Friday, November 21, 2008

நபிகள் நாயகம் குறித்து கிறிஸ்தவரின் விமர்சனமும் அதற்கு விளக்கமும்!

"பைபிளில் ஏராளமான தீர்க்கதரிசிகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்ததாகக் கூறப்பட்டுள்ளதே? இளம்பெண்கள், சிறுமியர் என்ற வித்தியாசம் இன்றி போரில் கைப்பற்றப்பட்ட பெண்களையும் போராளிகள் தங்களுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறதே? இந்த அடிப்படையை வைத்து பைபிளை நீங்கள் ஏன் விமர்சிக்கவில்லை?"
ஜாண் என்ற கிறிஸ்தவர் அனுப்பிய மறுமொழியும் அதற்கான விளக்கமும்!

John Said,
//சவுலை பற்றி சரியாக சொல்லி இருக்கிறிர்கள். இது போலத்தான் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவருக்கு நாற்பது வயது இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று நாந்தான் கடவுள் அனுப்பிய தூதர் என்றார். கடவுளின் செயலாளர் என்னிடம் வந்து இதை சொன்னார் என்றார். பிறகு கடவுள் என் மூலமாக ஒரு வேதத்தை உலகிற்கு சொல்லப்போகிறார் என்றார். இதற்கு முன்பும் கடவுள் தன்னுடைய தூதர்களை உலகிற்கு அனுப்பி இருக்கிறார், அவர்களுக்கு வேதங்களும் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த வேதங்களும், இறைதூதர்களும் அந்த கடவுளால் பாதுகாக்கபட முடியாமல் போய்விட்டதால் என் மூலமாக கடவுள் புது வேதம் தருகிறார். அதை அவரே பாதுகாப்பதாக சொன்னார் என்றும் அந்த வியாபாரியாக இருந்த திடீர் இறைத்தூதர் சொல்லிக்கொண்டார். என்னைப்பற்றி அங்கே அப்படி சொல்லி இருக்கிறது, இங்கே இப்படி சொல்லி இருக்கிறது என்றும் கூறினார். தினமும் என்மீது கடவுள் வந்து இறை வேதம் சொல்லிவிட்டு போகிறார் என்று சொன்னார். இதை எல்லாம் அவரே சொல்லிக்கொண்டார். பாவம் படிப்பறிவு இல்லாத அரபு மக்கள். அவர் சொன்னதை எல்லாம் நம்பிவிட்டார்கள். எல்லாரும் நான்கு மனைவிதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஆனால் நான் மட்டும் குழந்தை அல்லது மாமி என்ற கணக்கில்லாமல் எத்தினைபேரை வேண்டுமென்றாலும் திருமணம் செய்வேன், அப்படி செய்ய எனக்கு இறைவன் சிறப்பு அனுமதி தந்திருக்கிறார் என்றார். நன் சொல்வது மட்டும் தான் உண்மை, இதற்கு முன்பு, இறைவன் பிற இறைதூதர்கள் மூலம் சொன்னது எல்லாம் தப்பு என்றார். எப்படியோ அடித்து பிடித்து அந்த நாட்டுக்கு மன்னராகவும் ஆகிவிட்டார். பிறகு, பிற நாட்டு மன்னர்களுக்கு கடிதம் அனுப்பினார் எப்படி தெரியுமா "நாந்தான் இறைத்தூதர் நான் சொல்றது தான் இறைவேதம். இத நம்பினால் உனக்கு விமோசனம் இல்லேன்னா கஷ்டம் தான்" இந்த மாதிரி. இப்படியே அவரோட மதத்துக்கு ரொம்ப ஆட்களை சேர்த்துக்கிட்டார். இதுல முக்கியமான விசயம் என்னனா, கடவுளை பத்தி தப்பா பேசினாக்கூட அவரோட ஆட்கள் பொருத்துப்பாங்க, ஆனா திடீர் இறைதூதர் ஆன அந்த வியாபாரிய எதாவது ஒரு வார்த்தை தப்பாக பேசிவிட்டால் பேசியவர் பரம்பரையயையே கொலை செய்து விடுவார்கள். இது இந்த காலத்திலும் நடக்கிறது. இன்னிக்கு உலகத்துல நிறைய நாடுகளில் அவரோட தொண்டர்கள் இருக்காங்க. அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்கதான் உண்மை கடவுளை கும்பிடுறாங்க மத்தவங்க எல்லாம் சாத்தான கும்பிடுறாங்க. பிற கடவுள கும்பிடுரவங்க எல்லாம் கேவலமான காபிர்கள். இதெல்லாம் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது. இப்படியாக பல கோடி மக்கள் இன்னும் அவர நம்பிட்டுதான் இருக்காங்க. அவங்க வணங்குற கடவுள் பத்தியும் அவர்தான் சொன்னார், அந்த கடவுள் வேதம் தந்ததாவும் அவர்தான் சொன்னார், அவர்தான் இறைதூதர்நும் அவர்தான் சொன்னார், ஆகா மொத்தத்தில் அவங்க மதத்தில் எல்லாமே அவர் சொன்னது தான்.ரொம்ப வேடிக்கை என்னன்னா இதுக்கு முன்னாடியும் இதே கடவுள் வேற இறைதூதர்களுக்கு வேதம் கொடுத்தாராம். அதுல மனுஷ கரங்கள் விளையாடி விட்டதாம் வேதம் குடுத்த கடவுளால அத காப்பாத்த முடியலையாம் அதுனால இந்த வியாபாரி (திடீர் இறைத்தூதர்) மூலமா புது வேதம் குடுத்தாராம். இதும் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது. இவரையும் இன்னும் நம்பிட்டுதான் இருக்காங்க உலகத்துல நிறைய பேர். என்ன பண்றது உலகத்துல இந்த மாதிரி நிறய நடந்துகிட்டுதான் இருக்கு. //

அன்பர் ஜாண் அவர்களுக்கு,

பவுல் பற்றி பதியப்பட்ட செய்திகள் அனைத்தும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவை. இதனை மறுக்க இயலாத நீங்கள் அவர் பற்றிக் கூறியது அனைத்தும் சரியானவயே என்று ஒப்புக் கொண்டுள்ளீர்கள். அத்துடன் உங்களின் இயலாமை கோபமாக வெளிப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது விமர்சனத்தை வைத்துள்ளீர்கள். பொதுவாக தங்களால் பதிலளிக்க இயலாத விஷயங்களுக்கு இப்படி எதிர்மறைக் கேள்விகளை எழுப்புவது கிறிஸ்தவர்களின் வழக்கம். சிறுபிள்ளைத் தனமான இச்செயல் கிறிஸ்தவத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் சரியானவை தான் என்று மேன்மேலும் உறுதிப்படுத்துகிறது. இனி உங்களின் விமர்சனத்துக்கு வருவோம்.

முஹம்மது (ஸல்) அவர்கள் பவுலைப் போன்று திடீரென்று ஒரு ஒருநாள் இதோ இறைவன் என் முன் தோன்றினான் என்று கூறவில்லை. நாற்பது ஆண்டுகள் தன் சமூகத்துக்கு மத்தியில் சாதாரண ஒரு மனிதனாக நடமாடுகிறார்கள். ஆனாலும் தன்னிகரற்ற உயர்ந்த ஒழுக்கத்துடன் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்று வாழ்கிறார்கள். நீங்கள் கூறியது போல் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களள் வியாபாரத்தில் காட்டிய அசாத்திய நேர்மையைக் கண்டு வியந்து அவர்களின எஜமானியாக இருந்த உயர் குலத்தைச் சேர்ந்த கதீஜா அம்மையாரே அவர்களைத் திருமணம் முடிக்க தன் இசைவைத் தெரிவிக்கிறார்கள். தன் சமூகமக்களிடம் காணப்பட்ட தீச்செயல்களைக் கண்டு மனம் வெறுத்து தனிமையை நாடிச் செல்கிறார்கள். ஹிரா குகையைச் சென்றடைந்து அங்கு இறைவனை வணங்கி காலத்தைக் கழிக்கிறார்கள். இவ்வாறு மூன்று வருடம். அப்போது தான் வானவர் அவர் முன் தோன்றி இறைசெய்தியை அறிவிக்கின்றார்கள். அப்போது கூட அவர்களுக்கு தெரியாது இறைவனின் தூதர்தான் தன்னிடம் வந்தவர் என்று. அதனால்தான் பயந்து வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் தனக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக பயப்படுகிறேன் என்று கூறினார்கள். மனைவியோ, உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். தாங்கள் உறவுகளுடன் இணங்கி வாழ்கின்றீர்கள், சிரமப்படுவோரின் சுமைகளைச் சுமந்து கொள்கின்றீர்கள், வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினரை உபசரிக்கிறீர்கள், உண்மையான சோதனையில் அகப்பட்டவர்களுக்கு உதவுகின்றீர்கள் என்று கூறித் தேற்றுகிறார்கள். அதற்குப் பின்னர்தான் அவர்களுக்குத் தெரியவருகிறது, தன்னிடத்தில் வந்தவர் வானவா ஜிப்ரீல் என்பதும் தான் இறைவனின் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதும்.

மேற்கண்ட செய்திகளில் எந்த முரண்பாடும் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர்தான் என்பதற்கு அவர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆனின் வசனங்களே சாட்சி! அவை நாற்பது வயது வரை அவர்கள் அறிந்திராத அற்புத செய்திகள். அதனால் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமைத் தழுவினர். அதனால் தான் அன்றைய பெரிய இலக்கிய வாதிகள் கூட 'இது மனிதனின் சொல்லல்ல' என்று வியந்து தங்களையும் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டனர். அதனால் தான் 13 ஆண்டுகளில் அரேபியத் தீபகற்பமே இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டது. அதனால் தான் பத்ரு வெற்றி! மக்கா வெற்றி! என் அவர்களின் முன்னறிவிப்புகள் நடந்தேறியது. அதனால் தான் மிகக் குறுகிய காலகட்டத்தில் இஸ்லாம் உலகெங்கும் பரந்து வியாபித்தது. இப்போது சொல்லுங்கள் நீங்கள் கூறியது போல் படிப்பறிவு இல்லாத அரபு மக்கள்தான் அவர்களை ஏற்றுக் கொண்டார்களா? இல்லை சகோதரரே! நிச்சயமாக இல்லை. அன்று முதல் இன்று வரை மாமன்னர்கள் முதல் விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும், ஏன் பாமரர்களும் தங்கள் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அன்றைய அரபுகளின் ஏற்றம் மிக்க தலைவர் உமர், மதீனாவின் கோத்திரத் தலைவர் ஸஅது பின் முஆது, மாமன்னர் நஜ்ஜாஷி, என சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களையும் இந்த மார்க்கம் ஈர்த்தது.

இப்படி ஏராளமான செய்திகளைக் கூற முடியும். அவற்றையெல்லாம் கூறினால் அதற்கு இப்பக்கங்கள் போதாது.

இனி நீங்கள் கூறிய திருமணம் சம்மந்தப் பட்ட விஷயம். நபிகள் நாயகத்தை நீங்கள் நிராகரிப்பதால் இத்தகைய விமர்சனங்களை வைக்கின்றீர்கள. திருமணம் செய்யாமலிருப்பதே கடவுளுக்குப் பிடித்தமான செயல் என்று நடைமுறைக்கு ஒத்து வராத பைபிளின் தத்துவத்தின் அடிப்படையில் இஸ்லாமை நீங்கள் பார்ப்பதால் அனுமதிக்கப்பட்ட திருமணத்தைக் குறித்து நீங்கள் விமர்சிக்கின்றீர்கள. 1400 வருடங்களாக நபிகள் நாயகத்தை இறைதூதராக, இஸ்லாமைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்களின் திருமணம் குறித்துத் தெரியும். திரிபு வாதம் செய்து நீங்கள் குறிப்பிட்டது போல் அவர்கள் அதனை நம்பவில்லை. இறைதூதர்கள் அனைவரும் திருமணம் முடிப்பவர்களே! காரணம் அவர்களும் மனிதர்களே. இனி உங்களை நோக்கி ஒரு கேள்வி. பைபிளில் ஏராளமான தீர்க்கதரிசிகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்ததாகக் கூறப்பட்டுள்ளதே? இளம்பெண்கள், சிறுமியர் என்ற வித்தியாசம் இன்றி போரில் கைப்பற்றப்பட்ட பெண்களையும் போராளிகள் தங்களுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறதே? இந்த அடிப்படையை வைத்து பைபிளை நீங்கள் ஏன் விமர்சிக்கவில்லை? ஒர் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதை நிராகரித்த அன்றைய மக்கள்கூட அவர்களின் திருமணம் குறித்தோ அவர்கள் பெண்விரும்பி என்றோ விமர்சனங்களை வைக்கவில்லை. அதனால் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதை நிராகரிக்க இத்தகைய வாதங்கள் எடுபடாது. அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்தி, அதவது குர்ஆன், அதில் முரண்பாடு உள்ளதா? குழப்பம் உள்ளதா? இன்றைய காலத்துக்குப் பொருந்தாத சட்டம் உள்ளதா? அது இறைவேதம் இல்லை என்று கூற உங்களிடம் உள்ள நியாயங்கள் என்ன? அதைக் கூறுங்கள் அதற்கு நாம் பதிலளிப்போம். இதுவே நியாயமான விமர்சனமாக இருக்க முடியும். இதை விடுத்து இல்லை மீண்டும் நான் அதையே பிடித்து நிற்பேன் என்ற ரீதியில் உங்களது மறுமொழி இருக்குமானால் நிச்சயமாக அவை அலட்சியம் செய்யப்படும்.

//அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்கதான் உண்மை கடவுளை கும்பிடுறாங்க மத்தவங்க எல்லாம் சாத்தான கும்பிடுறாங்க. பிற கடவுள கும்பிடுரவங்க எல்லாம் கேவலமான காபிர்கள். இதெல்லாம் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது.//

சகோதரரே! யாரைத் திருப்திப்படுத்த இப்படிக் கூறினீர்கள்? பைபிளின் பழய ஏற்பாடு கூறும் ஒரே கடவுளை வணங்காமல் மற்றவர்களை எவரேனும் வணங்கினால் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று பைபிள் குறிப்பிடும் வரிகளை நீங்கள் கவனிக்கவில்லையா? இப்படிப்பட்ட விமர்சனத்தைக் கூறியதன் மூலம் உங்களின் முகத்திலேயே கரி வாரிப் பூசிக் கொண்டீர்களே?

அடுத்ததாக முந்தைய வேதங்களில் மனிதக் கரங்கள் விளையாடியதா என்பதற்கு விரிவான விளக்கங்கள் பதிவு செய்யப்படும். அதற்கு முன்னால் பினவரும் தொடுப்புகளை சற்று பார்வையிடுங்களேன்.
முந்தைய வேதங்கள் குறித்து குர்ஆன்

உங்களின் சிந்தனைக்காக சில வசனங்கள்:

முஹம்த் (ஸல்) அவர்கள் முந்தைய வேதங்களைக் குறித்து அறிந்திருக்கவில்லை:

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (29:48)

நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர். (42:52)

மர்யம் (அலை) அவர்களைக் குறித்த செய்திகள் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்!

(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3:44)

முந்தைய நபிமார்கள் மற்றும் சமுதாயங்கள் பற்றிய வரலாறு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது தான்!

(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). (11:49)

இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது). (28:46)

(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். (12:3)

ரோமாபுரியின் வெற்றி குறித்த குர்ஆனின் முன்னறிவிப்பும், முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அது நடந்தேறியமையும் அதற்கு சாட்சி வகித்தவர்களும் அவர்களுக்கு அருளப்பட்டது இறை வசனங்கள்தான் என்பதற்கான சான்றுகள்!

அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்வடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (30:1-6)

எகிப்தில் கண்டெடுக்கப்பட்டு கெய்ரோ அருங்காட்சியகத்தில் பாதுகாகக்கப்பட்டுள்ள ஃபிர்அவ்னின் உடல் குறித்து 1400 வருடங்களுக்கு முன்னரே குர்ஆன் கூறிய செய்தி அது இறைவேதம் என்பதை நிருபிக்கிறது. ஆனால் ஃபிர்அவ்னைப் பற்றிய செய்திகளைக் கூறும் பைபிளில் இச்செய்தி இல்லை. இதனை ஆய்வு செய்த பிரான்சு நாட்டு மருத்துவ ஆயராய்ச்சியாளர் டாக்டர் மோரிஸ் புகைல் இஸ்லாமைத் தழுவினார்!

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (என்று அவனிடம் கூறப்பட்டது). (10:92)

நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற பத்றுப் போரில் மிகக் குறைந்த போர்த் தளவாடங்களை உடைய 313 முஸ்லிம் வீரர்கள் தங்களை எதிர்த்துப் போரிட நிறைந்த ஆயத்தங்களுடன் வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிரிகளை வெற்றி கொண்டனர். இதைப் பற்றிய முன்னறிவிப்பு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும்போதே இறைவனால் வழங்கப்பட்டது!

அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். (54:44, 45)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்டார்கள். அதன் பிறகு பல கோத்திரங்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமைத் தழுவியது. இது குறித்த ஒன்றுக்கு மேற்பட்ட முன்னறிவிப்புகளை குர்ஆன் அறிவித்தது. எந்த மாற்றமும் இல்லாமல் அவை நடந்தேறியது குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனால் அருளப்பட்டதுதான் என்பதற்கான உறுதியான சான்று ஆகும்!

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (48:1)

"(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்" (28:85)

அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்;. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (3:111)

"நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும் (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்" (48:27)

குர்ஆன் நம்மைப் படைத்த அந்த அகில உலகங்களின் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன. சத்தியத்தை நடுநிலையுடன் ஆராய்ந்து உண்மையை ஏற்றுக் கொள்ள ஜாண் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.

அபூ அப்திர்ரஹ்மான்

9 comments:

சுல்தான் said...

//அதற்குப் பின்னர்தான் அவர்களுக்குத் தெரியவருகிறது, தன்னிடத்தில் வந்தவர் வானவர் ஜிப்ரீல் என்பதும் தான் இறைவனின் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம்//
இது கூட அன்னை கதீஜா அவர்கள் பைபிளை நன்றாக அறிந்திருந்த வரகா பின் நவ்பல் என்ற பார்வையற்றவரிடம் நபியை அழைத்துச் சென்று அவர் உறுதிப்படுத்திய பின்னரே இருவரும் அறிகிறார்கள்.

அன்போடு பதிலைத் தரும் தங்கள் பாங்கு அருமை நண்பரே.

அபூ அப்திர்ரஹ்மான் said...

சகோதரர் சுல்தான் அவர்களுக்கு நன்றி! உங்கள் கருத்திச் ஒரு சிறிய திருத்தம்.

//பைபிளை நன்றாக அறிந்திருந்த// தவ்றாத்தை நன்றாக அறிந்திருந்த என்றிருக்க வேண்டும்.

Alhameed said...

திரு அப்திர்ரஹ்மான் அவர்களே, அழகிய முறையில் பதில் அளித்துள்ளீர்கள்.

ஏகத்துவத்தில் வெளியான கட்டுரைக்கு மறுப்பு என்று கூறி நூறு ஒற்றுமைகளை ஒரு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். மலைபோல் உள்ள முறன்பாடுகளை எடுத்து கூறினால் அதற்கு பதில் அளிக்க முடியாமல் கடுகுபோல் உள்ள ஒற்றுமைகளை கூறுகிறார்கள். அந்த ஒற்றுமைகளில் சில இயேசு கூறினாரா என்பதும் சந்தேகமே.

Jafar Safamarva said...

அல்ஹம்துலில்லாஹ்! அருமையான விளக்கங்கள்!! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!!!

Robin said...

அபூ அப்திர்ரஹ்மான்,
இந்த தளத்தில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தேன். இதுவரை பதில் இல்லை. என் அழைப்பை ஏற்று கொண்டீர்களா இல்லையா என்பதை தெரிவிக்கவும்.

அபூ அப்திர்ரஹ்மான் said...

அன்புடன் ராபின், முதலில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் ஏதோ இஸ்லாமியர்களிடம் நேரடி விவாதம் செய்ய வருவதைப் போன்றிருந்தது. அதற்கு தயார் என்ற எம்முடைய பதிலைப் பார்த்ததும் விவாதத்தை இந்த தளத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்கிறீர்கள். அதாவது எழுத்து மூலம் விவாதிக்கலாம் என்கிறீர்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறதே? பிறகு எதற்கு ஒரு கேள்வி? நீங்கள் பின்னூட்டமிட்டீர்கள், நான் பதிலளித்தேன். இன்னும் கேளுங்கள் பதிலளிப்பேன். என்னால் இயலவில்லை எனில் அறிஞர்களிடம் கேட்டு பதிலளிப்பேன். நேரடி விவாதம் என்றால் இரண்டு தரப்பாரம் ஒரே மேடையில் அமர்ந்து விவாதிப்பது. ஒருவர் கருத்துரையாற்றுவார், இன்னொருவர் மறுப்புரையாற்றுவார். அதுபோன்று இருதரப்பாரும் கேள்விகளுக்கு பதில் சொல்வர். இது நேரம் குறிக்கப்பட்டு முறையாக நடப்பதாகும். அதற்கென விதிமுறைகள் வகுக்கப்படும். இத்தகைய விவாதங்கள் நிறைய நடந்துள்ளன. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எழுத்து விவாதம் என்பது இதற்கு முற்றிலும் மாறுபட்டது. நீங்கள் எங்கிருக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் எங்கிருக்கின்றேன் என்பது உங்களுக்கும் தெரியாது. அதற்காக நேரமும் குறிப்பிட முடியாது. எதைக்குறித்து முதலில் விவாதிப்பது? என்ன தலைப்பைதத்தேர்வு செய்வது? என்பது குறித்து நாம் இருவரும் சேர்ந்தே முடிவுகள் எடுக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒருவாரம் கழித்து அதாவது புதன் கிழமையிலிருந்து ஆரம்பிப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். இது உங்கள் பிரச்சினை. அதுபோன்று பதியப்பட்ட கட்டுரைகளுக்கு மறுப்புக் கட்டுரை எவ்வளவு நாளில் பதியவேண்டும்? என்பதையும் நிர்ணயிக்க வேண்டும். இல்லையெனில் பதிலளிப்பேன் என்று கூறிவிட்டு நீண்ட காலம் பதிலளிக்காமல் காலம் தாழ்த்தவும் வாய்ப்பு உண்டு அல்லவா? தம்மால் பதிலளிக்க இயலாதவற்றுக்கு சில எழுத்து விவாதப் பேர்வழிகள் இத்தகைய நொண்டிக்காரணங்களையும் கூறுவதுண்டு. //உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் நீங்கள் பதிலளியுங்கள் // பின்னூட்டங்கள் அனுப்பி சிறிது நேரத்திலேயே அவசரப்பட்ட நீங்கள் நான் பதிலளிக்க தாமதம் ஆனால் பதிலளிக்க துணிச்சல் இல்லை என்ற குற்றச்சாட்டையும் வைப்பீர்களே? எழுத்து விவாதத்தில் இதுபோன்ற குறைபாடுகள் உண்டு என்பதை மறக்க வேண்டாம். இதுவே நேரடி விவாதமாக இருந்தால் இவ்வாறு நடக்காது.

அதுபோன்று நீங்கள் என்னுடன் விவாதம் செய்வதாக இருந்தால் நீங்கள் இங்கே பதியப்போவது உங்களின் கேள்விகள் அல்லது கட்டுரைகளா? அல்லது கிறிஸ்தவ தளங்கள் வெளியிட்ட கட்டுரைகளை மறுபதிவு செய்யப் போகிறீர்களா? அதையும் தெளிவு படுத்தவேண்டும்.

உங்கள் பதிலைப் பதிவிடுங்கள் விவாதத்தைப் பற்றி முடிவு செய்வோம்.

அன்புடன் அபூ அப்திர்ரஹ்மான்.

Robin said...

நீங்கள் வசதிப்படும் நேரத்தில் பதிலளியுங்கள் என்று சொன்னது பெரும்பாலும் நீங்கள் பின்னூட்டம் அனுப்பி பல மணிநேரம் கழித்து வெளியிடுவதால் அல்லது பதிலளிப்பதால். நான் ஏற்கனவே சொன்னது போல இது கேள்வி பதில் போல இருக்கும். வெறுமனே ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரைகளை அப்படியே மறுபதிப்பு செய்வதால் எந்த பயனும் இல்லை. அதே நேரம் தவகல்களை பல இடங்களிலிருந்து திரட்டி விஷயங்களை புரிந்துகொள்வதிலும் தவறில்லை. மேலும் நான் பதிலளிக்க நீண்ட காலம் எடுக்கபோவதில்லை. எந்த நொண்டிக்காரணமும் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் ஒரு பெரிய மேதாவியோ அறிஞனோ கிடையாது என்றாலும் என்னை பின்னூட்டமிட தூண்டியது தொடர்ந்து நீங்கள் கிறிஸ்தவத்துக்கு எதிராக வைக்கும் விமர்சனங்கள். என்னை பொறுத்தவரை விவாதம் என்பது ஒரு கருத்து பரிமாற்றம். அது ஒரு சண்டைக் களம் அல்ல. மத சம்பத்தப்பட்ட விவாதத்தில் இது முக்கியமாக கருத்தில் கொள்ளப்படவேண்டிய விஷயம். நீங்கள் விவாதத்திற்காக தனி தொடுப்பு ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்

அபூ அப்திர்ரஹ்மான் said...

அன்பர் ராபின் அவர்களே, உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் வரவேற்கிறேன். உங்களது கருத்துக்களை உங்களது பின்னூட்டங்கள் சம்மந்தப்பட்ட பதிவின் கீழ் வைத்துக் கொள்ளலாம்.
http://christianpaarvai.blogspot.com/2008/11/blog-post_20.html

அதே நேரத்தில் உங்கள் பின்னூட்டங்கள் குறித்து நான் எழுதியதையும் மறக்க வேண்டாம். அத்துடன் ஜாண் என்பவருக்கு நான் அளித்த பதிலையும் பார்வையிடவும்.
http://christianpaarvai.blogspot.com/2008/11/blog-post_21.html

மேலும் இது குறித்து ஏதேனும் கூற விரும்பினால் abooabdu@gmail.com என்ற என் தனி மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்

Robin said...

நன்றி.