Saturday, November 15, 2008

இன்றைய கிறிஸ்தவத்தின் நிறுவனர் யார்? ஒரு வரலாற்று ஆய்வு!

இன்றைய கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய
பைபிளின் புதிய ஏற்பாட்டின் மொத்தமுள்ள 27 புத்தகங்களில் 14 புத்கங்களுக்கு சொந்தக்காரர் இந்த பவுல் என்று சொல்லப்படுகின்றது. இவர் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளவர்களுக்கு கடிதங்களாக எழுதப்பட்டது என்றாலும், அவற்றையே தற்போது வேதம் என்றப்பெரில் பைபிளில் இனைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாடு முழுவதும் இயேசுவுக்கோ அல்லது இயேசுவின்
சீடர்களுக்கோ சொந்தமானதல்ல.


பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 1)
- அபூ இப்றாகீம்
நன்றி: ஏகத்துவம்


இன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்...

கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களுக்கு ஆசிரியர் என்று நம்பப்படுபவர்...

இயேசுவே அறியாத பல புதிய கொள்கைகளை அவரின் பெயராலேயே போதித்தவர்...

இவர் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமோ அதன் கொள்கைகளோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மதத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்...

இயேசு, சத்தியத்தை உரத்து போதித்தார் என்பதன் காரணமாக யூதர்களின் கொலை வெறிக்கு ஆளாகி (பைபிளின் படி) சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக - அந்த பாவத்தைப் போக்கும் வகையில், இயேசு நமக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்டார் என்று சொல்லி, அந்த கொலை சம்பவத்தை தியாகத்தின் சின்னமாக மாற்றி பிரச்சாரம் செய்தவர் ...

முன்னர் உள்ள தீர்க்கதரிசிகளும் இயேசுவும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டையோ அல்லது அதன் கட்டளைகளையோ நாம் பின்பற்றத் தேவையில்லை, அது பலவீனமடைந்துவிட்டது, அது பயனற்று போய்விட்டது என்று போதித்தவர் ... அவற்றில் தடுக்கப்படவைகளை அனுமதித்தவர்... அவற்றில் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதை செய்யலாம் என்று போதித்தவர்...

இவர் எதை போதித்தாரோ அதுதான் இன்றைய கிறிஸ்தவமதத்தின் ஆணிவேர், அது தான் இன்றைய கிறிஸ்தவ மதத்தின்தலையாய கொள்கை, இவர் சொன்ன கொள்கைகளை நம்பாதவன் கிறிஸ்தவனே அல்ல, அவன் இரட்சிப்பை பெற முடியாது - அவன் நித்திய ஜீவனை அடைய முடியாது என்று சொல்லப்படும் அளவுக்கு கிறிஸ்தவ மதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் அவர் யார்? என்றால்,

அவர் தான் கிறிதவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படும் புனிதப் பவுல் !

இப்படி சொன்னது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் அது தான் மறுக்கமுடியாத சத்தியமான உன்மை!

இவரைப்பற்றி வரலாற்று ஆசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் தனது 'THE 100' என்ற புத்தகத்தில் சொல்லும்போது,

'புதிய கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் முன்னனியில் இருந்தவர். பிற கிறிஸ்தவ எழுத்தாளரையும் சிநிதனையாளரையும் விட இவரே கிறிஸ்துவ இறையியலில் நிலையான, மிகப் பரந்த விளைவுகளை ஏற்படுத்தியவராவார்' என்கிறார். மற்றோர் இடத்தில்,

'கிறிஸ்துவத்தின் முக்கியமான அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு இயேசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால் மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்' என்கிறார்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பவுலைப் பற்றிக் கூறும் போது :

எழுத்தாளர்களின் ஒரு அங்கம், உதாரணத்திற்கு W. Wrede அவர்களைப் போன்றவர்கள் பவுலை கடுமையாக எதிர்க்கின்றார்கள். கிறிஸ்தவ மதத்தின் இரண்டாவது நிறுவனர் என்று ஆகும் அளவுக்கு பவுல் அதை மாற்றி விட்டார் என அவர்கள் கருதுகின்றனர். உண்மையைச் சொல்லப் போனால், அவர் தான் சர்ச்சினுடைய கிறிஸ்தவ மதத்தின் நிறுவனரே ஆவார். அந்த சர்ச்சினுடைய கிறிஸ்தவமோ இயேசு போதித்த கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணானதாகும். நீங்கள் இயேசுவைப் பின்பற்றலாம் அல்லது பவுலைப் பின்பற்றலாம். ஆனால் இருவரையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முடியாது என அவர்கள் கூறுகின்றார்கள்.

தலைசிறந்த கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் மாக்கினோன் பகிரங்கமாக உன்மைகளை ஒப்புக்கொள்கின்றார் :

'அவர் போதித்த கருத்தோட்டஙகள் அவரிலிருந்து உதித்தது தான் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவருக்கு இயேசு நேரடியாகப் போதித்தார் என்று அவர் கூறினாலும் அவர் போதித்தது இயேசுவின் போதனைகளுக்கு ஒத்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. அதே நேரத்தில், நியாயப் பிரமாணம் பற்றி இயேசுவின் கொள்கை பவுலின் கொள்கையோடு ஒத்துப் போகவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது, தான் இயேசுவிடமிருந்து நேரடியாக செய்திகளைப் பெற்றேன் என்று பவுல் கூறுவது பிரச்சினைக்குரிய ஒன்றாகத் தான் இருக்கின்றது' என்று கூறுகின்றார்.

இன்றைய கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பைபிளின் புதிய ஏற்பாட்டின் மொத்தமுள்ள 27 புத்தகங்களில் 14 புத்கங்களுக்கு சொந்தக்காரர் இந்த பவுல் என்று சொல்லப்படுகின்றது. இவர் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளவர்களுக்கு கடிதங்களாக எழுதப்பட்டது என்றாலும், அவற்றையே தற்போது வேதம் என்றப்பெரில் பைபிளில் இனைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாடு முழுவதும் இயேசுவுக்கோ அல்லது இயேசுவின் சீடர்களுக்கோ சொந்தமானதல்ல. (இது குறித்து மேலும் விரிவான கட்டுரை விரைவில் இன்ஷா அல்லாஹ்) மாறாக இவரும் இவரைச்சார்ந்தவர்களும் எழுதியதே. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், இவரும் இவரைச் சார்ந்தவர்களும் ஏற்படுத்தியதே புதிய ஏற்பாடும், அதைச் சார்ந்துள்ளதாக சொல்லப்படும் இன்றைய கிறிஸ்தவ மதமும்.

பவுலின் நன்பரான லூக்காவால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் - அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் பற்றி கூறும் - Acts of Appostle - என்ற புத்தகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் பவுலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. Acts of Appostle என்ற ஆகாமம் இயேசுவின் சீடர்களின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறப்படும் புத்தகம் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் 28 அதிகாரங்கள் உள்ள புத்தகத்தில் 9 முதல் 28 வரையிலான அதிகாரங்கள் - கிட்டத்தட்ட 19 அதிகாரங்கள் - பவுலின் செயல்பாடுகள் பற்றித்தான் பேசுகின்றது. இந்த புத்தகத்தை அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் என்று குறிப்பிடுவதை விட பவுலின் செயல்பாடுகள் என்று குறிப்பிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லலாம், என்கிற அளவுக்கு அந்த புத்தகத்தில் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பவுலும் பவுலைச் சார்ந்தவர்களும் எதை எல்லாம் எழுதிவைத்தார்களோ அவை அனைத்துமே வேதவாக்கியம் என்ற சாயத்தை பூசி அவை அனைத்தும் கடவுளால் அருளப்பட்டது என்று சான்றிதழ் கொடுத்தவரும் இவரே. அதனால் தான் புதிய ஏற்பாட்டாளர்கள் எதை எழுதிவைத்தாலும் எப்படி எழுதி வைத்திருந்தாலும், அது எந்த அளவுக்கு முரண்பாடாகவும் குழப்பமானதாகவும் அறிவுக்கு பொருந்தாததாக இருந்தாலும், ஏன் இயேசுவின் வார்த்தைகளுக்கும் அவரது போதனைகளுக்குமே நேர் முரணாக இருந்தாலும் அவை அனைத்தையும் இன்றைய கிறிஸ்தவர்கள் அப்படியே கண்மூடி பின்பற்றுவதற்கு காரணம், பவுல் 2 திமோத்தேயு 3:16ன் மூலம் 'அவை அனைத்து வேதவாக்கியங்கள்' என்று கொடுத்த சான்றிதழே.

பவுலும் அவர் சொன்ன கொள்கைகளும் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்கிற அளவுக்கு அம் மதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் பவுல் என்பவர் யார்? அவர் இயேசுவின் சீடரா? அல்லது இயேசுவின் உறவினரா? அல்லது இயேசு வாழ்ந்த காலத்தில் ஏதாவது ஒரு வகையில் அவருக்கு உதவி செய்தவரா? உன்மையில் அவர் யார்?
தொடரும்...

10 comments:

Robin said...

//அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! // முகமது நபியை பற்றி கூறுகிறீர்களா அல்லது முகமதுவே தம்மை பற்றி கூறுகிறாரா?

Robin said...

என்னுடைய பின்னூட்டங்களை வெளியிடும் அளவுக்கு துணிச்சல் உங்களுக்கு கிடையாது என்று எனக்கு தெயரியும். இருந்தாலும் மாற்று கருத்துகளையும் நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகத்தான் பின்னூட்டமிட்டேன். நீங்கள் எப்படி முகமது நபியும் அவரது சீடர்களும் கூறியதை நம்புகிறீர்களோ அப்படியே நாங்களும் இயேசு கிறிஸ்துவும் அவரது சீடர்களும் கூறியதை நம்புகிறோம். பவுல் என்பவர் இயேசுவின் நேரடி சீடர் அல்ல என்றாலும் பின்னர் ஏசுவால் சந்திக்கப்பட்டு மனம்திரும்பியவர். மட்டுமல்ல இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிராக இவர் எதுவும் கூறவில்லை. பவுல் சொன்னதெல்லாம் தவறு என்றால் ஏன் முகமது சொன்னதெல்லாம் தவறாக, வெறும் கற்பனையாக இருக்கக்கூடாது? இப்படியெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு ஒரு முஸ்லிமுக்கு துணிச்சல் கிடையாது. ஏனென்றால் முகமதுவின் மேல் அந்த அளவுக்கு பற்று உங்களுக்கு உண்டு. அதை போல ஏசுவின் மேலும் அவர் சீடர்களின் மேலும் எங்களுக்கும் பற்று உண்டு. உங்களுக்கு உங்கள் நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ அதை போல எங்களுக்கு எங்கள் நம்பிக்கை முக்கியம். உங்களுக்கு முகமதுவை இறை தூதர் என்று நம்ப எத்தனை காரணங்கள் உண்டோ அதே அளவு, ஏன் அதைவிட அதிக காரணங்கள் இயேசுவை இறை மைந்தன் என்று நம்ப எங்களுக்கும் உண்டு. புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். May God bless you.

அபூ அப்திர்ரஹ்மான் said...

Robin, பின்னூட்டமிட்டு சில மணித்துளிகளுக்குள் ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்? அதனைப் பதிவு செய்ய அவகாசம் தராமல் அடுத்தடுத்து துணிச்சல் இல்லை என்றெல்லாம் பின்னூட்டமிடுகிறீர்கள். எதுவும் கூறாமல் கிறிஸ்தவ தளத்துக்கு தரும் தொடுப்பை ஒரு மறுமொழியாக எடுத்துக் கொள்ளமாட்டோம். அதை வெளியிடவும் மாட்டோம். தலைப்புடன் தொடர்பில்லாததும் வெளியிடப்பட மாட்டாது. அல்லாதவை வெளியிடப்படும். இதற்கு முன் உள்ள பதிவுகளைப் பாருங்கள். கிறிஸ்தவர்களின் மறுமொழிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

//என்னுடைய பின்னூட்டங்களை வெளியிடும் அளவுக்கு துணிச்சல் உங்களுக்கு கிடையாது என்று எனக்கு தெயரியும்.//

இப்படிக் கூறி உங்களை சமாதானப் படுத்திக் கொள்ளுங்கள். எங்களைப் பொறுத்தவரை உங்கள் மறுமொழி காற்றில் கலந்து வரும் தூசைப் போன்றுதான்!

//நீங்கள் எப்படி முகமது நபியும் அவரது சீடர்களும் கூறியதை நம்புகிறீர்களோ அப்படியே நாங்களும் இயேசு கிறிஸ்துவும் அவரது சீடர்களும் கூறியதை நம்புகிறோம்.//

நீங்கள் நம்புவது உங்கள் விருப்பம். எங்கள் நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உங்களை நிர்பந்திக்கவில்லையே?

//பவுல் என்பவர் இயேசுவின் நேரடி சீடர் அல்ல என்றாலும் பின்னர் ஏசுவால் சந்திக்கப்பட்டு மனம்திரும்பியவர். மட்டுமல்ல இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிராக இவர் எதுவும் கூறவில்லை. பவுல் சொன்னதெல்லாம் தவறு என்றால் ஏன் முகமது சொன்னதெல்லாம் தவறாக, வெறும் கற்பனையாக இருக்கக்கூடாது?//

பவுல் பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களுக்கு வரிக்கு வரி மறுப்பெழுதுங்கள். அதை விடுத்து சம்மந்தம் இல்லாததைக் கூறி சவடால் அடிக்காதீர்!

//இப்படியெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு ஒரு முஸ்லிமுக்கு துணிச்சல் கிடையாது.//

நீங்கள் கூறும் கற்பனைகளை நாங்கள் ஏன் சிந்திக்க வேண்டும். நாங்கள் ஆதாரத்தை வெளியிடுகிறோம். உங்களிடம் ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள்.

//ஏனென்றால் முகமதுவின் மேல் அந்த அளவுக்கு பற்று உங்களுக்கு உண்டு. அதை போல ஏசுவின் மேலும் அவர் சீடர்களின் மேலும் எங்களுக்கும் பற்று உண்டு. உங்களுக்கு உங்கள் நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ அதை போல எங்களுக்கு எங்கள் நம்பிக்கை முக்கியம்.//

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? கிறிஸ்தவத்தை விமர்சிக்கக் கூடாது என்று தானே? அப்படியாயின் கிறிஸ்தவர்கள் அளவுக்கு நாங்கள் விமர்சிப்பதில் தரம் தாழ்ந்து செல்லவில்லை. இந்த உபதேசத்தை உங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கூறிக் கொள்ளுங்கள்

//உங்களுக்கு முகமதுவை இறை தூதர் என்று நம்ப எத்தனை காரணங்கள் உண்டோ அதே அளவு, ஏன் அதைவிட அதிக காரணங்கள் இயேசுவை இறை மைந்தன் என்று நம்ப எங்களுக்கும் உண்டு.//

அப்படியானால் அந்த காரணங்களை வைத்து முகமதுவை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்களே?

////அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! // முகமது நபியை பற்றி கூறுகிறீர்களா அல்லது முகமதுவே தம்மை பற்றி கூறுகிறாரா?//

ஹிஹி. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பார்கள். என்ன வசனத்தின் விளக்கம் சரியாகப் புரியவில்லையா? பைபிளைத் திறந்து பாருங்கள் சரியாகப் புரியும். ஒரே ஒரு உதாரணம். இறைவேதம் என்றால் முரண்பாடுகள் இருக்கக் கூடாது. முரண்பாடுகளின் மொத்தக் குத்தகையையும் பைபிள் எடுத்துள்ளது. பைபிளைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

Robin said...

நீங்கள் என்னுடைய பின்னூட்டங்களை வெளியிட்டதற்கு கடைசியாக நான் அனுப்பிய பின்னூட்டம் தூண்டிய ரோஷம் தான் காரணம் என்று நினைக்கிறேன். நான் குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் கூறுவதும் அனைத்தும் பொய் என்று ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களை போல் copy/paste செய்யும் வழக்கம் எனக்கில்லை என்பதால் அந்த தொடுப்பை கொடுத்தேன்.
//எங்கள் நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உங்களை நிர்பந்திக்கவில்லையே?// எங்கள் நம்பிக்கையை கிண்டல் செய்வது நியாயமா?
//நீங்கள் கூறும் கற்பனைகளை நாங்கள் ஏன் சிந்திக்க வேண்டும். நாங்கள் ஆதாரத்தை வெளியிடுகிறோம்.// அப்படி என்ன ஆதாரத்தை வெளியிட்டு விட்டீர்கள்?
குர்-ஆனில் உள்ள முரண்பாடுகளை புட்டு புட்டு வைத்துள்ளார்களே அதெல்லாம் படித்ததில்லையா?
கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறியவேண்டாம் நண்பரே. குர்-ஆனில் உள்ள பல பகுதிகள் பைபிள்-இல் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்பதை மறக்கவேண்டாம். கிறிஸ்தவத்தின் மீது நீங்கள் எறியும் ஒவ்வொரு கல்லும் உங்களை நோக்கியே திரும்பும் என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் எழுப்பும்/எழுப்பபோகிற ஒவ்வொரு கேள்விக்கும் ஏற்கனவே பதிலளிக்க பட்டுவிட்டன என்பதை மறக்கவேண்டாம். இணைய தளத்தில் தேடி பாருங்கள். உங்களுக்கு தான் தொடுப்புகள் கொடுத்தால் பிடிக்காதே.

Robin said...

//ஹிஹி. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பார்கள். என்ன வசனத்தின் விளக்கம் சரியாகப் புரியவில்லையா? // நன்றாக புரிகிறது. ஆனால் விளக்கம் தந்தால் உங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு என் தலையை கொண்டு வா என்று பத்வா போட்டு விடக் கூடாதே என்று தான் பயம் :)

Robin said...

பொதுவாக நீங்களெல்லாம் முகமதுவை விமர்சித்தால் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறீர்கள். ஆனால் பவுல் போன்றவர்களை மட்டும் உங்கள் இஷ்டத்துக்கு விமர்சிக்கிறீர்கள். உங்களுக்கு இருப்பது போன்ற உணர்ச்சிகள் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மறக்கவேண்டாம். உங்களால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக விவாதிக்க முடியுமென்றால் நாளை விவாதிக்க நான் ரெடி. நீங்கள் ரெடியா?

அபூ அப்திர்ரஹ்மான் said...

Robin, நீங்கள் கொடுத்த தொடுப்புக்குச் சென்று பார்த்து விட்டேன். ஏகத்துவம் தளத்திற்கு பதில் என்று சம்மந்தம் இல்லாததையெல்லாம் எழுதி வைத்துள்ளார் கட்டுரையாளர். பவுலும் கிறிஸ்தவமும் என்ற கட்டுரையில் இயேசுவுக்கும் பவுலுக்கும் மலைக்கும் மடுவுக்கும் வேறுபாடு உள்ளதை அடுக்கடுக்கான சான்றுகளுடன் பதிவு செய்துள்ளார் சகோதரர் அபூஇப்ராகீம். அதில் ஒரு வரிக்குக் கூட கிறிஸ்தவக் கட்டுரையாளர் மறுப்பு சொல்லாமல் இயேசுவுக்கும் பவுலுக்கும் உளள்ள 100 ஒற்றுமைகள் என்று பைபிளிலிருந்து தேடிப் பொறுக்கி சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் பலவும் இயேசுவின் பெயரால் அவர் இட்டுக்கட்டியவையே! இவ்வாறு நீங்கள் ஒற்றுமை என்று 100 விஷயங்களைக் காட்டினால் வேற்றுமை என்று அதற்கும் மேற்பட்ட விஷயங்களை நம்மாலும் குறிப்பிட இயலும். தன்னால் பதில் சொல்ல முடியாத விஷயங்களுக்கு மறுப்பு என்ற பெயரில் சம்மந்தம் இல்லாததைக் கூறுவதுதானே கிறிஸ்தவர்களின் வாடிக்கை. ஏகத்துவம் கட்டுரையில் வந்த விஷயங்களுக்கு வரிக்கு வரி மறுப்பெழுதுங்களேன்? சவால் விடுகிறேன். உங்களால் முடியவே முடியாது.

உதாரணமாக ஆண்டவன் பவுலுக்கு தரிசனமானதாகக் கூறப்படும் செய்திகளில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட செய்திகளே அவற்றின் உறுதித் தன்மையை சந்தேகிக்கின்றனவே?
பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் பொய் மலிந்துக் கிடப்பதால் தான் இதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துக்கொண்டிருக்கின்றது. என்று அவர் எடுத்து வைத்த ஆதாரங்களுக்கு வரிக்கு வரி மறுப்பெழுதுங்கள். நியாயப் பிரமாணத்தைச் செயல்படுத்துவது குறித்து பைபிளின் பழய ஏற்பாடு கூறியதற்கொப்ப இயேசுவும் கூறியதற்கு முற்றிலும் முரண்பட்டு பவுல் கூறியதுடன் நியாயப் பிரமாணத்தில் செயல்படுத்தாவிட்டால் பெரிய பாவங்கள் என்று பைபிள் குறிப்பிட்ட பல விஷயங்களையும் பவுல் மறுத்துக் கூறியதையும் குறிப்பிட்டிருந்தாரே? அதற்கும் வரிக்கு வரி மறுப்பெழுதுங்கள். அதை விடுத்து கட்டுரையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஏறெடுத்தும் பார்க்காமல் சம்மந்தமில்லாத விஷயங்களையெல்லாம் தேடிக்கண்டுபிடித்து பதித்து வைத்து விட்டு இதோ மறுப்பெழுதிவிட்டோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். கட்டுரையில் கூறப்பட்ட விஷயங்களைக் குறித்த உங்களின் மவுனம் அதில் கூறப்பட்ட வாதங்கள் அனைத்தும் உண்மை என்பதற்கு ஆதாரம் ஆகும். இன்ஷா அல்லாஹ் மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்கள்.

//நீங்கள் என்னுடைய பின்னூட்டங்களை வெளியிட்டதற்கு கடைசியாக நான் அனுப்பிய பின்னூட்டம் தூண்டிய ரோஷம் தான் காரணம் என்று நினைக்கிறேன்.//

நீங்கள் என்னவேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. உங்களைப் போன்ற பிற கிறிஸ்தவர்கள் அனுப்பிய பின்னூட்டங்கள் பதியப்பட்டு மறுப்பும் சொல்லப்பட்டிருப்பதை முந்தைய பதிவுகளுக்குச் சென்று பார்வையிடுங்கள்.

//உங்களை போல் copy/paste செய்யும் வழக்கம் எனக்கில்லை என்பதால் அந்த தொடுப்பை கொடுத்தேன்.//

எம் சகோதரர் தளத்தில் பதிந்ததை மறுபதிவு செய்வது எங்கள் விருப்பம். அதைக் கேட்பதற்கு நீங்கள் யார்? உங்கள் தொடுப்புகளையே நாங்கள் வெளியிடமாட்டோம் என்ற பின் காப்பி பேஸ்ட்?

// //எங்கள் நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உங்களை நிர்பந்திக்கவில்லையே?// எங்கள் நம்பிக்கையை கிண்டல் செய்வது நியாயமா?//

யார் கிண்டல் செய்தார்கள்? கிறிஸ்தவம் மோட்சத்தின் வழி என்று நீங்கள் பிரச்சாரம் செய்தால் அந்த நம்பிக்கையைக் குறித்து கேள்வி எழுப்பும் உரிமை எங்களுக்கு உண்டு. அது சரி! கோடிக்கணக்கான மக்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபியைக் குறித்து மிக மோசமான உங்களைச் சேர்ந்தவர் விமர்சிப்பதைக் குறித்து? முதலில் உங்கள் உபதேசத்தை உங்கள் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள்.

//நீங்கள் கூறும் கற்பனைகளை நாங்கள் ஏன் சிந்திக்க வேண்டும். நாங்கள் ஆதாரத்தை வெளியிடுகிறோம்.// அப்படி என்ன ஆதாரத்தை வெளியிட்டு விட்டீர்கள்?

இஸ்லாமியத் தளங்களுக்குச் சென்று பாருங்கள். ஆதாரம் உங்களுக்குக் கிடைக்கும். உதாரணமாக
நபிகள் நாயகத்தின் தூதுத்துவத்தைப் பற்றிய கட்டுரைகள்:
http://irudithoodu.blogspot.com/2008/06/blog-post_1852.html
http://irudithoodu.blogspot.com/2008/07/blog-post.html
http://irudithoodu.blogspot.com/2008/07/blog-post_12.html
http://irudithoodu.blogspot.com/2008/07/blog-post_18.html
http://irudithoodu.blogspot.com/2008/10/blog-post.html

கிறிஸ்தவ விமர்சனங்களின் முதுகெலும்பை முறிக்கும் இஸ்லாமிய பதில்கள்:
http://sites.google.com/site/viewchristianity/rebuttels
http://irudithoodu.blogspot.com/2008/07/blog-post_23.html
http://irudithoodu.blogspot.com/2008/07/blog-post_28.html
http://irudithoodu.blogspot.com/2008/07/3.html
http://irudithoodu.blogspot.com/2008/08/4.html
http://irudithoodu.blogspot.com/2008/07/blog-post_21.html

//குர்-ஆனில் உள்ள முரண்பாடுகளை புட்டு புட்டு வைத்துள்ளார்களே அதெல்லாம் படித்ததில்லையா?//

என்ன முரண்பாடுகளை புட்டு வைத்தீர்கள்? கொஞ்சம் பட்டியலிடுங்களேன்? அப்படியெனில் முரண்பாடுகளற்ற பரிசுத்த(?) வேதத்தைத் தான் நீங்கள் வைத்துள்ளீர்களா? பைபிள் பற்றிக் கூறப்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு பதில் சொல்லி விட்டீர்களா?

//கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறியவேண்டாம் நண்பரே. குர்-ஆனில் உள்ள பல பகுதிகள் பைபிள்-இல் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்பதை மறக்கவேண்டாம்.//

நல்ல ஜோக். உங்களுக்கே திருப்பிக் கொள்ள வேண்டிய தத்துவம். பைபிளிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று பாமரர்களைத் தான் உங்களால் ஏமாற்ற முடியும். தக்க சான்றுகளுடன் வைக்கப்பட்ட இந்த மறுப்புக்கு பதில் சொல்லுங்கள். http://www.islamkalvi.com/portal/?p=622

//கிறிஸ்தவத்தின் மீது நீங்கள் எறியும் ஒவ்வொரு கல்லும் உங்களை நோக்கியே திரும்பும் என்பதை மறக்க வேண்டாம்.//

இஸ்லாமை நோக்கி நீங்கள் எறிந்த கற்கள் பாராங்கற்களாகத் திரும்பி உங்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தானே இப்படி ஓலமிடுகிறீர்கள்?

//நீங்கள் எழுப்பும்/எழுப்பபோகிற ஒவ்வொரு கேள்விக்கும் ஏற்கனவே பதிலளிக்க பட்டுவிட்டன என்பதை மறக்கவேண்டாம்.//

ஏதோ சிலவற்றிற்கு நீங்கள் ப(தி)ல் இளித்துள்ளீர்கள்? அதிலும் பல ஆங்கில தளத்திலிருந்து காப்பி எடுத்து ஒப்பியது. பதிலளிக்காதவற்றைப் பட்டியலிடவா?

இணைய தளத்தில் தேடி பாருங்கள். உங்களுக்கு தான் தொடுப்புகள் கொடுத்தால் பிடிக்காதே.

தேடவேண்டிய அளவுக்கு ஒன்றும் இல்லை. இஸ்லாமிய பெயரைத்தாங்கிய கிறிஸ்தவர் ஒருவரை நீங்கள் நம்பி உள்ளீர்கள். அவர் பதிப்பதை காப்பி எடுத்து அப்படியே பல தளங்களில் பதித்து வைக்கிறீர்கள். இதில் தேடிக் கண்டுபிடிக்க என்ன இருக்கிறது?

//பொதுவாக நீங்களெல்லாம் முகமதுவை விமர்சித்தால் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறீர்கள். ஆனால் பவுல் போன்றவர்களை மட்டும் உங்கள் இஷ்டத்துக்கு விமர்சிக்கிறீர்கள். //உங்களுக்கு இருப்பது போன்ற உணர்ச்சிகள் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மறக்கவேண்டாம்.//

உணர்ச்சி வசப்படுவது என்னபதற்கு என்ன இலக்கணம் கூறுகிறீர்கள்? கிறிஸ்தவத்துக்கு மறுப்பு எழுதுவது உணர்ச்சி வசப்படுதல் என்றால் கிறிஸ்தவர்கள் எழுதுவதை என்னவென்று கூறலாம்? கிறிஸ்தவர்கள் செய்யும் கீழ்த்தரமான விமர்சனங்களை என்னவென்று கூறுவது? உணர்ச்சி வசப்பட்டதால் தானே நீங்கள் இவ்வாறெல்லாம் பின்னூட்டமிடுகிறீர்கள்?

முஹம்மது (ஸல்) அவர்களை விமர்சிப்பதை பவுலை விமர்சிப்பதற்கு நீங்கள் ஒப்பிடக் கூடாது. நாங்கள் இயேசுவை விமர்சிக்கவில்லை. அவ்வாறு விமர்சிக்கவும் மாட்டோம். பவுலைக் குறித்து நாங்கள் அல்ல. ஆரம்பகால இயேசுவின் சீடர்களே கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இயேசுவின் உபதேசங்களுக்கும், பவுலின் இட்டுக் கட்டுதல்களுக்கும் பாரிய வேறுபாடு உள்ளமை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் உணர்ச்சி வசப்படாமல் அதற்கு மறுப்பெழுதுங்கள். சம்மந்தமில்லாதவற்றைக் கூறி விஷயத்திலிருந்து நழுவிச் செல்லாதீர்கள்.

//உங்களால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக விவாதிக்க முடியுமென்றால் நாளை விவாதிக்க நான் ரெடி. நீங்கள் ரெடியா?//

நாங்கள் ரெடி! உணர்ச்சி வசப்படுதல் என்ற சாக்கு போக்கைக் கூறி விவாதிக்க வருவதிலிருந்து ஓட்டம் பிடிக்காதீர்கள். இஸ்லாம் கிறிஸ்தவ விவாதங்கள் எத்தனையோ நடந்துள்ளன. நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் உங்கள் தரப்பிலிருந்து விவாதிக்க விரும்புபவர்கள் யார்? என்ன தலைப்பு? எங்கு? எப்போது? என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்யுங்கள். எங்கள் தரப்பிலிருந்து யார் வருவார் என்பதை அறிவிக்கின்றோம். என்ன தயாரா? விவாதத்தை எப்படி வைத்துக் கொள்ளலாம்? எங்கு? என்ன தேதி? உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

John said...

சவுலை பற்றி சரியாக சொல்லி இருக்கிறிர்கள். இது போலத்தான் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவருக்கு நாற்பது வயது இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று நாந்தான் கடவுள் அனுப்பிய தூதர் என்றார். கடவுளின் செயலாளர் என்னிடம் வந்து இதை சொன்னார் என்றார். பிறகு கடவுள் என் மூலமாக ஒரு வேதத்தை உலகிற்கு சொல்லப்போகிறார் என்றார். இதற்கு முன்பும் கடவுள் தன்னுடைய தூதர்களை உலகிற்கு அனுப்பி இருக்கிறார், அவர்களுக்கு வேதங்களும் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த வேதங்களும், இறைதூதர்களும் அந்த கடவுளால் பாதுகாக்கபட முடியாமல் போய்விட்டதால் என் மூலமாக கடவுள் புது வேதம் தருகிறார். அதை அவரே பாதுகாப்பதாக சொன்னார் என்றும் அந்த வியாபாரியாக இருந்த திடீர் இறைத்தூதர் சொல்லிக்கொண்டார். என்னைப்பற்றி அங்கே அப்படி சொல்லி இருக்கிறது, இங்கே இப்படி சொல்லி இருக்கிறது என்றும் கூறினார். தினமும் என்மீது கடவுள் வந்து இறை வேதம் சொல்லிவிட்டு போகிறார் என்று சொன்னார். இதை எல்லாம் அவரே சொல்லிக்கொண்டார். பாவம் படிப்பறிவு இல்லாத அரபு மக்கள். அவர் சொன்னதை எல்லாம் நம்பிவிட்டார்கள். எல்லாரும் நான்கு மனைவிதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஆனால் நான் மட்டும் குழந்தை அல்லது மாமி என்ற கணக்கில்லாமல் எத்தினைபேரை வேண்டுமென்றாலும் திருமணம் செய்வேன், அப்படி செய்ய எனக்கு இறைவன் சிறப்பு அனுமதி தந்திருக்கிறார் என்றார். நன் சொல்வது மட்டும் தான் உண்மை, இதற்கு முன்பு, இறைவன் பிற இறைதூதர்கள் மூலம் சொன்னது எல்லாம் தப்பு என்றார். எப்படியோ அடித்து பிடித்து அந்த நாட்டுக்கு மன்னராகவும் ஆகிவிட்டார். பிறகு, பிற நாட்டு மன்னர்களுக்கு கடிதம் அனுப்பினார் எப்படி தெரியுமா "நாந்தான் இறைத்தூதர் நான் சொல்றது தான் இறைவேதம். இத நம்பினால் உனக்கு விமோசனம் இல்லேன்னா கஷ்டம் தான்" இந்த மாதிரி. இப்படியே அவரோட மதத்துக்கு ரொம்ப ஆட்களை சேர்த்துக்கிட்டார். இதுல முக்கியமான விசயம் என்னனா, கடவுளை பத்தி தப்பா பேசினாக்கூட அவரோட ஆட்கள் பொருத்துப்பாங்க, ஆனா திடீர் இறைதூதர் ஆன அந்த வியாபாரிய எதாவது ஒரு வார்த்தை தப்பாக பேசிவிட்டால் பேசியவர் பரம்பரையயையே கொலை செய்து விடுவார்கள். இது இந்த காலத்திலும் நடக்கிறது. இன்னிக்கு உலகத்துல நிறைய நாடுகளில் அவரோட தொண்டர்கள் இருக்காங்க. அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்கதான் உண்மை கடவுளை கும்பிடுறாங்க மத்தவங்க எல்லாம் சாத்தான கும்பிடுறாங்க. பிற கடவுள கும்பிடுரவங்க எல்லாம் கேவலமான காபிர்கள். இதெல்லாம் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது. இப்படியாக பல கோடி மக்கள் இன்னும் அவர நம்பிட்டுதான் இருக்காங்க. அவங்க வணங்குற கடவுள் பத்தியும் அவர்தான் சொன்னார், அந்த கடவுள் வேதம் தந்ததாவும் அவர்தான் சொன்னார், அவர்தான் இறைதூதர்நும் அவர்தான் சொன்னார், ஆகா மொத்தத்தில் அவங்க மதத்தில் எல்லாமே அவர் சொன்னது தான்.ரொம்ப வேடிக்கை என்னன்னா இதுக்கு முன்னாடியும் இதே கடவுள் வேற இறைதூதர்களுக்கு வேதம் கொடுத்தாராம். அதுல மனுஷ கரங்கள் விளையாடி விட்டதாம் வேதம் குடுத்த கடவுளால அத காப்பாத்த முடியலையாம் அதுனால இந்த வியாபாரி (திடீர் இறைத்தூதர்) மூலமா புது வேதம் குடுத்தாராம். இதும் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது. இவரையும் இன்னும் நம்பிட்டுதான் இருக்காங்க உலகத்துல நிறைய பேர். என்ன பண்றது உலகத்துல இந்த மாதிரி நிறய நடந்துகிட்டுதான் இருக்கு.

Robin said...

உங்கள் பதிலுக்கு நன்றி. விவாதத்தை இந்த தளத்திலேயே வைத்து கொள்ளலாம். அடுத்த வாரம் புதன் கிழமையிலிருந்து( 26/11/08) ஆரம்பிக்கலாம். இதை கேள்வி பதில் போல வைத்து கொள்வோம். கேள்வி நீங்களும் கேட்கலாம் நானும் கேட்கலாம். உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் நீங்கள் பதிலளியுங்கள் அல்லது கேள்வி கேளுங்கள் நானும் அவ்வாறே செய்வேன்.

அபூ அப்திர்ரஹ்மான் said...

அன்பர் ஜாண் அவர்களுக்கு,

பவுல் பற்றி பதியப்பட்ட செய்திகள் அனைத்தும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவை. இதனை மறுக்க இயலாத நீங்கள் அவர் பற்றிக் கூறியது அனைத்தும் சரியானவயே என்று ஒப்புக் கொண்டுள்ளீர்கள். அத்துடன் உங்களின் இயலாமை கோபமாக வெளிப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது விமர்சனத்தை வைத்துள்ளீர்கள். பொதுவாக தங்களால் பதிலளிக்க இயலாத விஷயங்களுக்கு இப்படி எதிர்மறைக் கேள்விகளை எழுப்புவது கிறிஸ்தவர்களின் வழக்கம். சிறுபிள்ளைத் தனமான இச்செயல் கிறிஸ்தவத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் சரியானவை தான் என்று மேன்மேலும் உறுதிப்படுத்துகிறது. இனி உங்களின் விமர்சனத்துக்கு வருவோம்.

முஹம்மது (ஸல்) அவர்கள் பவுலைப் போன்று திடீரென்று ஒரு சுப்ரபாதத்தில் இதோ இறைவன் என் முன் தோன்றினான் என்று கூறவில்லை. நாற்பது ஆண்டுகள் தன் சமூகத்துக்கு மத்தியில் சாதாரண ஒரு மனிதனாக நடமாடுகிறார்கள். ஆனாலும் தன்னிகரற்ற உயர்ந்த ஒழுக்கத்துடன் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்று வாழ்கிறார்கள். நீங்கள் கூறியது போல் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களள் வியாபாரத்தில் காட்டிய அசாத்திய நேர்மையைக் கண்டு வியந்து அவர்களின எஜமானியாக இருந்த உயர் குலத்தைச் சேர்ந்த கதீஜா அம்மையாரே அவர்களைத் திருமணம் முடிக்க தன் இசைவைத் தெரிவிக்கிறார்கள். தன் சமூகமக்களிடம் காணப்பட்ட தீச்செயல்களைக் கண்டு மனம் வெறுத்து தனிமையை நாடிச் செல்கிறார்கள். ஹிரா குகையைச் சென்றடைந்து அங்கு இறைவனை வணங்கி காலத்தைக் கழிக்கிறார்கள். இவ்வாறு மூன்று வருடம். அப்போது தான் வானவர் அவர் முன் தோன்றி இறைசெய்தியை அறிவிக்கின்றார்கள். அப்போது கூட அவர்களுக்கு தெரியாது இறைவனின் தூதர்தான் தன்னிடம் வந்தவர் என்று. அதனால்தான் பயந்து வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் தனக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக பயப்படுகிறேன் என்று கூறினார்கள். மனைவியோ, உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். தாங்கள் உறவுகளுடன் இணங்கி வாழ்கின்றீர்கள், சிரமப்படுவோரின் சுமைகளைச் சுமந்து கொள்கின்றீர்கள், வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினரை உபசரிக்கிறீர்கள், உண்மையான சோதனையில் அகப்பட்டவர்களுக்கு உதவுகின்றீர்கள் என்று கூறித் தேற்றுகிறார்கள். அதற்குப் பின்னர்தான் அவர்களுக்குத் தெரியவருகிறது, தன்னிடத்தில் வந்தவர் வானவா ஜிப்ரீல் என்பதும் தான் இறைவனின் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதும்.

மேற்கண்ட செய்திகளில் எந்த முரண்பாடும் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர்தான் என்பதற்கு அவர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆனின் வசனங்களே சாட்சி! அவை நாற்பது வயது வரை அவர்கள் அறிந்திராத அற்புத செய்திகள். அதனால் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமைத் தழுவினர். அதனால் தான் அன்றைய பெரிய இலக்கிய வாதிகள் கூட 'இது மனிதனின் சொல்ல' என்று வியந்து தங்களையும் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டனர். அதனால் தான் 13 ஆண்டுகளில் அரேபியத் தீபகற்பமே இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டது. அதனால் தான் பத்ரு வெற்றி! மக்கா வெற்றி! என் அவர்களின் முன்னறிவிப்புகள் நடந்தேறியது. அதனால் தான் மிகக் குறுகிய காலகட்டத்தில் இஸ்லாம் உலகெங்கும் பரந்து வியாபித்தது. இப்போது சொல்லுங்கள் நீங்கள் கூறியது போல் படிப்பறிவு இல்லாத அரபு மக்கள்தான் அவர்களை ஏற்றுக் கொண்டார்களா? இல்லை சகோதரரே! நிச்சயமாக இல்லை. அன்று முதல் இன்று வரை மாமன்னர்கள் முதல் விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும், ஏன் பாமரர்களும் தங்கள் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அன்றைய அரபுகளின் ஏற்றம் மிக்க தலைவர் உமர், மதீனாவின் கோத்திரத் தலைவர் ஸஅது பின் முஆது, மாமன்னர் நஜ்ஜாஷி, என சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களையும் இந்த மார்க்கம் ஈர்த்தது.

இப்படி ஏராளமான செய்திகளைக் கூற முடியும். அவற்றையெல்லாம் கூறினால் அதற்கு இப்பக்கங்கள் போதாது.

இனி நீங்கள் கூறிய திருமணம் சம்மந்தப் பட்ட விஷயம். நபிகள் நாயகத்தை நீங்கள் நிராகரிப்பதால் இத்தகைய விமர்சனங்களை வைக்கின்றீர்கள. திருமணம் செய்யாமலிருப்பதே கடவுளுக்குப் பிடித்தமான செயல் என்று நடைமுறைக்கு ஒத்து வராத பைபிளின் தத்துவத்தின் அடிப்படையில் இஸ்லாமை நீங்கள் பார்ப்பதால் அனுமதிக்கப்பட்ட திருமணத்தைக் குறித்து நீங்கள் விமர்சிக்கின்றீர்கள. 1400 வருடங்களாக நபிகள் நாயகத்தை இறைதூதராக, இஸ்லாமைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்களின் திருமணம் குறித்துத் தெரியும். திரிபு வாதம் செய்து நீங்கள் குறிப்பிட்டது போல் அவர்கள் அதனை நம்பவில்லை. இறைதூதர்கள் அனைவரும் திருமணம் முடிப்பவர்களே! காரணம் அவர்களும் மனிதர்களே. இனி உங்களை நோக்கி ஒரு கேள்வி. பைபிளில் ஏராளமான தீர்க்கதரிசிகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்ததாகக் கூறப்பட்டுள்ளதே? இளம்பெண்கள், சிறுமியர் என்ற வித்தியாசம் இன்றி போரில் கைப்பற்றப்பட்ட பெண்களையும் போராளிகள் தங்களுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறதே? இந்த அடிப்படையை வைத்து பைபிளை நீங்கள் ஏன் விமர்சிக்கவில்லை? ஒர் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதை நிராகரித்த அன்றைய மக்கள்கூட அவர்களின் திருமணம் குறித்தோ அவர்கள் பெண்விரும்பி என்றோ விமர்சனங்களை வைக்கவில்லை. அதனால் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதை நிராகரிக்க இத்தகைய வாதங்கள் எடுபடாது. அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்தி, அதவது குர்ஆன், அதில் முரண்பாடு உள்ளதா? குழப்பம் உள்ளதா? இன்றைய காலத்துக்குப் பொருந்தாத சட்டம் உள்ளதா? அது இறைவேதம் இல்லை என்று கூற உங்களிடம் உள்ள நியாயங்கள் என்ன? அதைக் கூறுங்கள் அதற்கு நாம் பதிலளிப்போம். இதுவே நியாயமான விமர்சனமாக இருக்க முடியும். இதை விடுத்து இல்லை மீண்டும் நான் அதையே பிடித்து நிற்பேன் என்ற ரீதியில் உங்களது மறுமொழி இருக்குமானால் நிச்சயமாக அவை அலட்சியம் செய்யப்படும்.

//அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்கதான் உண்மை கடவுளை கும்பிடுறாங்க மத்தவங்க எல்லாம் சாத்தான கும்பிடுறாங்க. பிற கடவுள கும்பிடுரவங்க எல்லாம் கேவலமான காபிர்கள். இதெல்லாம் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது.//

சகோதரரே! யாரைத் திருப்திப்படுத்த இப்படிக் கூறினீர்கள்? பைபிளின் பழய ஏற்பாடு கூறும் ஒரே கடவுளை வணங்காமல் மற்றவர்களை எவரேனும் வணங்கினால் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று பைபிள் குறிப்பிடும் வரிகளை நீங்கள் கவனிக்கவில்லையா? இப்படிப்பட்ட விமர்சனத்தைக் கூறியதன் மூலம் உங்களின் முகத்திலேயே கரி வாரிப் பூசிக் கொண்டீர்களே?

அடுத்ததாக முந்தைய வேதங்களில் மனிதக் கரங்கள் விளையாடியதா என்பதற்கு விரிவான விளக்கங்கள் பதிவு செய்யப்படும். அதற்கு முன்னால் பினவரும் தொடுப்புகளை சற்று பார்வையிடுங்களேன்.

http://www.islamkalvi.com/religions/quran_bible_compare.htm
http://www.islamkalvi.com/portal/?p=1103
http://christianpaarvai.blogspot.com/2008/11/blog-post_08.html

உங்களின் சிந்தனைக்காக சில வசனங்கள்:

முஹம்த் (ஸல்) அவர்கள் முந்தைய வேதங்களைக் குறித்து அறிந்திருக்கவில்லை:
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (29:48)
நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர். (42:52)
மர்யம் (அலை) அவர்களைக் குறித்த செய்திகள் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3:44)
முந்தைய நபிமார்கள் மற்றும் சமுதாயங்கள் பற்றிய வரலாறு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது தான்!
(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). (11:49)
இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது). (28:46)
(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். (12:3)

ரோமாபுரியின் வெற்றி குறித்த குர்ஆனின் முன்னறிவிப்பும், முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அது நடந்தேறியமையும் அதற்கு சாட்சி வகித்தவர்களும் அவர்களுக்கு அருளப்பட்டது இறை வசனங்கள்தான் என்பதற்கான சான்றுகள்!

அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்வடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (30:1-6)

எகிப்தில் கண்டெடுக்கப்பட்டு கெய்ரோ அருங்காட்சியகத்தில் பாதுகாகக்கப்பட்டுள்ள ஃபிர்அவ்னின் உடல் குறித்து 1400 வருடங்களுக்கு முன்னரே குர்ஆன் கூறிய செய்தி அது இறைவேதம் என்பதை நிருபிக்கிறது. ஆனால் ஃபிர்அவ்னைப் பற்றிய செய்திகளைக் கூறும் பைபிளில் இச்செய்தி இல்லை. இதனை ஆய்வு செய்த பிரான்சு நாட்டு மருத்துவ ஆயராய்ச்சியாளர் டாக்டர் மோரிஸ் புகைல் இஸ்லாமைத் தழுவினார்!

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (என்று அவனிடம் கூறப்பட்டது). (10:92)

நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற பத்றுப் போரில் மிகக் குறைந்த போர்த் தளவாடங்களை உடைய 313 முஸ்லிம் வீரர்கள் தங்களை எதிர்த்துப் போரிட நிறைந்த ஆயத்தங்களுடன் வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிரிகளை வெற்றி கொண்டனர். இதைப் பற்றிய முன்னறிவிப்பு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும்போதே இறைவனால் வழங்கப்பட்டது!
அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். (54:44, 45)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்டார்கள். அதன் பிறகு பல கோத்திரங்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமைத் தழுவியது. இது குறித்த ஒன்றுக்கு மேற்பட்ட முன்னறிவிப்புகளை குர்ஆன் அறிவித்தது. எந்த மாற்றமும் இல்லாமல் அவை நடந்தேறியது குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனால் அருளப்பட்டதுதான் என்பதற்கான உறுதியான சான்று ஆகும்.
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (48:1)
"(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்" (28:85)

அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்;. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (3:111)
"நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும் (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்" (48:27)
குர்ஆன் நம்மைப் படைத்த அந்த அகில உலகங்களின் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன. சத்தியத்தை நடுநிலையுடன் ஆராய்ந்து உண்மையை ஏற்றுக் கொள்ள ஜாண் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.

அபூ அப்திர்ரஹ்மான்