கிறிஸ்தவம் பார்வையும் ஒரு கிறிஸ்தவனின் அழுகையும்!
உமர் மற்றும் உண்மை அடியான் என்ற பெயர்களில் நபிகளாரை விமர்சித்து வரும் கிறிஸ்தவரை நேரடி விவாதத்துக்கு அழைத்திருந்தனர் இணையப் பேரவை சகோதரர்கள். நேரடி விவாத்தைப் பயந்தவர்கள் எங்களுக்கு நேரடி விவாதமெல்லாம் சரிப்பட்டு வராது அதில் எங்களுக்குத் திறமை இல்லை, நாங்கள் எழுத்து விவாதத்துக்குத் தயார் என்று கூறியவர்கள் இப்போது நாங்கள் விவாதிக்க தயார் ஆனால் நீங்கள் கல்லெரிவீர்கள் என்ற புதிய புலம்பலுடன் ஒரு இடுகை இட்டுள்ளனர்.
இவர்கள் ஆதாரமில்லாமல் எழுதிய ஒவ்வொன்றுக்கும் இன்று முஸ்லிம்கள் பதில் எழுதி வருகிறார்கள். எதையேனும் எழுதினால் முஸ்லிம்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவர்களின் வயிற்றில் புளிளைக் கரைத்தது போல் இன்று பல சிந்தனையாளர்கயும் அறிவு ஜீவிகளும் இவர்களுக்கு பதிலளித்து வருகிறார்கள்.
பல தளங்களிலிருந்தும் தங்களுக்கு அடி விழுவதை சமாளிக்க முடியாமல் இப்போது புதிய கதை கூறி வருகின்றனர். நேரடி விவாதத்துக்கு சாக்குபோக்கு கூறி எழுத்து விவாதம் செய்கிறோம் என்று கூறியவர்கள் அதிலேனும் உண்மையாக இருக்கிறார்களா?
இஸ்லாம் கல்வி தளத்தில் வெளியான எம்.எம். அக்பர் அவர்களின் திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் மொத்தம் ஆறு தொடர்கள் வெளியாகி இருந்தன. அதில் பைபிளில் காணப்படும் முரண்பாடுகள், இறைகொள்கையில் உள்ள குழப்பங்கள், வராற்றுத் திரிபுகள், இறைதூதர்கள் மீதுள்ள இட்டுக் கட்டுதல்கள், முரண்பட்ட வரலாற்றுத் தகவல்கள், மற்றும் திருக்குர்ஆன் அதிலிருந்து எவ்வளவு வேறுபட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக ஆதாரத்துடன் விளக்கப்பட்டது. அதில் வைக்கப்பட்ட ஒவ்வொரு வாதங்களுக்கும் பதிலளித்தார்களா என்றால் இல்லை. ஏதோ சிலவற்றுக்கு மட்டும் பதில் எழுதியவர்கள் சம்மந்தமில்லாமல் உளறியது தான் மிச்சம். எங்கள் பைபிளில் தவறு இருந்தால் உங்கள் குர்ஆனிலும் தவறு உள்ளது என்று சிறுபிள்ளைத் தனமாக பதிலளித்ததுதான் மிச்சம்.
ஏகத்துவம் வலைப்பதிவாளர் கிறிஸ்தவம் தொடர்பாக எழுதிப் பதிவு செய்த கட்டுரைகளுக்கு தெளிவாக பதில் அளித்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. இன்னும் இதுதான் இஸ்லாம் சுவனப் பாதை போன்று அநேகம் தளங்களில் கிறிஸ்தவம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
முஹம்மது நபி (ஸல்) பைபிளை விமர்சித்தார்களாம்!
பைபிள் என்ற வார்த்தையே குர்ஆனில் இல்லை. மாறாக இறைவனால் இறக்கப்பட்ட வேதம் குர்ஆன். வேதத்தில் கையூடல் செய்த யூத கிறித்தவர்களை குர்ஆன் விமர்சிக்கவே செய்கிறது. தான் அருளிய வேதத்தை தங்கள் மன இச்சைக்கு ஏற்ப மாற்றியவர்களை விமர்சிப்பது அல்லாஹ்வின் அதிகாரம். குர்ஆன் இறைவேதம் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வருகிறோம். முந்தைய வேதங்களைத் தழுவி யூத கிறித்தவப் புரோகிதர்களால் எழுதப்பட்ட பைபிளில் அதில் காணப்படும் முரண்பாடுகளும் கட்டுக் கதைகளும், ஆபாசங்களும், அறிவுக்கு ஒவ்வாத கதைகளும், அறிவியலுக்கு முரண்பட்ட விஷயங்களும் குர்ஆனின் இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பதாக உள்ளது. உங்களிடம் உண்மை இருந்தால் அதற்கு மறுப்பு எழுதுங்களேன்.
முஸ்லிம் பெயரை ஏன் வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு முஸ்லிம் பெயர் வைத்தாலும் கிறித்தவனாகத் தான் அடையாளம் காட்டுகிறார்களாம். இது தான் அவல நிலை. பெயர் வைத்து விட்டீர்கள் மாற்றுவதற்கு மனமில்லை. உமர் என்ற பெயர்வைத்ததன் நோக்கம் என்ன? சற்று விளக்குவீர்களா? ஈஸா குர்ஆன் என்ற பெயருக்கு செப்டம்பர் 2007 அன்றே விளக்கம் அளித்தார்களாம். அந்த விளக்கத்துக்கு முரண்பட்டு சமீபத்தில் அனனானிமசுக்கு பதிலளித்ததை தந்திரமாக மறைத்து விட்டனர்.
கிறிஸ்தவம் பார்வை: கிறிஸ்தவம் பார்வை என்பது கிறிஸ்தவ பெயர் என்று கருதவில்லை. கிறிஸ்தவத்தின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டவே இப்படி பெயர் வைக்கப்பட்டுள்ளது. பைபிள் என்றோ, ஜேம்ஸ் என்றோ, ஜோசப் என்றோ கிறித்தவப் பெயர்களை நாங்கள் வைக்க மாட்டோம். அந்த அவல நிலை எங்களுக்கு இல்லை. அனானிமசுகள் முஸ்லிமா கிறித்தவரா என்பது யாருக்கும் தெரியாது. எனவே அனானிமசுகளை இங்கே இழுக்காதீர்கள்.
ஏன் லிங்க் கொடுப்பதில்லை?
உங்கள் விமர்சனங்களுக்கு நாங்கள் ஆதாரப் பூர்வமாக மறுப்பு அளித்து வருகிறோம். அவ்வாறு மறுப்பு எழுதும் போது எது சம்மந்தமாக நீங்கள் எழுதியுள்ளீர்களோ அதனை மேற்கோள் காட்டியும் வருகிறோம். உங்களைப் போன்று சம்மந்தமில்லாமல் தெளிவற்று உளறுவதில்லை. மட்டுமல்ல. இது அவசர உலகம் பக்கம் பக்கமாக படித்துக்கொண்டிருக்க யாரும் விரும்புவதில்லை. மேலும் லிங்க் கொடுக்கக் கூடிய அளவுக்கு தரம் வாய்ந்ததாக உங்கள் தளங்களை நாங்கள் கருதவில்லை. உங்களை நாங்கள் ஒரு பொருட்டாகவும் கருதவில்லை. எங்கள் கட்டுரைகளுக்கு ஆதாரப் பூர்வமாக மறுப்பு எழுதாமல் சம்மந்தமில்லாததையும் தெளிவற்ற விஷயங்களையும் எழுதும் உங்கள் பக்கங்களுக்கு நாங்கள் ஏன் லிங்க கொடுக்க வேண்டும்?
எது கோழைத்தனம்?
நேரடி விவாதத்துக்கு அழைத்த போது நீங்கள் என்ன காரணம் கூறினீர்கள்?
//1. நான் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது, வாரம் ஒரு நாள் எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை நான் என் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். எனவே, மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது.
2. மேடை விவாதத்தில் "முஸ்லீம்கள்" முன்வைக்கும் ஆதாரங்கள் உணமையா பொய்யா? என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. இதுவே எழுத்து விவாதமாக இருந்தால், எனக்கு அதிக நேரமிருக்கும் அந்த நேரத்தில் என்னால் சில விவரங்களை கண்டுபிடிக்கமுடியும்.
3. மேடை விவாதத்தில் விவாதிக்கும் அளவிற்கு பேச்சாற்றல் பெற்றவன் அல்ல நான். அவ்வளவு அறிவு கூட எனக்கு இல்லை. மேடை பேச்சுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். அது எனக்கு இல்லை. எனவே, எழுத்து வடிவ விவாதமே எனக்கு சரியானது.
4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? ", அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்" என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.
5. கடைசியாக இஸ்லாம் கிறிஸ்தவ விவாதம் என்பது ஒரு நாளில் பல மணிகள் மேடையில் பேசினால் தீர்ந்துவிடும் விசயம் இல்லை. இதற்கு பல ஆதாரங்களை முன்வைக்கவேண்டும், பல விவரங்களை, புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். மேடை விவாதத்தில் இதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது. //
எனக்கு திறமை இல்லை, பேச்சாற்றல் இல்லை, நான் அறிவற்றவன் என்றெல்லாம் கூறியவர் இப்பாது ஐயோ எனக்கு பயமாக உள்ளது என்று அழுகிறார்.
//நீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார்? ஆனால், உங்களை யார் நம்புவார்கள்? மேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா? உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது?//
இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்துக்கும் மத்தியில் பல்வேறு விவாதங்கள் நடந்துள்ளன. நடக்கின்றன. கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளன. யார் கல்லெரிந்தார்கள்? அஹ்மத் தீதாத், ஜாக்கிர் நாயக், எம். எம் அக்பர், ஜைனுல் ஆபிதீன் என பல்வேறு அறிஞர்கள் கிறித்தவ மிஷினரிகளிடம் பகிரங்க விவாதம் நடத்தியுள்ளனர். எந்த அசம்பாவிதமும் இதுவரை நடை பெறவில்லை. எனவே நீங்கள் அசம்பாவிதம் நடக்கும் என்று கூறி சாக்கு போக்கு கூறாதீர்கள். உங்கள் பாதுகாப்புக்குண்டான முழு உத்தரவாதத்தையும் தருகிறோம். எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று உறுதி கூறுகிறோம். இப்போது தயாரா?

4 comments:
விட்டு விட வேண்டாம்.
பதிவுகளுக்குப் பாராட்டுகள்!
pls don't leave them
Dear jameel and Ahmed. Thank u for your comments
அன்புடன் அபூ அப்திற்றஹ்மான்
உமர் என்று முஸ்லிம் பெயர் போட்டதின் ரகசியம் ஊர் அறிந்த விஷயம் ஆச்சே. முஸ்லிம் பெயர் போட்டால் தான் முஸ்லிம்களை படிக்க இழுக்க முடியும் என்ற ஒரே காரணத்திற்கு வேண்டி. அல்லாமல் கிருத்துவர்களுக்கு வேண்டி அல்ல!!! கிருத்துவர்கள் இப்பொழுது அவர்களது கோவிலுக்கு (சர்ச்) கு போவதே நிறுத்தி கொண்டு வருகிறார்கள்.அமெரிக்காவிலும், யூரோப்பாவிலும் (யூரோப்) ல் சர்ச் களை விற்கவும், இடமாற்றம் செய்யவும், சர்ச் களுக்கு வருவர்களுக்கு இன்ஸ்செண்டிவ் போனஸ் கொடுக்கவும் தொடங்கியாச்சு என்று கழிந்த காலத்தில் வந்த செய்திகளை பார்த்து இருப்பீர்களே! இப்படிப்பட்ட கிருத்துவர்கள் இப்பொழுது அவர்களது மதத்தின் மேல் பிடிப்பு இல்லாமல் இருக்கும்பொழுது,முஸ்லிம்களை இழுத்தாவது தன் வியாபாரத்தை பெருக்கத்தான் “உமர்” என்ற புனைபெயர். புனைபெயர் போட்டுக்கொள்ளட்டும் ஆனால் புனையாக கற்பனையாக லவ் ஸ்டோரி எழுதும் கதாசிரியர் மாதிரி ஆகி கொண்டு வருகிறார். அவரின் உண்மை முகத்தை வெளியில் கொண்டு வரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
வல்ல ஆண்டவன் உமக்கு உதவி செய்வானாக,
அன்புடன்
அசலம் ஒன்
பெஹ்ரேன்
அல்புர்கான் மாணவர்
Post a Comment