிலில் கடவுளின் சேவைக்கு ஒப்படைப்பதாக நேர்சை செய்கிறாள். ஜக்கரிய்யா மேரியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். மேரியோடு உணவருந்துவதை ஜக்கரிய்யா பழக்கமாகக் கொள்கிறார். இந்த உணவு உனக்கு எங்கிருந்து வருகின்றது என்று ஜக்கரிய்யா ஒருமுறை கேட்க - கடவுளிடம் இருந்து வந்தது - என்று மேரி பதிலுரைக்கின்றார். இதுபற்றி திருக்குர்ஆன் வசனம் வருமாறு :
இம்ரானின் மனைவி ''என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்'' என்று கூறியதையும்-
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும். ''என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்'' எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல் (மேலும் அந்தத்தாய் சொன்னாள்.) ''அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், ''மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?'' என்று அவர் கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்'' என்று அவள்(பதில்) கூறினாள்.
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார். ''இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.''
அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து; ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும் இருப்பார்'' எனக் கூறினர்.
அவர் கூறினார். ''என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்.'' அதற்கு (இறைவன்), ''அவ்வாறே நடக்கும். அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்'' என்று கூறினான். ''என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!'' என்று (ஜகரிய்யா) கேட்டார்.
அதற்கு (இறைவன்), ''உமக்கு அறிகுறியாவது; மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!'' என்று கூறினான். (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள். மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்.
உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்'' (என்றும்), ''மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்யும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக'' (என்றும்) கூறினர்.
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம். மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
மலக்குகள் கூறினார்கள். ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்.
''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசவார். இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (அச்சமயம் மர்யம்) கூறினார்.
''என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?'' (அதற்கு) அவன் கூறினான். ''அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.'' (அல்குர்ஆன் 3:35-47)
மேரி வயதடைந்த பின்னர் பரிசுத்த ஆவி (வானவர் தலைவர் கேப்ரியல்) மனித உருவத்தில் வந்து மேரிக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகும் செய்தியைக் கூறுகிறார். இது பற்றிய உரையாடலை திருக்குர்ஆன் தருகிறது.
மலக்குகள் கூறினார்கள். ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசவார். இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (அச்சமயம் மர்யம்) கூறினார். ''என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?'' (அதற்கு) அவன் கூறினான். ''அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.'' (அல்குர்ஆன் 3:45-47)
அதிசய அற்புதமாக மேரி அந்தக் குழந்தையை கருத்தரித்ததும் தொலை தூரத்திற்குப் போய் பிரசவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். (மர்யம்) என்ற தலைப்பிலுள்ள குர்ஆன் அத்தியாயம் நமக்கு மேரி எத்தகைய மன உணர்வுகளைப் பெற்றாள் - குழந்தையான இயேசுவை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் போது மேரியிடம் அவர் என்ன பேசினார் என்பதை எடுத்துக் கூறுகின்றது.
பின்னர் மர்யமுக்கு கர்ப்பம் ஏற்பட்டு கர்ப்பத்துடன் தூரத்திலுள்ள ஒரு இடத்ததைச் சென்றடைந்தார்.
பின்பு அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டு ஒரு பேரீச்சை மரத்தடியில் சென்ற போது - இதற்கு முன்பாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? முற்றிலும் நாம் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே! என்று கூறினார்.
அடிப்புறத்திலிருந்து (ஜிப்ரயீல்) சத்தமிட்டு நீர் கவலைப்படாதீர்! உமக்கு சமீபமாக உம் இறைவன் ஓர் ஊற்று உதித்தோடச் செய்திருக்கிறான். இப்பேரீச்சை மரத்தின் கிளையை உன் பக்கம் பிடித்து உலுக்கு! அது பழுத்த பழங்களை உன் மீது சொறியும். நீ புசித்துக் குடித்து எந்த ஒரு மனிதரைக் கண்ட போதும் - நிச்சயமாக நான் அருளாளனுக்கு நோன்பு நோற்கிறேன் - எனக் கூறிவிடு.
பின்னர் மர்யம் அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு மக்களிடம் வரவே அவர்கள் - மர்யமே! மர்யமே! நீ நிச்சயமாக மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய். ஹாரூனின்; சகோதரியே! உன் தாயும் கெட்ட நடத்தை உடையவராக இல்லையே! என்று கூறினார்கள்.
(மர்யம் குழந்தை இருந்த) அதன் பக்கம் ஜாடை காண்பித்தாள். அதற்கு அவர்கள் - மடியில் இருக்கும் சிறு குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம் என்று கூறினார்கள்.
(குழந்தை இயேசு) கூறியதாவது : நிச்சயமாக நான் இறைவனின் அடிமை, அந்த இறைவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் ஆக்குவான்.
நான் எங்கிருந்த போதிலும் அவன் என்னை மிக்க பாக்கியமுள்ளவனாக ஆக்குவான்! நான் உயிர் வாழும் வரையிலும் தொழுகையை கடைபிடித்து ஒழுகும்படியும், ஜகாத் கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்து இருக்கிறான்.
என்னுடைய தாயுக்கு நான் நன்றியுள்ளவனாகவும், நான் முரடனாகவோ வழி தப்பியவனாகவோ ஆகாதபடி செய்வான். நான் பிறந்த நாளிலும் நான் மரிக்கும் நாளிலும் உயிர் பெற்று எழும் நாளிலும் நான் சாந்தமும் சமாதானமும் என் மீது நிலை பெற்றிருக்கும். (அல்குர்ஆன் 19: 22-33)
மேற்சொன்ன திருக்குர்ஆனின் அத்தியாயத்திலேயே இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகத்திற்கும் இயேசுவைப் பற்றிய உண்மை இது தான் என்று உறுதி அளிக்கிறான். கிறிஸ்துவர்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றும் இயேசு - மேரியின் மகன் மட்டுமே என்பதை இறைவன் வலியுறுத்துகின்றான். திருக்குர்ஆன் வசனம் தொடர்கிறது.
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்)
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், ''அகக!'' என்று தான் கூறுவான். (உடனே) அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன் 19:34-35)
இயேசுவின் உண்மையான - இயற்கை நிலை இது என அழுத்தம் திருத்தமான முறையில் நிலைநாட்டிய இறைவன் கிறிஸ்தவர்களை விவாதத்திற்கு அழைக்குமாறு முஹம்மது (ஸல்) அவர்களைப் பணிக்கிறான். அவர்களை ஒரே இறைவனைத் தொழ வருமாறு ஆணை பிறப்பிக்கிறான்.
இறைவன் தான் என்னைப் படைத்து பேணிப் பாதுகாப்பவன். அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (அல்குர்ஆன் 19:36)
கடவுளுக்கு குமாரர் உண்டு என்ற கருத்தை நிராகரிக்கும் போது இந்த அத்தியாயத்தில் வலிமையான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(கிறிஸ்தவர்களாகிய) அவர்கள் - அருளாளனாகிய இறைவன் தனக்கு ஒரு மகன் எடுத்துக் கொண்டவர் எனக் கூறுகின்றனர்.
நிச்சயமாக (கிறிஸ்தவர்களாகிய) நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள். வானங்கள் வெடித்துப் போகவும், பூமி வெடித்துப் போகவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் கூடும். இறைவனுக்கு சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணமாக! சந்ததி எடுத்துக் கொள்வது இறைவனுக்குத் தகுமானதல்ல. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் ஒவ்வொன்றும் இறைவனிடம் அடிமையாகவே இருந்து வருகின்றது (அல்குர்ஆன் 19:88-93)
திருக்குர்ஆன் இயேசுவுக்கு மனித உருவிலான தந்தை இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த ஒப்புதல் உறுதி - இயேசுவை கடவுளின் குமாரர் ஆக்கவில்லை.
(தந்தை இல்லாதவர் கடவுளின் குமாரர் என்று ஒப்புக் கொள்ளும்) இந்தத் தகுதியை வைத்துப் பார்த்தால் (முதல் மனிதரான) ஆதம் - இயேசுவை விட கடவுளின் குமாரர் என்று ஆகி விடத் தகுதியுடையவராகி விடுவார். ஏனெனில் ஆதமுக்குத் தந்தையும் இல்லை, தாயும் இல்லை. ஆக திருக்குர்ஆன் அதிசய அற்புதமான இரு படைப்புகளை (ஆதம் - இயேசு) பற்றிக் கூறி கவனத்தை ஈர்க்கிறது.
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் ''குன்'' (ஆகுக) எனக் கூறினான். அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (அல்குர்ஆன் 3:59)
கடவுளின் குமாரர் இயேசு என்ற கருத்தை மறுப்பது போலவே திருக்குர்ஆன் (பிதா - மகன் - பரிசுத்த ஆவி என்ற) திரியேகத் தத்துவத்தையும் மறுக்கிறது.
ஏனெனில் இறைவன் ஒருவனே! இது தான் ஓரிறைத் தத்துவத்தின் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் அடிப்படை.
காரணகாரியப்படிப் பார்த்தாலும் - சாதாரணமான கூட்டல் கணக்குப்படி பார்த்தாலும் மூன்று (பிதா - மகன் - பரிசுத்த ஆவி) என்பது ஒன்று என ஆகாது.
பெண்கள் (அந்நிஸா) என்ற அதிகாரத்தில் உள்ள கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் குர்ஆன் கூறுகிறது :
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான். இன்னும் (''குன்'' ஆகக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான். (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான். ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள். இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள். (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்., பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய் ) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களேர். அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பன். ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழமையாக (அல்லாஹ்) கொடுப்பான். இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான். எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணு கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:171-173)
மக்களை - ஆம்! அனைத்து மக்களையும் முஹம்மது (ஸல்) கொண்டு வந்த இறைச் சான்றுகளை - அத்தாட்சிகளைக் கவனிக்குமாறு திருக்குர்ஆனில் உள்ள இந்த வசனங்கள் அழைக்கின்றன.
முந்திய தலைமுறைகளின் எண்ணங்களிலும் கொள்கையிலும் தவறான பொருளை மக்கள் மற்ற பிழைகளோடு சேர்த்து இணைத்து (குழப்பிக்) கொள்வார்கள் என்பதை இறைவன் அறிவான். அந்தப் பிழைகளைக் கண்டுபிடித்து (திருத்திக் கொள்ளும்) வகையறியாது இருப்பார்கள். திருக்குர்ஆன் அத்தகைய மக்களுக்கு, (பிழை திருத்திக் கொள்ளும்) அத்தாட்சியாக உள்ளது. இறைவன் கூறுகிறான் :
ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழமையாக (அல்லாஹ்) கொடுப்பான். இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான். எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணு கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணப்படமாட்டார்கள். மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நோர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹமத்திலும், அருளிலும் புகச் செய்கிறான். இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான். (அல்குர்ஆன் 4:173-175)
இறுதித் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் - இயேசுவுக்கும் நடக்கும் விவாதம் என்ற தலைப்பின் கீழ் - இயேசுவின் கடவுள் தன்மையையும் (மேரியின் கடவுள் தன்மையையும்) மறுக்கப்படுவது திருக்குர்ஆனில் எடுத்துக் கூறப்படுகிறது.
அந்த நாளில் இறைத்தூதர்களும் - அனைத்து இன மக்களும் இறைவன் முன்னர் கூடியிருக்கிறார்கள்.
இறைத்தூதர்களைப் பார்த்து மக்கள் அவர்களை எப்படி வரவேற்றார்கள் அவர்களிடம் மக்கள் என்ன கூறினார்கள் என்று இறைவன் கேட்பான். அவ்விதம் கேள்வி கேட்கப்படுகின்றத இறைத்தூதர்களில் ஒருவராக இயேசு இருப்பார்.
இன்னும், ''மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?'' என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், ''நீ மிகவும் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்'' என்று அவர் கூறுவார். ''நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), ''என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்'' (என்றும்); (இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்'' (என்றும் கூறுவார்). அப்போது அல்லாஹ், ''இது உண்மை பேசபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். (அல்குர்ஆன் 5:116-119
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மை!
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மை
டாக்டர் மனேஹ் ஹாமத் அல்ஜொஹானி
முன்னுரை :
இஸ்லாம் மார்க்கத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு இயேசு கிறிஸ்துவின் பாத்திரத்தைப் பற்றியதாகும். இந்தக் கருத்து வேறுபாடுகள் தான் இரண்டு மார்க்கத்தையும பிரித்து வைத்திருப்பது.
இயேசு கிறிஸ்துவை - முஸ்லிம்கள் - ஆப்ரகாம், மோசஸ், முஹம்மது நபி போன்றவர்களை மதிப்பது போல் அவர் மிகப் பெரிய தீர்க்கதரிசி, இறைவனின் தூதர் என்று மதிப்பு அன்பு செலுத்துகின்றனர்.
கிறிஸ்துவர்கள், இதற்கு மாறாக, இயேசுவைக் கடவுள் என்றும் கடவுளின் குமாரர் என்றும் கருதுகின்றனர். இஸ்லாமியர்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தன்னைக் கடவுள் என்றோ - கடவுளின் குமாரர் என்றோ இயேசு ஒரு போதும் கூறிக் கொள்ளவில்லை என்று இஸ்லாம் போதிக்கின்றது.
இயேசுவின் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த கிறிஸ்துவ மார்க்கத்தின் முக்கிய கொள்கைகளை இஸ்லாம் முழுமையாக நிராகரிக்கிறது. அவை என்ன?
- திரி ஏகத்துவம் (முத்தெய்வக் கொள்கை - பிதா, மகன், பரிசுத்த ஆவி)
- இயேசுவின் கடவுள் தன்மை
- கடவுளின் குமாரன் என்ற கிறிஸ்துவின் அந்தஸ்து!
- ஜென்மப்பாவம் அல்லது முதற்பாவம்
- பாவ மன்னிப்பு
மேற்சொன்ன கொள்கை எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு இறைவன் அளிக்க விரும்பிய தகுதிக்கு அதிகமாக அவரை மிக மிக உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் விளைவுகள் என்பது தெளிவாகும்.
இந்த அதீதமான - அளவுக்கு அதிகமா